வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் காணொலி மூலம் ஆற்றிய உரை
May 29th, 06:45 pm
இன்று, ஜெகநாதரின் ஆசியுடன், நாட்டின் விவசாயிகளுக்காக ஒரு பெரிய இயக்கம் தொடங்கப்படுகிறது. வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் என்பது ஒரு தனித்துவமான முயற்சியாகும். பருவமழை நெருங்கி வருகிறது, காரீஃப் பருவத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அடுத்த 12 முதல் 15 நாட்களில், விஞ்ஞானிகள், நிபுணர்கள், அதிகாரிகள் மற்றும் முற்போக்கான விவசாயிகள் அடங்கிய 2,000க்கும் மேற்பட்ட குழுக்கள் நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்குச் செல்ல உள்ளன. இந்தக் குழுக்கள் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளைச் சந்திக்க உள்ளனர். இந்தப் பிரமாண்டமான இயக்கம், இந்த லட்சியத் திட்டம் மற்றும் இந்திய விவசாயத்தின் அடித்தளமாக பிரகாசமான எதிர்காலம் ஆகியவற்றுக்காக நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும், இந்தக் குழுக்களின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதமர் திரு. நரேந்திர மோடி வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றினார்
May 29th, 06:44 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்க நிகழ்ச்சியில் உரையாற்றினார். இந்த இயக்கம் தொடங்கப்பட்டிருப்பது, விவசாயிகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி என்றும், வேளாண் வளர்ச்சியை ஆதரிப்பதற்கான ஒரு தனித்துவமான முயற்சி என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார். பருவமழை நெருங்கி, வருவதுடன் காரீஃப் பருவத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கும் வேளையில், அடுத்த 12 முதல் 15 நாட்களில், விஞ்ஞானிகள், நிபுணர்கள், அதிகாரிகள் மற்றும் முற்போக்கான விவசாயிகள் அடங்கிய 2000 குழுக்கள் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்குப் பயணம் செய்து கிராமங்கள் முழுவதும் லட்சக் கணக்கான விவசாயிகளைச் சென்றடையும் என்று பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவின் விவசாயத் துறையை வலுப்படுத்துவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டி, அனைத்து விவசாயிகளுக்கும், இந்தக் குழுக்களின் பங்கேற்பாளர்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.ஹரியானா மாநிலம் யமுனா நகரில் வளர்ச்சித் திட்டங்களுக்கான தொடக்க மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரின் உரை
April 14th, 12:00 pm
ஹரியானாவின் புகழ்பெற்ற முதலமைச்சர் திரு. நயப் சிங் சைனி அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான மனோகர் லால் அவர்களே, ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, கிருஷ்ண பால் அவர்களே, ஹரியானா அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே. வாழ்த்துக்கள்.ஹரியானா மாநிலம் யமுனா நகரில் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்
April 14th, 11:54 am
ஹரியானா மாநிலம் யமுனா நகரில் நிறைவேற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். ஹரியானா மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், ஹரியானாவின் புனித பூமிக்கு மரியாதை செலுத்தினார், இது அன்னை சரஸ்வதியின் தோற்றம், மந்திரதேவியின் இருப்பிடம், பஞ்சமுகி ஹனுமான் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட கபால்மோச்சன் சாஹிப் ஆகியோரின் இருப்பிடம் என்று அவர் கூறினார். ஹரியானா கலாச்சாரம், பக்தி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சங்கமம் என்று அவர் விவரித்தார். பாபாசாஹேப் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், பாபா சாகேப்பின் தொலைநோக்குப் பார்வை மற்றும் உத்வேகம் ஆகியவற்றை எடுத்துரைத்து, அவை இந்தியாவின் வளர்ச்சியை நோக்கிய பயணத்தை தொடர்ந்து வழிநடத்துகின்றன என்றார்.வேலைவாய்ப்புத் திருவிழாவில் காணொலிக் காட்சி மூலம் 71,000க்கும் அதிகமானோருக்கு நியமனக் கடிதங்களை வழங்கி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
December 23rd, 11:00 am
நான் நேற்று இரவு குவைத்திலிருந்து திரும்பினேன். அங்கு, நான் இந்திய இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் ஒரு விரிவான சந்திப்பை நடத்தினேன். அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபட்டேன். இப்போது, நான் நாடு திரும்பி வந்தவுடன், எனது முதல் நிகழ்ச்சி நம் தேசத்தின் இளைஞர்களுடனான நிகழ்ச்சியாக உள்ளது - உண்மையில் இது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வாகும். உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இன்றைய நிகழ்வு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. உங்களின் பல ஆண்டுகால கனவுகள் பலனளித்துள்ளன. உங்களின் இடைவிடாத முயற்சிகளுக்குப் பலன் கிடைத்துள்ளது. கடந்து செல்லும் 2024-ம் ஆண்டு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் புதிய மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்கிறது. இந்த மகத்தான தருணத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வேலைவாய்ப்புத் திருவிழாவின்கீழ் மத்திய அரசுத் துறைகள், நிறுவனங்களில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 -க் கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார்
