இந்தியா-சிங்கப்பூர் கூட்டறிக்கை

September 04th, 08:04 pm

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்த சிங்கப்பூர் பிரதமர் மாண்புமிகு திரு லாரன்ஸ் வோங்-ன் பயணத்தின் போது, இந்தியா மற்றும் சிங்கப்பூரிடையே விரிவான உத்திசார் கூட்டண்மைக்கான செயல்திட்டம் குறித்த கூட்டறிக்கை

சிங்கப்பூர் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் கூறிய கருத்துக்களின் தமிழாக்கம்

September 04th, 12:45 pm

சிங்கப்பூர் பிரதமராக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு தமது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள அந்நாட்டு பிரதமர் வோங்கை வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு நமது தூதரக உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 2025 தொடங்குவதையொட்டி பிரதமரின் உரை

July 21st, 10:30 am

மழைக்காலம் என்பது புத்துணர்ச்சி மற்றும் படைப்பாக்கத்தின் அடையாளமாகும். இதுவரை கிடைத்த தகவலின்படி, இக்காலம் வேளாண்மைக்கு பயனளிக்கக் கூடியது என்ற செய்தியுடன் நாடு முழுவதும் வானிலை சாதகமாக உள்ளது. நமது விவசாயிகளின் பொருளாதாரத்தில் மழை முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், தேசிய பொருளாதாரம், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் ஒவ்வொரு வீட்டின் பொருளாதாரத்திலும் பங்கு வகிக்கிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்கத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

July 21st, 09:54 am

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்கத்தில் பிரதமர் மோடி ஊடகங்களைச் சந்தித்தார். தனது கருத்துக்களில், கொடூரமான பஹல்காம் படுகொலையைத் தொட்டு, பாகிஸ்தானின் பங்கை அம்பலப்படுத்துவதில் இந்தியாவின் அரசியல் தலைமையின் ஒருங்கிணைந்த குரலைப் பாராட்டினார். டிஜிட்டல் இந்தியாவின் உலகளாவிய அங்கீகாரத்தையும், குறிப்பாக UPI-ஐயும் பிரதமர் குறிப்பிட்டார். நக்சலிசம் மற்றும் மாவோயிசம் குறைந்து வருவதாக அவர் உறுதிப்படுத்தினார், மேலும் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியையும் பாராட்டினார்.

குவஹாத்தியில் நடைபெற்ற அசாம் அனுகூலம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாடு 2025 (அட்வான்ட்டேஜ் அசாம் 2.0)தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

February 25th, 11:10 am

கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் இன்று ஒரு புதிய எதிர்காலத்தில் அடியெடுத்து வைக்க உள்ளன. அசாம் அனுகூலம் என்பது உலகம் முழுவதையும் அசாமின் திறன் மற்றும் முன்னேற்றத்துடன் இணைக்கும் மாபெரும் முயற்சியாகும். கடந்த காலங்களில் பாரதத்தின் வளத்தில் கிழக்கு இந்தியா குறிப்பிடத்தக்க பங்கை வகித்துள்ளது என்பதற்கு வரலாறு சாட்சியமாக உள்ளது. தற்போது, பாரதம் வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கி நகர்ந்து செல்லும் நிலையில், கிழக்கு இந்தியாவும், நமது வடகிழக்கு இந்தியாவும் மீண்டும் ஒருமுறை தங்கள் வலிமையை வெளிப்படுத்தத் தயாராக உள்ளன. இந்த உணர்வின் பிரதிபலிப்பாகவே அசாம் அனுகூலத்தை நான் காண்கிறேன். இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அசாம் அரசுக்கும், ஹிமந்தா அவர்களின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2013-ல் தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் அசாம் சென்றிருந்தபோது, ஒரு கூட்டத்தில் தன்னிச்சையாக ஒரு விஷயத்தைச் சொன்னேன் – அது எழுத்துக்களைக் கற்றுக் கொள்ளும்போது, மக்கள் அ என்றால் அசாம் என்று சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதாகும்.

அசாம் அனுகூலம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாடு 2025-ஐ(அட்வான்ட்டேஜ் அசாம் 2.0)பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

February 25th, 10:45 am

அசாம் மாநிலம் குவஹாத்தியில் அசாம் அனுகூலம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து பிரமுகர்களையும் வரவேற்ற திரு மோடி, கிழக்கு இந்தியாவும், வடகிழக்கு இந்தியாவும் இன்று எதிர்காலத்திற்கான ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகின்றன என்று கூறினார். அசாமின் சிறப்பான திறன் மற்றும் முன்னேற்றத்தை உலக நாடுகளுடன் இணைக்கும் மாபெரும் முன்முயற்சியாக அசாம் அனுகூலம் உள்ளது என்று கூறினார். இந்தியாவின் வளத்தில் கிழக்கு இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது என்றும் அவர் கூறினார். தற்போது நாம் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி முன்னேறிச் செல்லும் போது, கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் தங்களது உண்மையான திறனை வெளிப்படுத்தும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். அசாம் அனுகூலம் அமைப்பும் இதே உணர்வின் பிரதிநிதி என்று கூறிய அவர், இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக அசாம் அரசுக்கும், முதலமைச்சருக்கும் பாராட்டு தெரிவித்தார். 2013-ம் ஆண்டு அகரவரிசையில் அ என்றால் அசாம் என்று சொல்லிக்கொடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று தான் கூறியிருந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025 தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

