India is now moving beyond energy security towards the mission of energy independence: PM Modi at the India Energy Week 2026

January 27th, 10:15 am

In his address at the inauguration of India Energy Week 2026, PM Modi remarked that today India is a land of immense opportunities for the energy sector. He said that the recently signed India-European Union agreement will bring immense opportunities for India and European nations. As India’s energy sector offer investment opportunities worth $500 billion, the PM called upon the global community with the message: Make in India, Innovate in India, Scale with India, Invest in India.

இந்திய எரிசக்தி வாரம் 2026-ன் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்

January 27th, 10:08 am

இந்திய எரிசக்தி வாரம் 2026-ன் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், எரிசக்தி வாரத்தின் இந்தப் புதிய பதிப்பில், சுமார் 125 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், கோவாவில் கூடியுள்ளதாகக் கூறினார். எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நீடித்த எதிர்காலம் குறித்து விவாதிக்க அவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதாகவும் பங்கேற்பாளர்கள் அனைவரையும் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

விசாகப்பட்டினத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பின் போது மீதமாகும் பொருட்களை மேம்படுத்தும் வசதி தொடங்கப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு

January 06th, 08:50 am

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்புப் பணியின் போது மீதமாகும் பொருட்களை மேம்படுத்துவதற்கான ஆலை தொடங்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டு தெரிவித்துள்ளார். இது எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் உறுதியான நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sri Guru Teg Bahadur Ji's life, sacrifice and character are a tremendous source of inspiration: PM Modi in Kurukshetra

November 25th, 04:40 pm

PM Modi addressed an event commemorating the 350th Shaheedi Diwas of Sri Guru Teg Bahadur Ji at Kurukshetra in Haryana. He remarked that Sri Guru Teg Bahadur Ji considered the defense of truth, justice, and faith as his dharma, and he upheld this dharma by sacrificing his life. On this historic occasion, the Government of India has had the privilege of dedicating a commemorative postage stamp and a special coin at the feet of Sri Guru Teg Bahadur Ji.

குருதேக் பகதூர்ஜியின் 350-வது தியாக தினம்: குருக்ஷேத்திரத்தில் பிரதமர் உரை

November 25th, 04:38 pm

சமீபத்தில் அயோத்தியில் தர்ம துவஜம் நிலைநாட்டப்பட்ட வேளையில், சீக்கிய சங்கத்திடமிருந்து ஆசிகளைப் பெறும் வாய்ப்பு கிடைத்ததாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். குருக்ஷேத்திரத்தின் புண்ணிய பூமியில் நீதியைக் காப்பதே தலையாய கடமை என்று ஸ்ரீ கிருஷ்ணர் போதித்ததை நினைவு கூர்ந்த அவர், குருதேக் பகதூர்ஜியும் உண்மை, நீதி மற்றும் நம்பிக்கையைக் காக்க தமது உயிரைத் தியாகம் செய்தார் எனக் கூறினார்.

குரு சரண் யாத்திரையில் இணையவும், புனிதமான 'ஜோர் சாஹிப்' தரிசனம் மேற்கொள்ளவும் மக்களை பிரதமர் வலியுறுத்துகிறார்

October 22nd, 06:41 pm

குரு சரண் யாத்திரையை முன்னிட்டு, ஸ்ரீ குரு கோவிந்த் சிங் மற்றும் அன்னை சாஹிப் கவுர் ஆகியோரின் காலத்தால் அழியாத போதனைகள் மற்றும் ஆன்மீக மாண்புகளைப் போற்றி, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

உஜ்வாலா திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு பிரதமர் வாழ்த்து

September 22nd, 03:46 pm

உஜ்வாலா திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம், இந்தப் புனிதமான பண்டிகை காலத்தில் மக்கள் மகிழ்ச்சியை அனுபவிப்பதுடன், பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான அரசின் உறுதிப்பாடு மேலும் வலுப்பெறும் என்று திரு மோடி கூறினார்.