கயானா அதிபருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
September 06th, 09:09 pm
கயானா நாட்டின் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற அதிபர் திரு இர்ஃபான் அலிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “வலிமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மக்களிடையேயான உறவுகளில் அடித்தளமிட்டிருக்கும் இந்தியா-கயானா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருக்கிறேன்”, என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.பீகார் மாநிலம் சிவானில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 20th, 01:00 pm
பீகார் ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான் அவர்களே, அர்ப்பணிப்புடன் செயல்படும் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் ஜிதன் ராம் மஞ்சி அவர்களே, கிரிராஜ் சிங் அவர்களே, லல்லன் சிங் அவர்களே, சிராக் பாஸ்வான் அவர்களே, ராம்நாத் தாக்கூர் அவர்களே, நித்யானந்த் ராய் அவர்களே, சதீஷ் சந்திர துபே அவர்களே, ராஜ்பூஷன் சௌத்ரி அவர்களே, பீகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி அவர்களே, பீகாரின் எனது அன்பான சகோதர சகோதரிகளே!பீகார் மாநிலம் சிவானில் ரூ. 5200 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்
June 20th, 12:00 pm
பீகார் மாநிலம் சிவானில் இன்று ரூ. 5200 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர், பாபா மகேந்திரநாத், பாபா ஹன்ஸ்நாத் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார். மா தாவே பவானி, மா அம்பிகா பவானி ஆகியோரையும் அவர் வணங்கினார். நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ராஜேந்திர பிரசாத், லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோரின் நினைவை பிரதமர் போற்றினார்.பராகுவே அதிபருடனான பிரதிநிதிகள் நிலையிலான பேச்சு வார்த்தைகளின் போது பிரதமரின் தொடக்க உரை
June 02nd, 03:00 pm
இந்தியாவிற்கு உங்களையும் உங்கள் குழுவினரையும் நாங்கள் மிகவும் அன்புடன் வரவேற்கிறோம். தென் அமெரிக்காவில் பராகுவே ஒரு முக்கியமான கூட்டாளியாகும். நமது புவியியல் வேறுபட்டிருக்கலாம், ஆனால் நாம் ஒரே மாதிரியான ஜனநாயக விழுமியங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். மேலும் மக்களின் நல்வாழ்வில் அக்கறை கொள்கிறோம்.மனதின் குரல் நிகழ்ச்சியின் 120-வது அத்தியாயத்தில், 30.03.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 30th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மிகவும் புனிதமான தினம், இன்றைய தினத்தன்று மனதின் குரலை ஒலிக்கச் செய்யும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருக்கிறது. இன்று சைத்ர மாத சுக்ல பக்ஷத்தின் பிரதிபதா திதியாகும். இன்றிலிருந்து சைத்ர நவராத்திரி தொடங்குகிறது. இன்றிலிருந்து பாரதிய நவவருஷமும் தொடங்குகிறது. இந்த முறை விக்ரம் சம்வந்த் 2082 தொடங்குகிறது. பிஹாரிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும், குஜராத்திலிருந்தும் என, இந்த வேளையிலே என் முன்பாக உங்களுடைய ஏராளமான கடிதங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிலே பல கடிதங்கள் சுவாரசியமான முறையிலே மக்களுக்குத் தங்களுடைய மனதின் குரலைப் பதிவு செய்கின்றன. பல கடிதங்களில் நல்வாழ்த்துக்களும் உண்டு, பாராட்டுச் செய்திகளும் உண்டு. ஆனால் இன்று சில செய்திகளை உங்களுக்கு ஒலிக்கச் செய்யவேண்டும் என்று என் மனம் ஆசைப்படுகிறது.We are not just the Mother of Democracy; democracy is an integral part of our lives: PM
January 09th, 10:15 am
PM Modi inaugurated the 18th Pravasi Bharatiya Divas convention in Bhubaneswar, Odisha. Expressing his heartfelt gratitude to the Indian diaspora and thanking them for giving him the opportunity to hold his head high with pride on the global stage, Shri Modi highlighted that over the past decade, he had met numerous world leaders, all of whom have praised the Indian diaspora for their social values and contributions to their respective societies.ஒடிசாவில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
