லக்னோவில் நடைபெற்ற, உத்தரப் பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் முன்மொழியப்பட்ட திட்டப் பணிகளின் 4-வது அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 19th, 03:00 pm

வளர்ந்த இந்தியாவுக்காக வளர்ச்சியடைந்த உத்தரப்பிரதேசத்தை உருவாக்கும் உறுதியுடன் நாம் இங்கு ஒன்றுபட்டு நிற்கிறோம். உத்தரப்பிரதேசத்தின் 400-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தொழில்நுட்பத்தின் மூலம் லட்சக்கணக்கான தனிநபர்கள் இந்த நிகழ்ச்சியில் நம்முடன் இணைந்துள்ளனர் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. காணொலிக் காட்சித் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரப்பிரதேசத்தின் நிலை மோசமாக இருந்தது. குற்றங்கள், கலவரங்கள், திருட்டுகள் ஏராளமாக இருந்தன. ஆனால், இன்று உத்தரப்பிரதேசத்தில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் குவிந்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், எனது மாநிலத்தின் முன்னேற்றங்களைக் காண்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று, ஆயிரக்கணக்கான திட்டங்களுக்கான பணிகள் தொடங்கிவைக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலைகள் உத்தரப் பிரதேசத்தின் சூழலை மிகச் சிறப்பாக மாற்றும். அனைத்து முதலீட்டாளர்களுக்கும், குறிப்பாக உத்தரப் பிரதேசத்தின் இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த உத்தரப்பிரதேசம் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

February 19th, 02:30 pm

லக்னோவில் இன்று நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த உத்தரப்பிரதேசம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். 2023 பிப்ரவரியில் நடைபெற்ற உத்தரப்பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023-ன் நான்காவது அடிக்கல் நாட்டு விழாவில் உத்தரப்பிரதேசம் முழுவதும் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்புள்ள 14000 திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு மற்றும் கல்வி போன்ற துறைகளுடன் இந்த திட்டங்கள் தொடர்புடையவையாகும்.

டேராடூனில் உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023 தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

December 08th, 12:00 pm

உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மீத் சிங் அவர்களே, இளம் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி அவர்களே, அமைச்சர்கள், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், வணிக உலகின் முக்கிய பிரமுகர்கள், பெண்கள் மற்றும் பெருமக்களே! வணக்கம்!

'உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023'-ஐப் பிரதமர் தொடங்கி வைத்தார்

December 08th, 11:26 am

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்று வரும் 'உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023'-ஐப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அங்கு கண்காட்சியையும் அவர் திறந்துவைத்தார். வலிமையான உத்தராகண்ட் என்ற புத்தகத்தையும், ஹவுஸ் ஆஃப் ஹிமாலயாஸ் என்ற வணிகக்குறியீட்டையும் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த மாநாட்டின் கருப்பொருள் 'அமைதி முதல் செழிப்பு வரை' என்பதாகும்.

டிசம்பர் 8 அன்று டேராடூன் செல்லும் பிரதமர், 'உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023'-ஐ தொடங்கி வைக்கிறார்

December 06th, 02:38 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி 2023 டிசம்பர் 8 அன்று உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்குப் பயணம் மேற்கொள்கிறார். காலை 10.30 மணியளவில் டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் 'உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023'-ஐ தொடங்கிவைத்து நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பிரமாண்ட வேலைவாய்ப்பு முகாமில் பிரதமரின் காணொலி வாயிலான ஆங்கில உரையின் தமிழாக்கம்

February 26th, 12:01 pm

இப்பொழுதெல்லாம் பிரமாண்ட வேலைவாய்ப்பு முகாம் நிகழ்வுகள் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. கடந்த பல மாதங்களாக பிஜேபி ஆளும் மாநிலங்களிலும் ஒவ்வொரு வாரமும் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை நான் காண்கிறேன். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முக்கிய தருணங்களை காணும் வாய்ப்பைப் பெற்றதில் நான் அதிர்ஷ்டசாலி. திறமையான இளைஞர்கள் அரசு இயந்திரத்திற்கு புத்தம் புதிய சிந்தனைகளை கொண்டுவந்து சிறப்பாக செயலாற்றுவதற்கு உதவி செய்கின்றனர்.

உ.பி வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் உரையாற்றினார்

February 26th, 12:00 pm

உத்தரப் பிரதேச அரசின் வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார். விழாவில், உபி காவல்துறையில் உதவி ஆய்வாளர்கள் , நாக்ரிக் காவல் பிரிவில் அதற்கு இணையான பணியிடங்கள், படைப்பிரிவு தளபதிகள், தீயணைப்புத் துறை இரண்டாம் நிலை அதிகாரிகள் ஆகியோருக்கு நேரடி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023-இல் பிரதமரின் உரை

February 10th, 11:01 am

உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல் அவர்களே, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர்கள் கேஷவ் பிரசாத் அவர்களே, பிரஜேஷ் பதக் அவர்களே, மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களே, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளே, உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்களே, தொழில்துறை உறுப்பினர்களே, உலகளாவிய உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ள தாய்மார்களே அன்பர்களே!

