'Vande Mataram' rekindled an idea deeply rooted in India for thousands of years: PM Modi in Lok Sabha

December 08th, 12:30 pm

During the special discussion on 150 years of Vande Mataram in the Lok Sabha, PM Modi said that the discussion serves as a source of education for future generations. He called upon all to move forward together to fulfil the dreams envisioned by the freedom fighters, making Vande Mataram at 150 the source of inspiration and energy for all. The PM reaffirmed the resolve to build a self-reliant nation and achieve the vision of a developed India by 2047.

தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டையொட்டி மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

December 08th, 12:00 pm

தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டையெட்டி மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு சங்கத்தின் தொடக்க விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

September 02nd, 01:00 pm

மக்கள் செல்வாக்குள்ள பீகார் முதலமைச்சர் திரு நிதீஷ் குமார் அவர்களே, துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சௌத்ரி அவர்களே, விஜய் குமார் அவர்களே, இதர விருந்தினர்களே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பீகாரைச் சேர்ந்த லட்சக்கணக்கான எனது சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் எனது மதிப்புமிகு வாழ்த்துகள்.

பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பை தொடங்கி வைத்தார்

September 02nd, 12:40 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பை இன்று காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்த புனிதமிக்க செவ்வாய்க்கிழமையில் உயர்ந்த நம்பிக்கைக்குரிய முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் பீகாரின் அன்னையர்கள் மற்றும் சகோதர, சகோதரிகளுக்கு புதிய வசதி அளிக்கப்படுவதாக அவர் அறிவித்தார். இந்த முன்முயற்சி, கிராமங்களில் வாழ்வாதார கடன் தொடர்புடைய பெண்கள் எளிதாக நிதி ஆதரவைப் பெற்று தங்களுடைய பணி மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த உதவிடும் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஜீவிகா வாழ்வாதார கடன் முறை முழுவதுமாக மின்னணு மயமாக்கப்பட்டுள்ளதாகவும், நேரடி வருகையை தவிர்த்து மொபைல் ஃபோன் வாயிலாக அனைத்தையும் தற்போது மேற்கொள்ள முடியும் என்று தமது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளதற்காக பீகார் மாநில அன்னையர்கள் மற்றும் சகோதரிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்த சிறப்பான முன்முயற்சிக்காக திரு நிதிஷ் குமாருக்கும், பீகார் அரசுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையின் சிறப்பம்சங்கள்

August 15th, 03:52 pm

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தில்லி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். செங்கோட்டையில் 103 நிமிடங்கள் நீடித்த திரு நரேந்திர மோடியின் உரை, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான ஒரு செயல் திட்டத்தை வழங்குவதாக அமைந்தது. மிக நீண்ட மற்றும் தீர்க்கமான உரையாகும். பிரதமரின் உரை, தன்னம்பிக்கை, புதுமை, மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. மற்றவர்களைச் சார்ந்திருக்கும் ஒரு தேசத்திலிருந்து உலகளவில் நம்பிக்கையான, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய, பொருளாதார ரீதியாக மீள்தன்மை கொண்ட நாடாக மாறும் இந்தியாவின் பயணத்தை எடுத்துக்காட்டுகிறது.

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 15th, 07:00 am

இந்த மாபெரும் சுதந்திர தின விழா நமது நாட்டு மக்களின் 140 கோடி தீர்மானங்களின் கொண்டாட்டமாகும். இந்த சுதந்திர தின விழா கூட்டு சாதனைகளின் தருணம், பெருமையின் தருணம். நமது இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளன. தேசம் தொடர்ந்து ஒற்றுமையின் உணர்வை வலுப்படுத்தி வருகிறது. இன்று, 140 கோடி இந்தியர்கள் மூவண்ணக் கொடியின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளனர். பாலைவனங்கள், இமயமலைச் சிகரங்கள், கடற்கரைகள், அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. எல்லா இடங்களிலும் ஒரே எதிரொலி, ஒரே ஆரவாரம். நம் தாய்நாட்டின் புகழ், உயிரை விட நமக்கு மிகவும் மேலானது.

டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற 79வது சுதந்திர தினத்தின் காட்சிகள்

August 15th, 06:45 am

79வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் மோடி தனது உரையில், அரசியலமைப்பு சபை, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 2047க்குள் ஒரு விக்ஸித் பாரதத்தை (வளர்ந்த இந்தியா) அடைவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய முயற்சிகளான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஸ்கர் யோஜனா, தேசிய விளையாட்டுக் கொள்கை மற்றும் சுதர்ஷன் சக்ரா மிஷன் ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார்.

இல்லந்தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்தில் சிறப்பான பங்களிப்பிற்காக பிரதமர் பாராட்டு

August 09th, 07:54 pm

இல்லந்தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்தில் சிறப்பாக மகத்தான பங்களிப்புக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது இந்திய மக்களை ஒருங்கிணைக்கும் ஆழமான தேசபக்தி மற்றும் மூவண்ணக் கொடி மீதான அவர்களுடைய அசைக்க முடியாத பெருமையை பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார். harghartiranga.com. தளத்தில் தொடர்ந்து தங்களுடைய புகைப்படங்களையும், சுய படங்களையும் பகிருமாறு அவர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

பிங்கலி வெங்கய்யா ஜியின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை

August 02nd, 02:55 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஸ்ரீ பிங்கலி வெங்கய்யா ஜியின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார், நமது பெருமைமிக்க மூவர்ணக் கொடியை நமக்கு வழங்கியதில் அவர் ஆற்றிய பங்கிற்காக நினைவுகூரப்படுகிறார். வீடு தோறும் மூவர்ணக்கொடி இயக்கத்தை வலுப்படுத்தவும், மூவர்ணக் கொடியை பறக்கவிடவும் மக்களை வலியுறுத்திய திரு மோடி, இந்த இயக்கத்தில் மூவர்ணக் கொடியுடன் தங்கள் செல்ஃபி அல்லது புகைப்படங்களைப் பதிவேற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The BJP-NDA government will fight the mafia-driven corruption in recruitment: PM Modi in Godda, Jharkhand

November 13th, 01:47 pm

Attending and addressing rally in Godda, Jharkhand, PM Modi expressed gratitude to the women of the state for their support. He criticized the local government for hijacking benefits meant for women, like housing and water supply. PM Modi assured that under the BJP-NDA government, every family in Jharkhand will get permanent homes, water, gas connections, and free electricity. He also promised solar panels for households, ensuring free power and compensation for any surplus electricity generated.

We ensured that government benefits directly reach beneficiaries without intermediaries: PM Modi in Sarath, Jharkhand

November 13th, 01:46 pm

PM Modi addressed a large gathering in Jharkhand's Sarath. He said, Today, the first phase of voting is happening in Jharkhand. The resolve to protect livelihood, daughters, and land is visible at every booth. There is strong support for the guarantees that the BJP has given for the future of women and youth. It is certain that the JMM-Congress will be wiped out in the Santhali region this time.

PM Modi engages lively audiences in Jharkhand’s Sarath & Godda

November 13th, 01:45 pm

PM Modi addressed a large gathering in Jharkhand's Sarath. He said, Today, the first phase of voting is happening in Jharkhand. The resolve to protect livelihood, daughters, and land is visible at every booth. There is strong support for the guarantees that the BJP has given for the future of women and youth. It is certain that the JMM-Congress will be wiped out in the Santhali region this time.

விண்வெளித் துறை சீர்திருத்தங்களால் தேசத்தின் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்: பிரதமர் மோடி 'மன் கீ பாத்' (மனதின் குரல்)

August 25th, 11:30 am

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இன்று மீண்டும் ஒருமுறை தேசத்தின் சாதனைகள், நாட்டுமக்களின் கூட்டு முயற்சிகள் ஆகியவை பற்றிய உரையாடல்களே. 21ஆம் நூற்றாண்டு பாரதத்திலே ஏராளமான விஷயங்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் அஸ்திவாரத்திற்கு உரம் சேர்த்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, இந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று, நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் நமது முதல் தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடினோம். நீங்களும் இதைக் கொண்டாடியிருப்பீர்கள். மீண்டும் ஒருமுறை சந்திரயான்–3இன் வெற்றியை நினைந்து களித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். கடந்த ஆண்டு இதே நாளில் தான் சந்திரயான்-3, நிலவின் தென்பாகத்தில், சிவசக்திப் புள்ளியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. பாரதம் இந்த கௌரவம் மிக்க சாதனையைப் படைத்த முதல் தேசமானது.