December 23rd, 10:30 am
அரசுத் துறைகள், அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை இந்த வேலைவாய்ப்புத் திருவிழா எடுத்துக் காட்டுவதாக உள்ளது. நாட்டைக் கட்டமைப்பது, சுய அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கு பங்களிப்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும்.தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
December 15th, 10:15 pm
தில்லியில் இன்று நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் 4-வது தேசிய மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். மூன்று நாள் மாநாடு 2024 டிசம்பர் 13 முதல் 15 வரை தில்லியில் நடைபெற்றது.சர்வதேச கூட்டுறவு மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
November 25th, 03:30 pm
எனது இளம் சகோதரர் போன்ற பூடான் பிரதமர் , ஃபிஜியின் துணைப் பிரதமர், பாரதத்தின் மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, சர்வதேச கூட்டுறவு நிறுவன கூட்டமைப்பின் தலைவர் அவர்களே, ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளே, கூட்டுறவு அமைப்புகளுடன் தொடர்புடைய பிரதிநிதிகளே, தாய்மார்களே,ஐசிஏ உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
November 25th, 03:00 pm
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஐசிஏ உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மோடி, பூடான் பிரதமர் திரு தாஷோ ஷெரிங் டோப்கே, ஃபிஜி துணைப் பிரதமர் திரு மனோவா காமிகாமிகா, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இந்தியாவுக்கான ஐ.நா.வின் உள்ளுறை ஒருங்கிணைப்பாளர் திரு ஷோம்பி ஷார்ப், சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் (ஐசிஏ) தலைவர் திரு ஏரியல் குவார்கோ பல்வேறு நாடுகளின் பிரமுகர்கள், ஐசிஏ உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024- ல் கலந்து கொண்டவர்களை வரவேற்றார்.தூய்மையே சேவை 2024 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 02nd, 10:15 am
இன்று மகாத்மா காந்தி , லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள். அன்னை பாரதத்தின் இந்த மகத்தான புதல்வர்களுக்கு நான் தாழ்மையுடன் தலைவணங்குகிறேன். காந்திஜி மற்றும் நாட்டின் பெரிய மனிதர்கள் பாரதம் குறித்து கண்ட கனவை நிறைவேற்ற, ஒன்றிணைந்து பணியாற்ற இந்த நாள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.தூய்மை இந்தியா தினம் 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
October 02nd, 10:10 am
தூய்மைக்கான மிக முக்கிய மக்கள் இயக்கங்களில் ஒன்றான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், 155-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 2 அன்று) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தூய்மை இந்தியா தினம் 2024 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அம்ருத் மற்றும் அம்ருத் 2.0, தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம், கோபர்தன் திட்டம் உள்ளிட்ட ரூ.9,600 கோடி மதிப்பிலான பல்வேறு துப்புரவு மற்றும் தூய்மைத் திட்டங்களைத் திரு மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தூய்மையே சேவை இயக்கம்-2024-ன் கருப்பொருள் 'தூய்மைப் பழக்கம், தூய்மைக் கலாச்சாரம்.'தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா தினம் 2024-ல் பிரதமர் பங்கேற்கிறார்
September 30th, 08:59 pm
தூய்மைக்கான மிக முக்கியமான மக்கள் இயக்கங்களில் ஒன்றான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி, அக்டோபர் 2-ம் தேதி காலை 10 மணியளவில் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 155-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூய்மை இந்தியா தினம் 2024 நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.It is my mission to make sure water reaches every house & farmer in the country: PM Modi in Jalore
April 21st, 03:00 pm