லக்னோவில், உத்தரப்பிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்

February 10th, 11:00 am

லக்னோவில், உத்தரப்பிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது உலகளாவிய வர்த்தக கண்காட்சியைத் தொடங்கி வைத்து, முதலீட்டாளர் உத்தரப்பிரதேசம் 2.0 திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். உத்தரபிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு என்பது உத்தரப்பிரதேச மாநில அரசின் முன்னோடி முதலீட்டு மாநாடாகும். தொழில்துறையினர், கல்வியாளர்கள், உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் வருகை தருவதன் மூலம் வர்த்தக வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைக்கான வழிமுறைகள் கண்டறியப்படும்‌. நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் பிரதமர் சுற்றிப் பார்த்தார்.

உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ராவுக்கு, பிப்ரவரி 10-ம் தேதி பிரதமர் பயணம்

February 08th, 05:39 pm

உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ராவுக்கு, பிப்ரவரி 10-ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணி அளவில் லக்னோ செல்லும் அவர், அங்கு உத்தரப்பிரதேசம் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2023-ஐ தொடங்கிவைக்க உள்ளார். பிற்பகல் 2.45 மணி அளவில், மும்பையில் சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தில் 2 வந்தேபாரத் ரயில்களின் சேவையை கொடியசைத்து பிரதமர் தொடங்கிவைக்க உள்ளார்.

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

January 11th, 05:00 pm

மத்தியப்பிரதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற அனைத்து முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோரை உற்சாகமாக வரவேற்கிறேன். வளர்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைப்பதில் மத்தியப்பிரதேசத்தின் பங்கு மிகவும் இன்றியமையாதது. நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்தில் தொடங்கி சுற்றுலாத்துறை வரையிலும், வேளாண்மையில் தொடங்கி கல்வி மற்றும் திறன் மேம்பாடு வரையிலும், சாதனைப் படைத்த மத்தியப்பிரதேசம் ஒரு வியத்தகு மாநிலம்..

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2023-ல் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் உரை

January 11th, 11:10 am

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலமாக இன்று (11.01.2023) உரையாற்றினார். அப்போது இந்த உச்சிமாநாடு மத்தியப்பிரதேசத்தின் பல்துறை சார்ந்த முதலீட்டாளர் வாய்ப்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதாகக் கூறினார். உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள அனைத்து முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் மத்தியப்பிரதேசத்தின் பங்களிப்புக் குறித்தும் எடுத்துரைத்தார்.

PM highlights the four wheels of development at Rising Himachal Global Investors' Summit

November 07th, 04:04 pm

Addressing the gathering, Prime Minister said, he is happy to welcome all the Wealth Creators to this meet.

எழுச்சி பெறும் இமாச்சல்-உலக முதலீட்டாளர்கள் கூட்டம் 2019-ஐ பிரதமர் தரம்சாலாவில் தொடங்கி வைத்தார்

November 07th, 11:22 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக இமாச்சலப்பிரதேச முதலமைச்சரைப் பாராட்டினார்.

வடகிழக்கு பகுதி இந்தியாவின் கீழை நாடுகள் நடவடிக்கைக் கொள்கையின் உயிர் என்று அசாம் அனுகூலம் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்

February 03rd, 02:10 pm

முதல் உலகளாவிய முதலீட்டாளர்கள் அசாம் அனுகூலம் மாநாட்டை இன்று குவாஹாத்தியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.இது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அதன் உற்பத்தி வாய்ப்புகள் மற்றும் புவிதடந்தகை நன்மைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது. இந்தியாவின் விரைவு பாதை என ஆசியான் நிலைநிறுத்துவதே இந்த உச்சி மாநாட்டின் நோக்கமாகும்

அசாமுக்கு அனுகூலம் & உலகளாவிய முதலீட்டாளர் உச்சிமாநாடு 2018 தொடக்க விழாவில் பிரதமர் உரை

February 03rd, 02:00 pm

குவஹாத்தியில் இன்று நடைபெற்ற அசாமுக்கு அனுகூலம் & உலகளாவிய முதலீட்டாளர் உச்சி மாநாடு 2018 தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

அசாமுக்கு அனுகூலம் & உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2018 தொடக்க விழாவில் பேசுகிறார் பிரதமர்

February 02nd, 06:46 pm

குவஹாத்தியில் நாளை நடைபெறும் அசாமுக்கு அனுகூலம் & உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2018 தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

ஜார்கண்ட் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2017 – பிரதமர் வாழ்த்து

February 16th, 12:24 pm

PM Narendra Modi has extended best wishes to the Global Investors' Summit 2017 in Jharkhand. Investment generated from Invest Jharkhand will create several opportunities for people of the state and give wings to their aspirations. Skills and determination of people of Jharkhand and proactive efforts of Jharkhand Government are bringing record development in the state., the PM said.