காந்தி நகரில் குஜராத் நகர வளர்ச்சிக் கதையின் 20 ஆண்டுகள் கொண்டாட்டத்தின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
May 27th, 11:30 am
குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் அவர்களே, முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் பட்டேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான மனோகர்லால் அவர்களே, சி ஆர் பாட்டீல் அவர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, குஜராத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இங்கு வந்துள்ள எனதருமை சகோதர, சகோதரிகளே!குஜராத் நகர்ப்புற வளர்ச்சிக் கதையின் 20 ஆண்டுக் கால கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
May 27th, 11:09 am
குஜராத்தின் காந்திநகரில் இன்று நடைபெற்ற குஜராத் நகர்ப்புற வளர்ச்சிக் கதையின் 20 ஆண்டு கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வின் போது, 2005-ம் ஆண்டின் நகர்ப்புற வளர்ச்சியின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், 2025-ம் ஆண்டை நகர்ப்புற வளர்ச்சி ஆண்டாக அவர் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், வதோதரா, தாஹோத், பூஜ், அகமதாபாத், காந்திநகர் ஆகிய இடங்களுக்கு கடந்த 2 நாட்களில் பயணம் செய்தபோது, ஆபரேஷன் சிந்தூர் வெற்றியின் முழக்கத்துடனும், பறக்கும் மூவர்ணக் கொடிகளுடனும் தேசபக்தியின் உற்சாகத்தை தாம் அனுபவித்து வருவதாகக் கூறினார். இது காண்பதற்கு ஒரு காட்சி என்றும், இந்த உணர்வு குஜராத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இருப்பதாகவும் அவர் கூறினார். பயங்கரவாதத்தின் முள்ளை அகற்ற இந்தியா முடிவு செய்தது, அதை மிகுந்த உறுதியுடன் செய்தது என்று பிரதமர் கூறினார்.பிரதமர், மே 26, 27 ஆகிய தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்
May 25th, 09:14 am
பிரதமர் திரு நரேந்திர மோடி மே 26, 27 ஆகிய தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். அவர் தாஹோத் நகருக்குச் சென்று காலை 11:15 மணியளவில், ரயில் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். மின்சார ரயில் என்ஜின் ஒன்றையும் கொடியசைத்துத் தொடங்கிவைப்பார். பின்னர், தாஹோதில் சுமார் ரூ.24,000 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். பிரதமர் பொது நிகழ்ச்சியிலும் உரையாற்றுவார்.