Campaigning for the 2024 Lok Sabha election has intensified, with Prime Minister Narendra Modi, the star campaigner for the NDA, amplifying his support for BJP candidates in Rajasthan. Addressing a massive rally in Jalore, PM Modi said, “In the first phase of voting, half of Rajasthan has taught Congress a good lesson. Rajasthan, deeply rooted in patriotism, knows that Congress can never build a strong India.”PM Modi delivers high-octane speeches at public meetings in Jalore and Banswara, Rajasthan
April 21st, 02:00 pm
Campaigning for the 2024 Lok Sabha election has intensified, with Prime Minister Narendra Modi, the star campaigner for the NDA, amplifying his support for BJP candidates in Rajasthan. PM Modi addressed public meetings in Jalore and Banswara today. Addressing the event, he said, “In the first phase of voting, half of Rajasthan has taught Congress a good lesson. Rajasthan, deeply rooted in patriotism, knows that Congress can never build a strong India.”உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கிவைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரை
February 23rd, 02:45 pm
உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா திரு மகேந்திர நாத் பாண்டே அவர்களே, துணை முதலமைச்சர் திரு பிரஜேஷ் பதக் அவர்களே, பனாஸ் பால் பண்ணையின் தலைவர் திரு சங்கர்பாய் சவுத்ரி அவர்களே, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு பூபேந்திர சவுத்ரி அவர்களே, மாநிலத்தின் பிற அமைச்சர்கள், பிரதிநிதிகள், காசியைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளே.வாரணாசியில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
February 23rd, 02:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி வாரணாசியில் இன்று ரூ.13,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். வாரணாசி, கார்கியாவ்னில் உள்ள உப்சிடா வேளாண் பூங்காவில் கட்டப்பட்டுள்ள பனஸ்கந்தா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் நிறுவனத்தின் பால் பதப்படுத்தும் பிரிவான பனாஸ் காசி சங்குலையும் பார்வையிட்ட பிரதமர், பசு வளர்ப்பு பயனாளிகளுடன் கலந்துரையாடினார். வேலைவாய்ப்பு நியமனக் கடிதங்கள் மற்றும் புவிசார் குறியீடு அங்கீகரிக்கப்பட்ட பயனர் சான்றிதழ்களையும் பிரதமர் மோடி வழங்கினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் சாலை, ரயில், விமானப் போக்குவரத்து, சுற்றுலா, கல்வி, சுகாதாரம், குடிநீர், நகர்ப்புற மேம்பாடு மற்றும் துப்புரவு போன்ற முக்கியமான துறைகளைப் பூர்த்தி செய்கின்றன.அமுல், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை
February 22nd, 11:30 am
குஜராத் ஆளுநர், திரு ஆச்சார்யா தேவ்ரத் அவர்களே, குஜராத்தின் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, எனது அமைச்சரவை சகா திரு பர்ஷோத்தம் ரூபாலா அவர்களே, மதிப்பிற்குரிய நாடாளுமன்ற சகா திரு சி.ஆர்.பாட்டீல் அவர்களே, அமுல் நிறுவனத்தின் தலைவர் திரு ஷமல் பாய் அவர்களே, பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கும் எனதருமை சகோதர, சகோதரிகளே!குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்
February 22nd, 10:44 am
அகமதாபாத் மொட்டேராவில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியையொட்டி காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர், பொன்விழா புத்தகத்தை வெளியிட்டார்.இந்தூரில் 'தொழிலாளர்களின் வெற்றியை தொழிலாளர்களுக்கே சமர்ப்பித்தல் ’ நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
December 25th, 12:30 pm
மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் அவர்களே, இந்தூரில் நீண்ட காலம் பணியாற்றிய மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா அவர்களே, எனது நாடாளுமன்ற சகாக்கள்; புதிய சட்டசபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்; மற்ற பிரமுகர்கள், என் அன்பான தொழிலாளர் சகோதர சகோதரிகளே, வணக்கம்!தொழிலாளர்களின் வெற்றி தொழிலாளர்களுக்கே சமர்ப்பணம் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
December 25th, 12:06 pm
தொழிலாளர்களின் வெற்றி தொழிலாளர்களுக்கே சமர்ப்பணம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (25-12-2023) காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். ஹுக்கும்சந்த் மில் தொழிலாளர்களின் நிலுவைத் தொகை ரூ. 224 கோடிக்கான காசோலையை இந்தூரில் உள்ள ஹுக்கும்சந்த் ஆலையின் அதிகாரப்பூர்வ அதிகாரி மற்றும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்களிடம் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சி ஹுக்கும்சந்த் ஆலைத் தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைந்தது. கார்கோன் மாவட்டத்தில் 60 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையத்திற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.