மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025 தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

February 24th, 10:35 am

நான் இங்கு வரத் தாமதமானதற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தாமதம் ஏற்பட்டது ஏனென்றால் நான் நேற்று இங்கு வந்தபோது, இன்று, 10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இருப்பதை உணர்ந்தேன். நான் ஆளுநர் மாளிகையை விட்டு புறப்படும் நேரமும் அவர்களின் தேர்வுகள் நடக்கும் நேரமும் ஒன்றாக இருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக சாலைகள் மூடப்பட்டால், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அனைத்து மாணவர்களும் தேர்வு மையங்களுக்கு வந்துவிட்டார்களா என்பதை உறுதி செய்த பின்னரே ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்பட முடிவு செய்தேன். எனவே, நான் வேண்டுமென்றே எனது புறப்பாட்டை 15-20 நிமிடங்கள் தாமதப்படுத்தினேன். இது உங்கள் அனைவருக்கும் சிரமங்களை ஏற்படுத்தியிருக்கும். எனவே, உங்கள் அனைவரிடமும் மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு-2025 ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

February 24th, 10:30 am

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் உரையாற்றிய அவர், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டிற்கு வரும் வழியில் தனது பாதுகாப்பு நடவடிக்கைகள் மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மாநாட்டில் கலந்து கொள்வதில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு மன்னிப்பு கோரினார். ராஜா போஜ் பூமியில் முதலீட்டாளர்களையும், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களையும் வரவேற்பதில் பெருமை கொள்வதாக திரு மோடி கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை எட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் வளர்ச்சி அடைந்த மத்தியப் பிரதேச மாநிலம் குறிப்பிடத்தக்க பங்குவகிக்கும் என்பதால் இன்றைய மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார். இந்த உச்சிமாநாட்டை அற்புதமாக ஏற்பாடு செய்ததற்காக மத்தியப் பிரதேச மாநில அரசிற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பீகார், அசாம் மாநிலங்களுக்குப் பிரதமர் பயணம்

February 22nd, 02:05 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பீகார் அசாம் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23 அன்று மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லும் அவர், பிற்பகல் 2 மணியளவில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பிப்ரவரி 24 அன்று காலை 10 மணியளவில், போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, அவர் பீகாரின் பாகல்பூருக்குச் செல்கிறார். பிற்பகல் 2:15 மணியளவில், அவர் பிரதமரின் கிசான் திட்டத்தின் 19-வது தவணைத் தொகையை விடுவிக்கிறார். மேலும் பீகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். மேலும் அவர் குவஹாத்திக்குச் சென்று மாலை 6 மணியளவில், ஜுமோயர் பினாந்தினி (மெகா ஜுமோயர்) 2025 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். பிப்ரவரி 25 அன்று, காலை 10:45 மணிக்கு, குவஹாத்தியில் அட்வான்டேஜ் அசாம் 2.0 முதலீடு, உள்கட்டமைப்பு உச்சி மாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்.