Together, with everyone’s efforts, we will build a Viksit Bharat and a Viksit Uttar Pradesh: PM Modi in Greater Noida
September 25th, 10:22 am
In his address while inaugurating the Uttar Pradesh International Trade Show 2025, PM Modi emphasized that Antyodaya means ensuring development reaches even the poorest. Underscoring the principle of “Platforms for All, Progress for All”, the PM remarked that the impact of platforms is visible across India. He noted that UP ranks first in heritage tourism, highlighting that investing in India and particularly in UP is a win-win situation.உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்து உரையாற்றினார்
September 25th, 10:00 am
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தக் கண்காட்சியில் பங்கேற்க வந்துள்ள அனைத்து வியாபாரிகள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள், இளம் தலைமுறையினர் ஆகியோரை வரவேற்பதாக பிரதமர் கூறினார். இந்தக் கண்காட்சியில் 2,200-க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் தங்களது தயாரிப்புகளையும், சேவைகளையும் காட்சிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார். இந்தக் கண்காட்சியில் ரஷ்யா பங்கேற்றுள்ளது இரு நாடுகளிடையேயான வலுவான நட்புறவை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள அம்மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அரசு அதிகாரிகள் மற்றும் இதர தரப்பினருக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழிகாட்டியாக திகழ்ந்த பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்த ஆண்டையொட்டி இந்தக் கண்காட்சி அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 25 அன்று உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார்
September 24th, 06:25 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 25 அன்று உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். கிரேட்டர் நொய்டாவில் செப்டம்பர் 25 காலை 9.30 மணியளவில் உத்தரப்பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-ஐ அவர் தொடங்கிவைப்பார். அங்கு திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற செமிகான் இந்தியா 2024-ல் இந்தியாவையும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையையும் முன்னணி செமிகண்டக்டர் தலைமை நிர்வாக அதிகாரிகள் பாராட்டினர்
September 11th, 04:28 pm
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று செமிகான் இந்தியா 2024-ஐ தொடங்கி வைத்தார். செமிகான் இந்தியா 2024 செப்டம்பர் 11 முதல் 13 வரை 'குறைகடத்தி எதிர்காலத்தை வடிவமைத்தல்' என்ற கருப்பொருளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று நாள் மாநாடு இந்தியாவின் குறைகடத்தி உத்திகளையும் கொள்கையையும் வெளிப்படுத்துகிறது. இது இந்தியாவை குறைகடத்திகளுக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகளாவிய செமிகண்டக்டர் ஜாம்பவான்களின் உயர்நிலைத் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இது உலகளாவிய தலைவர்கள், நிறுவனங்கள் மற்றும் குறைகடத்தி துறையைச் சேர்ந்த நிபுணர்களை ஒன்றிணைக்கும். இந்த மாநாட்டில் 250-க்கும் அதிகமான கண்காட்சியாளர்களும், 150-க்கும் அதிகமான பேச்சாளர்களும் பங்கேற்கின்றனர்.செமிகான் இந்தியா 2024-ஐ செப்டம்பர் 11 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
September 09th, 08:08 pm
உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் செமிகான் இந்தியா 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 11, 2024 அன்று காலை 10:30 மணியளவில் தொடங்கி வைப்பார். இந்த நிகழ்ச்சியில் திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.