January 09th, 10:00 am
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களை வரவேற்ற திரு மோடி, இந்த தொடக்க பாடல் எதிர்காலத்தில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இந்திய புலம் பெயர்ந்தோர் நிகழ்வுகளிலும் இசைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய புலம் பெயர்ந்தோரின் உணர்வுகளை வெளிப்படுத்திய அற்புதமான பாடலுக்காக கிராமி விருது பெற்ற கலைஞர் ரிக்கி கெஜ்-ஐயும், அவரது குழுவினரையும் அவர் பாராட்டினார்.இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 23rd, 09:24 pm
சில நாட்களுக்கு முன்பு, எனது சகாவும் மத்திய இணையமைச்சருமான ஜார்ஜ் குரியன் வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நான் கலந்து கொண்டேன். இன்று, உங்கள் அனைவர் மத்தியிலும் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பால் (சிபிசிஐ) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியில் உங்கள் அனைவருடனும் சேர ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த நாள் நம் அனைவருக்கும் மறக்க முடியாத நாளாக இருக்கப் போகிறது. இந்த ஆண்டு சிபிசிஐ நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைவதால் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த முக்கியமான தருணத்தில், சிபிசிஐ-க்கும் அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு ஏற்பாடு செய்துள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்பு
December 23rd, 09:11 pm
புதுதில்லியில் உள்ள சி.பி.சி.ஐ. மைய வளாகத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் நடைபெறும் இதுபோன்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். கர்தினால்கள், பிஷப்கள் மற்றும் திருச்சபையின் முக்கிய தலைவர்கள் உட்பட கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சிக்கு கயானா அதிபரின் ஆதரவுக்கு பிரதமர் நன்றி
November 25th, 10:39 am
தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சிக்கு ஆதரவு அளித்ததற்காக, கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். நேற்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில், கயானாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு திரு மோடி மீண்டும் பாராட்டு தெரிவித்துள்ளார்.ஒடிசா பர்பாவில் பிரதமர் ஆற்றிய உரை
November 24th, 08:48 pm
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள், திரு தர்மேந்திர பிரதான் அவர்களே, திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, ஒடியா சமாஜத்தின் தலைவர் திரு சித்தார்த் பிரதான் அவர்களே, ஒடியா சமாஜத்தின் இதர பிரதிநிதிகளே, ஒடிசாவைச் சேர்ந்த அனைத்து கலைஞர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே!'ஒடிசா பர்பா 2024' கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு
November 24th, 08:30 pm
புதுதில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 'ஒடிசா பர்பா 2024' கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒடிசாவின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்த ஆண்டு ஸ்வபவ் கவி கங்காதர் மெஹரின் நூற்றாண்டு நினைவு தினம் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பக்த தாசியா பவுரி, பக்த சாலபேகா மற்றும் ஒரிய பாகவத எழுத்தாளர் திரு. ஜகந்நாத் தாஸ் ஆகியோருக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார்.புலம்பெயர்ந்த இந்தியர்கள் வெவ்வேறு நாடுகளில் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர்: பிரதமர் மோடி 'மன் கீ பாத்'தின் போது (மனதின் குரல்)
November 24th, 11:30 am
'மன் கீ பாத்'-ன் (மனதின் குரல்) 116வது பதிப்பில், என்சிசி கேடட்களின் வளர்ச்சி மற்றும் பேரிடர் நிவாரணத்தில் அவர்களின் பங்கை எடுத்துரைத்து, என்சிசி தினத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி விவாதித்தார். அவர் வளர்ந்த இந்தியாவுக்கான இளைஞர் அதிகாரத்தை வலியுறுத்தினார் மற்றும் விக்சித் பாரத் (வளர்ந்த பாரதம்) இளம் தலைவர்கள் உரையாடல் பற்றி பேசினார். டிஜிட்டல் தளங்களில் செல்ல மூத்த குடிமக்களுக்கு இளைஞர்கள் உதவுவது மற்றும் 'ஏக் பேட் மா கே நாம்' (தாயின் பெயரில் ஒரு மரம்) பிரச்சாரத்தின் வெற்றி ஆகியவற்றையும் அவர் உற்சாகமூட்டும் கதைகள் மூலம் பகிர்ந்து கொண்டார்.கயானா நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
