சுற்றுச்சூழல், சிஓபி-30, உலகளாவிய சுகாதாரம் ஆகியவை குறித்த 17-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
July 07th, 11:38 pm
சுற்றுச்சூழல், சிஓபி-30, உலகளாவிய சுகாதாரம் ஆகியவை குறித்த அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.07.2025) உரையாற்றினார். இந்த அமர்வில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள், பங்குதாரர் நாடுகள், அழைக்கப்பட்ட நாடுகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். உலகின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான இத்தகைய விஷயங்கள் குறித்த அமர்வுக்கு ஏற்பாடு செய்த பிரேசில் நாட்டுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.சுற்றுச்சூழல், சிஓபி-30 மற்றும் உலகளாவிய சுகாதாரம் குறித்த பிரிக்ஸ் அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை
July 07th, 11:13 pm
பிரேசிலின் தலைமையின் கீழ், பிரிக்ஸ் அமைப்பு சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த துறைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை மட்டுமல்ல, மனிதசமூகத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் மிகவும் முக்கியமானவை.