February 24th, 10:35 am

நான் இங்கு வரத் தாமதமானதற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தாமதம் ஏற்பட்டது ஏனென்றால் நான் நேற்று இங்கு வந்தபோது, இன்று, 10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இருப்பதை உணர்ந்தேன். நான் ஆளுநர் மாளிகையை விட்டு புறப்படும் நேரமும் அவர்களின் தேர்வுகள் நடக்கும் நேரமும் ஒன்றாக இருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக சாலைகள் மூடப்பட்டால், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அனைத்து மாணவர்களும் தேர்வு மையங்களுக்கு வந்துவிட்டார்களா என்பதை உறுதி செய்த பின்னரே ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்பட முடிவு செய்தேன். எனவே, நான் வேண்டுமென்றே எனது புறப்பாட்டை 15-20 நிமிடங்கள் தாமதப்படுத்தினேன். இது உங்கள் அனைவருக்கும் சிரமங்களை ஏற்படுத்தியிருக்கும். எனவே, உங்கள் அனைவரிடமும் மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு-2025 ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

February 24th, 10:30 am

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் உரையாற்றிய அவர், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டிற்கு வரும் வழியில் தனது பாதுகாப்பு நடவடிக்கைகள் மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மாநாட்டில் கலந்து கொள்வதில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு மன்னிப்பு கோரினார். ராஜா போஜ் பூமியில் முதலீட்டாளர்களையும், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களையும் வரவேற்பதில் பெருமை கொள்வதாக திரு மோடி கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை எட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் வளர்ச்சி அடைந்த மத்தியப் பிரதேச மாநிலம் குறிப்பிடத்தக்க பங்குவகிக்கும் என்பதால் இன்றைய மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார். இந்த உச்சிமாநாட்டை அற்புதமாக ஏற்பாடு செய்ததற்காக மத்தியப் பிரதேச மாநில அரசிற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

A New Era for India’s Middle Class: How Policy Reforms Are Reshaping Aspirations and Opportunities

February 08th, 05:48 pm

India’s middle class, long hailed as the backbone of the nation’s economic aspirations, is witnessing a transformative phase. Over the past decade, targeted policy interventions across taxation, healthcare, education, and infrastructure have not only alleviated financial burdens but also unlocked unprecedented opportunities. As the architect of India’s $10 trillion economy vision, this demographic is now poised to drive innovation, consumption, and equitable growth. Let’s explore how systemic reforms are rewriting their future.

Delhi needs a government that works in coordination, not one that thrives on conflicts: PM Modi

January 31st, 03:35 pm

Addressing the huge rally in New Delhi’s Dwarka, PM Modi said, “Delhi needs a double-engine government at both the Centre and the state. You gave Congress years to govern, then the AAP-da took over Delhi. Now, give me the chance to serve Delhi with a double-engine government. I guarantee you that the BJP will leave no stone unturned in Delhi’s development. If this AAP-da continues, Delhi will keep falling behind in development. Delhi needs a government that believes in coordination, not confrontation.”

PM Modi electrifies New Delhi’s Dwarka Rally with a High-Octane speech

January 31st, 03:30 pm

Addressing the huge rally in New Delhi’s Dwarka, PM Modi said, “Delhi needs a double-engine government at both the Centre and the state. You gave Congress years to govern, then the AAP-da took over Delhi. Now, give me the chance to serve Delhi with a double-engine government. I guarantee you that the BJP will leave no stone unturned in Delhi’s development. If this AAP-da continues, Delhi will keep falling behind in development. Delhi needs a government that believes in coordination, not confrontation.”

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2025-ல் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

January 12th, 02:15 pm

மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான திருவாளர்கள் மன்சுக் மாண்டவியா அவர்களே, தர்மேந்திர பிரதான் அவர்களே, ஜெயந்த் சவுத்ரி அவர்களே, ரக்ஷா காட்ஸே அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் வந்துள்ள எனது இளம் நண்பர்களே! இந்த பாரத் மண்டபம் இந்திய இளைஞர்களின் ஆற்றலாலும், சக்தியாலும் நிரம்பியுள்ளது. இன்று நாடு முழுவதும் சுவாமி விவேகானந்தரை நினைவுகூர்கிறது. அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறது. சுவாமி விவேகானந்தர் நாட்டின் இளைஞர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இளைய தலைமுறையினர் மீது, புதிய தலைமுறையினர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று சுவாமி விவேகானந்தர் அடிக்கடி கூறுவார். எனது தொண்டர்கள் சிங்கங்களைப் போல், இளம் தலைமுறையிலிருந்து வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு காண்பார்கள் என்று அவர் கூறுவார். விவேகானந்தர் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தது போலவே, விவேகானந்தர் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் சொன்ன எல்லாவற்றிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்திய இளைஞர்களுக்காக அவர் என்ன நினைத்தாரோ, என்ன சொன்னாரோ அதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உண்டு. உண்மையில், சுவாமி விவேகானந்தர் இன்று நம்மிடையே இருந்திருந்தால், 21-ம் நூற்றாண்டு இளைஞர்களின் விழிப்புணர்வு பெற்ற சக்தியைக் கண்டு, உங்களின் தீவிர முயற்சிகளைப் பார்த்து, பாரதத்தின் புதிய நம்பிக்கை, புதிய சக்தி ஆகியவற்றால் அவர் பூரிப்படைந்திருப்பார். புதிய கனவுகளுக்கான விதைகளை விதைத்திருப்பார்.

வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்

January 12th, 02:00 pm

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து 3,000 துடிப்பான இளம் தலைவர்களுடன் அவர் உரையாடலில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இந்திய இளைஞர்களின் துடிப்பான சக்தி, பாரத் மண்டபத்திற்கு உயிர்ப்பையும் சக்தியையும் கொண்டு வந்திருப்பதை எடுத்துரைத்தார். நாட்டின் இளைஞர்கள் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்திருந்த சுவாமி விவேகானந்தரை ஒட்டுமொத்த தேசமும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். தமது சீடர்கள் இளைய தலைமுறையிலிருந்து வருவார்கள் என்றும், அவர்கள் சிங்கங்களைப் போல ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்ப்பார்கள் என்றும் சுவாமி விவேகானந்தர் நம்பினார் என்றும் அவர் கூறினார். சுவாமிஜி இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்ததைப் போல, சுவாமிஜி மீதும், அவரது நம்பிக்கைகள் மீதும் தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக அவர் மேலும் கூறினார். குறிப்பாக இளமை குறித்த அவரது பார்வை குறித்து அவரை முழுமையாக நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார். சுவாமி விவேகானந்தர் இன்று நம்மிடையே இருந்தால், 21-ம் நூற்றாண்டின் இளைஞர்களின் விழிப்புற்ற சக்தியையும் துடிப்பான முயற்சிகளையும் காணும் போது அவர் புதிய நம்பிக்கையால் மகிழ்வார் என்று பிரதமர் கூறினார்.

ராஜஸ்தானில் டிசம்பர் 17 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

December 16th, 03:19 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி டிசம்பர் 17 அன்று ராஜஸ்தானில் பயணம் மேற்கொள்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘ஓர் ஆண்டு- சிறந்த வளர்ச்சி’ என்ற ராஜஸ்தான் மாநில அரசின் ஓர் ஆண்டை நிறைவு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் எரிசக்தி, சாலை, ரயில்வே மற்றும் குடிநீர் துறை தொடர்பான ரூ.46,300 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார்.

பஹாமாஸ் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

November 21st, 09:25 am

2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டின் இடையே, பஹாமாஸ் பிரதமர் திரு பிலிப் டேவிஸை பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 20 அன்று சந்தித்தார். இரு பிரதமர்களும் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும்.

முடிவுகளின் விபரம்: அரசுகளுக்கிடையிலான 7-வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜெர்மனி பிரதமரின் இந்திய வருகை

October 25th, 07:47 pm

புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய செயல்திட்டம்

ஜெர்மனி பிரதமருடன் இணைந்து நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 25th, 01:50 pm

முதலாவதாக, இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸையும் அவரது தூதுக்குழுவினரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்தியா வந்துள்ள உங்களை வரவேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் துவக்க நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 23rd, 05:22 pm

பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ள அனைத்து புதிய நண்பர்களையும் மீண்டும் ஒருமுறை அன்புடன் வரவேற்கிறேன். உலக மனிதகுலத்தில் 40 சதவீதத்தையும், உலகப் பொருளாதாரத்தில் 30 சதவீதத்தையும் பிரிக்ஸ் அமைப்பு தனது புதிய வடிவத்தில் கொண்டுள்ளது.

3-வது கவுடில்யா பொருளாதார மாநாடு 2024-ல் பிரதமர் ஆற்றிய உரை

October 04th, 07:45 pm

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே, பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் என்.கே.சிங் அவர்களே, இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள இதர சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே! இது கௌடில்யர் மாநாட்டின் மூன்றாவது பதிப்பாகும். உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த மூன்று நாட்களில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் பல அமர்வுகள் இங்கு நடைபெறும். இந்த விவாதங்கள் இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்த உதவும் என்று நான் நம்புகிறேன்.

புதுதில்லியில் நடைபெற்ற மூன்றாவது கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

October 04th, 07:44 pm

புதுதில்லியில் இன்று (04.10.2024) நடைபெற்ற கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். நிதி அமைச்சகத்துடன் இணைந்து பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌடில்யா பொருளாதார மாநாடு, பசுமை மாற்றத்திற்கு நிதியளித்தல், புவி-பொருளாதார பாதிப்பு, வளர்ச்சிக்கான தாக்கங்கள், பின்னடைவைத் தவிர்ப்பதற்கான கொள்கைகள் போன்ற கருப்பொருள்களில் கவனம் செலுத்தியது.