2025 நார்வே சதுரங்கப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்த குகேஷுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
June 02nd, 08:23 pm
2025 நார்வே சதுரங்கப் போட்டியின் 6வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ததற்காக குகேஷுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். 2025 நார்வே சதுரங்கப் போட்டியின் 6வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான அவரது முதல் வெற்றி, அவரது திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. என்று திரு மோடி கூறினார்.செஸ் சாம்பியன் குகேஷ் பிரதமருடன் சந்திப்பு
December 28th, 06:34 pm
செஸ் சாம்பியன் குகேஷ் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அவரது உறுதிப்பாட்டையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிய திரு மோடி, அவரது நம்பிக்கை ஊக்கமளிப்பதாகக் கூறினார். இன்றைய உரையாடல் யோகா, தியானத்தின் மாற்றத்தை ஏற்படுத்தும் திறனைப் பற்றி இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் டி-க்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
December 12th, 07:35 pm
இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் டி -க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது சாதனை என்றும் அவர் பாராட்டியுள்ளார்.