November 22nd, 05:31 am
கயானாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, கிரிக்கெட் இந்தியாவையும் கயானாவையும் நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது என்றும், கலாச்சார இணைப்புகளை ஆழப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.ஆரிய சமாஜ் நினைவுச் சின்னத்திற்கு பிரதமர் அஞ்சலி
November 22nd, 03:09 am
கயானாவின் ஜார்ஜ்டவுனில் உள்ள ஆர்ய சமாஜ் நினைவிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். கயானாவில் இந்திய கலாச்சாரத்தை பாதுகாப்பதில் அவர்களின் முயற்சிகள் மற்றும் பங்களிப்பு பாராட்டத்தக்கது என்று திரு மோடி கூறினார். இந்த ஆண்டு சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.கயானாவில் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் செழித்து வருகிறது: பிரதமர்
November 22nd, 03:06 am
இந்தியா-கயானா கலாச்சார இணைப்பை ஆழப்படுத்தும் சுவாமி ஆகாஷரானந்தா அவர்களின் பணிகளைப் பாராட்டிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்குச் சென்று, கயானாவில் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் செழித்து வளர்கிறது என்று குறிப்பிட்டார்.கயானாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை
November 22nd, 03:02 am
இன்று உங்கள் அனைவருடனும் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடன் இணைந்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் வந்ததிலிருந்து எனக்கு வழங்கப்பட்ட அன்பு மற்றும் பாசத்தால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். தமது இல்லத்தின் கதவுகளை எனக்காக திறந்து வைத்ததற்காக அதிபர் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினரின் அன்பு மற்றும் கருணைக்கு நான் நன்றி கூறுகிறேன். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அதை என்னால் உணர முடிந்தது. அதிபர் அலி மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து நாங்களும் ஒரு மரத்தை நட்டோம். இது தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற எங்கள் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். அது நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம் ஆகும்.கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர்
November 22nd, 03:00 am
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி, பிரதமர் மார்க் பிலிப்ஸ், துணை அதிபர் பரத் ஜக்தியோ, முன்னாள் அதிபர் டொனால்ட் ராமோதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு மோடி, அதிபருக்கு நன்றி தெரிவித்ததோடு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரின் அரவணைப்பு மற்றும் கருணைக்கு அவர் மேலும் நன்றி தெரிவித்தார். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது என்று திரு மோடி கூறினார். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக அதிபர் மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து மரம் ஒன்றை நட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். இது ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்றும், அதை அவர் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார் என்றும் அவர் கூறினார்.சுரினாம் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
November 21st, 10:57 pm
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நவம்பர் 20 அன்று நடைபெற்ற இந்திய-கேரிகாம் 2-வது உச்சிமாநாட்டின் இடையே, சுரினாம் அதிபர் மேதகு திரு. சந்திரிகாபெர்சாத் சந்தோக்கியை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.கிரெனடா பிரதமருடன் பிரதமர் திரு மோடி சந்திப்பு
November 21st, 10:44 pm
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நவம்பர் 20 அன்று நடைபெற்ற இந்திய-கேரிகாம் 2-வது உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் திரு. நரேந்திர மோடி.கிரெனடா பிரதமர் மேதகு திரு. டிக்கோன் மிட்செல்லை சந்தித்தார்.