எல்விஎம்3 - எம்6 ராக்கெட் மூலம் ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பிரதமர் வாழ்த்து
December 24th, 10:04 am
இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்டதிலேயே மிகவும் எடை அதிகம் கொண்ட கனமான செயற்கைக்கோள்களை ஏவும் திறன் கொண்ட எல்விஎம்3-எம்6 ராக்கெட் மூலம், அமெரிக்காவின் ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதற்காக விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல் சாதனையைக் குறிக்கிறது என்றும், இது தற்சார்பு இந்தியாவை நோக்கிய முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது என்றும் திரு. மோடி கூறியுள்ளார்.இந்தியா - ஜப்பான் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பிரகடனம்
August 29th, 07:43 pm
இந்தியா - ஜப்பான் அரசுகளுக்கு இடையிலான பகிரப்பட்ட மதிப்புகள், பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்திசார், உலகளாவிய ஒத்துழைப்பின் அரசியல் பார்வையும் நோக்கங்களும் சிறப்பானவை. விதிகள் சார்ந்த சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்தும் சுதந்திரமான, திறந்த, அமைதியான, வளமான, வற்புறுத்தல் இல்லாத இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான இரு நாடுகளின் பங்கை இவை எடுத்துக் காட்டுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.அடுத்த பத்தாண்டுகளுக்கான இந்தியா - ஜப்பான் கூட்டு தொலைநோக்கு: சிறப்பு உத்தி மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை வழிநடத்த எட்டு வழிகாட்டுதல்கள்
August 29th, 07:11 pm
சட்டத்தின் ஆட்சி அடிப்படையில் சுதந்திரமான, வெளிப்படையான, அமைதியான, வளமான, வற்புறுத்தல் இல்லாத இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவும் ஜப்பானும் உள்ளன. நட்பு மற்றும் பரஸ்பர நல்லெண்ணத்தின் நீண்ட பாரம்பரியத்தையும் பொதுவான தொலைநோக்குப் பார்வையையும் கொண்ட இந்தியாவும் ஜப்பானும், அடுத்த பத்தாண்டுகளில் உள் நாட்டிலும் உலகிலும் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வாய்ப்புகளை கூட்டாக வழிநடத்தவும், அந்தந்த நாட்டு இலக்குகளை அடைய உதவவும், நமது நாடுகளையும் அடுத்த தலைமுறை மக்களையும் முன்னெப்போதையும் விட நெருக்கமாகக் கொண்டுவரவும் எங்கள் நோக்கத்தை இதன் மூலம் வெளிப்படுத்துகிறோம்.15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்தர உச்சி மாநாடு கூட்டறிக்கை: நமது அடுத்த தலைமுறையின் பாதுகாப்பு மற்றும் வளத்துக்கான கூட்டாண்மை
August 29th, 07:06 pm
ஜப்பான் பிரதமர் திரு இஷிபா ஷிகெரு அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, 15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்தர உச்சிமாநாட்டிற்காக 2025, ஆகஸ்ட் 29-30 தேதிகளில் ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். 2025, ஆகஸ்ட் 29 அன்று மாலை பிரதமர் அலுவலகத்தில் (கான்டெய்) பிரதமர் மோடியை பிரதமர் இஷிபா வரவேற்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு பிரதமர்களும் பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாகரிக உறவுகள், பகிரப்பட்ட மாண்புகள் மற்றும் ஆர்வங்கள், பொதுவான உத்திசார் கண்ணோட்டம் ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியா- ஜப்பான் இடையேயான நீண்டகால நட்பை அவர்கள் நினைவு கூர்ந்தனர். கடந்த தசாப்தத்தில் இந்தியா-ஜப்பான் கூட்டாண்மை அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இரு பிரதமர்களும் பாராட்டினர். மேலும் வரும் தசாப்தங்களில் பரஸ்பர பாதுகாப்பு மற்றும் வளத்தை அடைவதற்கான உத்தி மற்றும் எதிர்கால கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆக்கபூர்வக் கலந்துரையாடலை நடத்தினர்.பிரதமரின் ஜப்பான் மற்றும் சீனா பயணம்
August 22nd, 06:15 pm
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஆகஸ்ட் 29–30, 2025 வரை ஜப்பானுக்கும், ஆகஸ்ட் 31–1, 2025 வரை சீனாவுக்கும் பயணம் மேற்கொள்வார். ஜப்பானில், பிரதமர் 15வது இந்தியா–ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்று, ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் கலந்துரையாடுவார். சீனாவில், பிரதமர் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்.