ஹால்வாரா விமான நிலையத்தில் முனையக் கட்டடத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்

February 01st, 07:18 pm

ஹால்வாரா விமான நிலையத்தில் முனையக் கட்டடத்தைத் திறந்து வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பஞ்சாப் மக்களுக்கு, குறிப்பாக லுதியானா மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது என்று கூறியுள்ளார். வடக்கு இந்தியாவை துடிப்புமிக்க தொழில்துறை மற்றும் வணிகமையமாக லுதியானா விளங்குகிறது என்றும், இந்த நகருக்கு விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த அரசு அயராது பாடுபட்டு வருகிறது என்றும், நவீன விமான நிலையத்திற்காக நடைபெறும் பணிகள் இதில் எதிரொலிக்கிறது என்றும் கூறியுள்ளார்.