பராக்கிரம தினத்தையொட்டி நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

January 23rd, 08:30 am

பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளில் அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நேதாஜியின் அசைக்க முடியாத துணிவு, ஊசலாட்டம் இல்லாத உறுதி, நாட்டுக்கு ஒப்பற்ற பங்களிப்பு ஆகியவற்றை நினைவு கூர்ந்துள்ள அவர், நேதாஜியின் அச்சமற்ற தலைமைத்துவமும், ஆழமான தேசப்பக்தியும், வலுவான இந்தியாவை கட்டமைக்க தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் என்று கூறியுள்ளார்.

இந்திய டாக்டருடன் ஆப்கானிஸ்தான் தூதருக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து சுட்டுரையி்ல் பிரதமர் கருத்து

July 01st, 05:17 pm

இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் திரு பரித் மாமுண்ட்சே, சுட்டுரையில் தெரிவித்த தகவலுக்கு பிரதமர் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஹரிபுராவில் நாளை நடைபெறும் நிகழ்ச்சி நேதாஜி போஸ் தேசத்துக்கு ஆற்றிய பங்களிப்புக்கு மரியாதை செலுத்துவதாக இருக்கும்: பிரதமர்

January 22nd, 07:10 pm

பெருமைக்குரிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை ஒட்டி, நாளை இந்தியாவில் பராக்கிரம திவஸ் (#ParakramDivas) அனுசரிக்கப்படவுள்ளது. நாடு முழுக்க பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், குஜராத் மாநிலம் ஹரிபுராவில் ஒரு சிறப்பான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பிற்பகல் ஒரு மணிக்குத் தொடங்கும் அந்த நிகழ்ச்சியில் இணைந்திடுங்கள்'' என்று பிரதமர் திரு. மோடி இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இதுகுறித்து இன்னும் சில பதிவுகளையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.