தேசிய கூட்டுறவு மேம்பாடு கழகத்திற்கு உதவிடும் வகையில் 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
July 31st, 03:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 2025-26-ம் ஆண்டு முதல் 2028-29-ம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளுக்கு ரூ.2000 கோடி செலவில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மத்திய அரசின் துறைசார்ந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. (நிதியாண்டு 2025-26 முதல் ஆண்டுதோறும் ரூ.500 கோடி).