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார்

August 15th, 03:04 pm

பிரதமர் உரையின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

August 15th, 01:09 pm

நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்த தீரமிக்க எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், நாட்டின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கும் நாம் மரியாதை செலுத்தும் இன்றைய தினம் மிகவும் உன்னதமான தருணமாகும். இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடினார்கள், பாரத் மாதா கி ஜே என்ற முழுக்கத்துடனும், துணிச்சலுடனும் தூக்குமேடை ஏறினார்கள். இவர்களின் மனஉறுதியையும், தேச பக்தியையும் நினைவுகூர்வதற்கான விழாவாகும் இது. இந்த சுதந்திர தின விழாவில், நாம் சுதந்திரமாக சுவாசிக்கும் நல்ல தருணத்தை பெற்றிருப்பதற்கு வீரம் செறிந்த இவர்களே காரணமாவார்கள். இவர்களுக்கு நாடு மிகவும் கடன்பட்டுள்ளது. இத்தகைய மகத்தான ஆளுமைகள் ஒவ்வொருவருக்கும் நாம் மரியாதை செலுத்துவோம்.

இந்தியா 78வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது

August 15th, 07:30 am

78வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் மோடி தனது உரையில், இந்தியாவின் எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டினார். 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது முதல் மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை வென்றெடுப்பது வரை, இந்தியாவின் கூட்டு முன்னேற்றம் மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளிப்பதையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை புதிய வீரியத்துடன் தொடர்வதாக அவர் பேசினார். புதுமை, கல்வி மற்றும் உலகளாவிய தலைமைத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, 2047க்குள் இந்தியா விக்சித் (வளர்ந்த) பாரதமாக மாறுவதை எதுவும் தடுக்க முடியாது என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

வீடுகள்தோறும் மூவண்ணக்கொடி இயக்கம் 140 கோடி இந்தியர்கள் மூவண்ணக்கொடியின் மீது கொண்டுள்ள ஆழ்ந்த மரியாதையைக் காட்டுகிறது: பிரதமர் திரு நரேந்திர மோடி

August 14th, 09:10 pm

ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக்கொடி இயக்கம் குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக்கொடி இயக்கம் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளது என்றும், இது மூவண்ணக் கொடியின் மீது 140 கோடி இந்தியர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த மரியாதையைக் குறிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

அருணாச்சல பிரதேச மக்களின் தேசபக்தி, மாநிலத்தின் துடிப்பான கலாச்சாரப் பாரம்பரியத்தில் பிரதிபலிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி

August 13th, 05:15 pm

அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு காமெங்கில் உள்ள செப்பாவில் மேற்கொள்ளப்பட்ட வீடுகள் தோறும் தேசியக் கொடி (#HarGharTiranga) தொடர்பான ஊர்வலம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தின் துடிப்பான கலாச்சார பாரம்பரியத்தில் அம்மாநிலத்தின் தேசபக்தி தெளிவாக பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூரத்தில் நடைபெற்ற வீடுகள் தோறும் தேசியக் கொடி ஊர்வலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்

August 12th, 09:21 pm

வீடுகள் தோறும் தேசியக் கொடி ( #HarGharTiranga ) இயக்கத்தில் சூரத் மக்களின் உணர்வுப்பூர்வமான பங்கேற்பு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் மூவர்ணக் கொடி கொண்ட சுயவிவரப் படத்தை மாற்றுமாறு குடிமக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

August 09th, 09:01 am

சமூக ஊடக தளங்களில் மூவர்ணக் கொடியுடன் கூடிய தங்களது சுயவிவரப் படத்தை மாற்றுமாறு குடிமக்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு திரு மோடி தனது சுயவிவரப் படத்தை மூவர்ணக் கொடியாக மாற்றினார். ‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’ இயக்கத்தை மறக்கமுடியாத மக்கள் இயக்கமாக மாற்ற ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.