Prime Minister congratulates Indian Women’s Cricket Team on winning Asia Cup
September 14th, 08:45 am
The Prime Minister, Shri Narendra Modi, has congratulated the Indian Women’s Cricket Team on winning the Asia Cup.ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து
September 13th, 08:41 pm
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 4-1 என்ற கணக்கில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்து கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசியக் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்ட இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து.
September 13th, 08:38 pm
சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆசியக் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்ட இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்-ன் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
September 12th, 11:58 pm
ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்-ன் பர்காஷ் பூரப் எனும் புனிதமான நன்னாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.ரோஷ் ஹஷானா பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாகுவுக்கும் உலகெங்கிலும் உள்ள யூதர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
September 12th, 02:31 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ரோஷ் ஹஷானா எனப்படும் யூதப் புத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேல் மக்கள், உலகெங்கிலும் உள்ள யூதர்கள் ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையைப் பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்
September 11th, 09:04 am
1893 செப்டம்பர் 11 அன்று சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.இத்தாலியில், போருக்குப் பின் வரலாற்றில் மிக நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராகப் பதவி வகிக்கும் ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
September 04th, 01:07 pm
இத்தாலியில் போருக்குப் பிந்தைய வரலாற்றில், மிக நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றதற்காக, இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.09.2026) வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜென்மாஷ்டமி பண்டிகையையொட்டி முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து
September 04th, 10:31 am
ஜென்மாஷ்டமி நன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து
August 29th, 10:34 am
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, விளையாட்டு ஆர்வலர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம், மன உறுதி ஆகியவை ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
August 28th, 12:10 pm
ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்தப் புனிதமான பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சி, வளம், வெற்றியை அளிக்க வேண்டுமென்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.உலக சமஸ்கிருதத் தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து
August 28th, 12:06 pm
ஷ்ராவண பூர்ணிமா தினத்தில் கொண்டாடப்படும் உலக சமஸ்கிருதத் தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஞானம், சிந்தனை, படைப்பாற்றலின் தொடர்ச்சியான ஊடகமாகத் திகழும் சமஸ்கிருத மொழியின் காலத்தால் அழியாத வளமையைக் கொண்டாடுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சிறப்பான நன்னாளில், இந்தியா, உலகம் முழுவதிலுமுள்ள சமஸ்கிருத மொழியை கற்றுக்கொள்பவர்கள், கற்பிப்பவர்களுடன் இந்த மொழியிலுள்ள காலத்தால் அழியாத மாண்புகளை எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்வதற்காக பாடுபடும் அனைவரையும் பாராட்டுவதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.மிலாதுன் நபியையொட்டி பிரதமர் வாழ்த்து
August 26th, 10:01 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, மிலாதுன் நபி பெருநாளில் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.ஓணம் பண்டிகையையொட்டி பிரதமர் வாழ்த்து
August 26th, 09:58 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஓணம் பண்டிகையையொட்டி அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஓணம், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஒரு உயிரோட்டமான பண்டிகை என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இப்பண்டிகை, சமூகத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, செழிப்பு ஆகிய உணர்வுகளை மேலும் வலுப்படுத்த பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.தேசிய விண்வெளி தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து
August 23rd, 10:50 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, தேசிய விண்வெளி தினத்தையொட்டித் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் நன்றி
August 15th, 05:48 pm
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி உலகத் தலைவர்கள் தெரிவித்த அன்பான வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலுமிருந்து பெறப்பட்ட வாழ்த்துச் செய்திகளுக்கு தமது ஆழ்ந்த மகிழ்ச்சியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.பார்சி புத்தாண்டின் தொடக்கத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
August 15th, 10:16 am
பார்சி புத்தாண்டின் தொடக்கத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பல்வேறு துறைகளில் பார்சி சமூகத்தினரின் சிறப்பான பங்களிப்பு, நமது நாட்டை எண்ணற்ற வழிகளில் வளப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
August 07th, 11:14 am
தேசிய கைத்தறித் தினத்தை முன்னிட்டு, நாட்டின் வளமான மற்றும் சிறப்பான கைத்தறிப் பாரம்பரியத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் காலத்தால் அழியாத தொன்மையான பாரம்பரியத்தைத் தங்களின் இணையற்ற கைவினைத்திறனால் தலைமுறைகள் கடந்தும் பாதுகாத்து வளப்படுத்தி வரும் நெசவாளர்கள், கைவினைஞர்களின் திறமை, படைப்பாற்றல், அர்ப்பணிப்பு உணர்விற்குப் பிரதமர் தமது மரியாதையைச் செலுத்தியுள்ளார்.காமன்வெல்த் விளையாட்டு 2026-ல் இந்தியக் குழுவினரின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் பெருமிதம்
August 03rd, 09:55 am
கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு 2026 போட்டிகளில் இந்தியக் குழுவினரின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் மகளிர் 63 கிலோ ஜூடோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற உன்னதி ஷர்மாவுக்கு பிரதமர் வாழ்த்து
August 02nd, 12:07 pm
2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் 63 கிலோ ஜூடோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற உன்னதி ஷர்மாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் ஆடவர் 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற குல்வீர் சிங்குக்கு பிரதமர் வாழ்த்து
August 02nd, 12:03 pm
கிளாஸ்கோவில் 2026-ல் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 5000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற குல்வீர் சிங்குக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.