பூடானில், பிரதமரின் பயணத்தையடுத்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை
November 12th, 10:00 am
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் அழைப்பின் பேரில் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரு நாட்களில் பூடானில் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் போது 2025 நவம்பர் 11 அன்று சாங்லிமிதாங்கில் நடைபெற்ற 4-ம் மன்னரின் பிறந்ததின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் திரு மோடி கலந்து கொண்டார். திம்புவில் நடைபெற்ற உலகளாவிய அமைதி பிரார்த்தனை திருவிழாவிலும் அவர் கலந்து கொண்டார். இத்திருவிழாவின் போது பொதுமக்களின் வழிபாட்டுக்காக திம்புவில், இந்தியாவிலிருந்து பகவான் புத்தரின் புனித பிப்ரவா நினைவுச் சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளதற்காக பூடான் மன்னர் பாராட்டுத் தெரிவித்தார்.பூடானின் நான்காம் மன்னர், பிரதமரை வரவேற்றார், உலகளாவிய அமைதிப் பிரார்த்தனை திருவிழாவில் பிரதமர் பங்கேற்றார்
November 12th, 09:54 am
பூடானின் திம்புவில் நான்காம் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று வரவேற்றார். 4-ம் மன்னரின் 70-வது பிறந்த தினத்தையொட்டி, அவரது சிறந்த உடல் ஆரோக்கியம் மற்றும் நலனுக்காக இந்திய அரசு மற்றும் மக்களின் வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்துக் கொண்டார். இந்தியா – பூடான் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் தலைமைத்துவம், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்காக 4-ம் மன்னருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இருதரப்பு உறவுகள் குறித்தும், பரஸ்பரம் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். பகிரப்பட்ட ஆன்மீக மற்றும் கலாச்சார பிணைப்புகள் இருநாட்டு மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்போது அவர்கள் குறிப்பிட்டனர்.பூட்டான் மன்னருடன் பிரதமர் சந்திப்பு
November 11th, 06:14 pm
இரு நாடுகளுக்கும் இடையே நட்பு மற்றும் ஒத்துழைப்பின் நெருங்கிய உறவுகளை வடிவமைப்பதில் அடுத்தடுத்து வந்த மன்னர்கள் முன்வைத்த வழிகாட்டும் தொலைநோக்குப் பார்வைக்கு பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். பூட்டானின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசு அளித்த விலைமதிப்பற்ற ஆதரவிற்கு மன்னர் நன்றி தெரிவித்தார்.His Majesty The Fourth King of Bhutan has played a pivotal role in strengthening India and Bhutan friendship: PM Modi in Thimphu
November 11th, 12:00 pm
In his address at the Changlimethang Celebration Ground in Thimphu, Bhutan, PM Modi reaffirmed that those behind the recent Delhi blast will not be spared. He lauded His Majesty The King for leading Bhutan to new heights, highlighting his pivotal role in strengthening India and Bhutan friendship. The PM also inaugurated a hydroelectric project and recalled India’s support package of ₹10,000 crore announced last year for Bhutan’s Five-Year Plan.பூடானின் 4-வது மன்னரது 70-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 11th, 11:39 am
உலகம் ஒரு குடும்பம் என்பதை எடுத்துரைக்கும் வசுதைவ குடும்பகம் என்ற தொன்மை சிந்தனையில் இந்தியா ஊக்கம் பெற்றுள்ளது என்றும், அனைவரும் இன்புற்றிருக்க நினைக்கும் இந்தியாவின் மந்திரம் உலக மகிழ்ச்சியை வலியுறுத்துவதாக பிரதமர் கூறினார். சொர்க்கத்திலும், விண்வெளியிலும், பூமியிலும், நீர், தாவரங்கள் மற்றும் அனைத்து உயிரினங்களிலும் அமைதியை விரும்பும் வேத மந்திரங்கள் இவற்றை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார். இந்த உணர்வுகளுடன் பூடானின் உலகளாவிய அமைதி வழிபாட்டுத் திருவிழாவில் இந்தியா பங்கேற்கிறது என்று அவர் குறிப்பிட்டார். உலகம் முழுவதிலும் இருந்து உலகளாவிய அமைதிக்காக வழிபாடு செய்ய துறவிகள் வந்துள்ள நிலையில், இந்த கூட்டான உணர்வின் பகுதியாக இந்தியாவின் 140 கோடி மக்களும் உள்ளனர் என்று பிரதமர் கூறினார்.பூட்டான் புறப்படுவதற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
November 11th, 07:28 am
பூட்டான் 4-ம் மன்னரின் 70-வது பிறந்த தினம் கொண்டாடப்படும் வேளையில் பூட்டான் மக்களுடன் இணைவது எனக்கு கிடைத்த கௌரவமாகும். பூட்டானின் உலகளாவிய அமைதி பிரார்த்தனை திருவிழாவில் இந்தியாவிலிருந்து புத்தரின் புனித பிப்ரவா நினைவுச் சின்னங்கள் இடம்பெறுவது நமது இருநாடுகளின் நாகரீகம் மற்றும் ஆன்மிக தொடர்புகளை பிரதிபலிக்கிறது. இப்பயணத்தின்போது புனட்சங்க்சு-II நீர்மின் திட்டம் தொடங்கப்படுவது நமது வெற்றிகரமான எரிசக்தி கூட்டமைப்பில் மற்றொரு மைல்கல்லாகும்.