பிரதமர் திரு நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா-நெதர்லாந்து கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள்
May 17th, 03:45 am
நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 மே 16, 17 ஆகிய தேதிகளில் நெதர்லாந்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் இரண்டாவது நெதர்லாந்துப் பயணமாகும்.நெதர்லாந்து இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
May 16th, 01:30 pm
தி ஹேக் நகரம் உலகம் முழுவதும் அமைதி மற்றும் நீதிக்கான நகரம் என்று அறியப்பட்டாலும், இன்றைய இங்குள்ள சூழலைப் பார்க்கும்போது, அந்த நகரம் இந்திய நட்புறவின் வாழும் அடையாளமாக மாறிவிட்டது போல் தோன்றுகிறது!நெதர்லாந்தில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
May 16th, 01:20 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (16.05.2026) நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்ற இந்திய சமூகத்தினர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிரதமர் நெதர்லாந்து சென்றடைந்ததும், அங்கு உள்ள இந்திய வம்சாவளியினர் பெருந்திரளானோர் அவருக்கு அன்பான, உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.Gujarat’s biggest strength is that it has kept development moving continuously for the past 25 years: PM Modi in Vav-Tharad
March 31st, 05:00 pm
PM Modi launched and dedicated multiple development projects in Vav-Tharad, Gujarat, worth nearly ₹20,000 crore. Addressing a large gathering, he highlighted initiatives across roads, railways, power, water supply, urban development, healthcare and tourism aimed at boosting connectivity, improving public services and accelerating socio-economic growth in the region while strengthening the vision of a Viksit Bharat.PM Modi lays foundation stone, inaugurates, and dedicates to the Nation development projects worth more than ₹20,000 crore in Vav-Tharad,Gujarat
March 31st, 04:32 pm
PM Modi launched and dedicated multiple development projects in Vav-Tharad, Gujarat, worth nearly ₹20,000 crore. Addressing a large gathering, he highlighted initiatives across roads, railways, power, water supply, urban development, healthcare and tourism aimed at boosting connectivity, improving public services and accelerating socio-economic growth in the region while strengthening the vision of a Viksit Bharat.The development of Delhi is linked to the image of the entire country: PM Modi
March 08th, 03:54 pm
PM Modi launched multiple development projects worth ₹33,500 crore in Delhi, ranging from the expansion of the Metro network to the construction of modern residential complexes for government employees. He highlighted the landmark achievement of creating 3 crore “Lakhpati Didis” and expressed concern over the disrespect shown by the West Bengal government toward the President of India. He called upon everyone to work towards fulfilling national resolutions.தில்லியில் சுமார் ரூ. 33,500 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
March 08th, 10:26 am
பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் சுமார் ₹33,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று (08.03.2026) தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இன்று, தில்லியின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்க நாம் அனைவரும் இங்கு கூடியுள்ளோம் என்று கூறினார்.‘இந்தியா சிப் லிமிடெட்’ நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 21st, 05:30 pm
உத்தரப் பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாவான திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, திரு.ஜிதின் பிரசாதா அவர்களே, உத்தரப் பிரதேச அரசின் அமைச்சர்களே, ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் நிறுவனத்தின் வர்ததக குழும தலைவர் திரு. பாப் சென், ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் தலைவர் திரு. ரோஷ்னி நாடார் அவர்களே, இந்தத் திட்டத்தில் பங்கேற்றுள்ள தொழில்துறை தலைவர்கள், இதர முக்கியப் பிரமுகர்கள், பெரியோர்களே, தாய்மார்களே!உத்தரப்பிரதேசத்தில் ஹெச்சிஎல்-ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் ஆலையின் அடிக்கல் நாட்டு விழாவில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் பங்கேற்றார்
February 21st, 05:00 pm
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹெச்சிஎல்-ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் ஆலையின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். புதுதில்லியில் நடைபெற்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, உலகளாவிய செமிகண்டக்டர் மையமாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்தில் இந்த விழா ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது.In this decade of the 21st century, India is riding the Reform Express: PM Modi at ET Now Global Business Summit
February 13th, 08:30 pm
PM Modi addressed the ET Now Global Business Summit 2026 in New Delhi, highlighting the theme ‘A Decade of Disruption, A Century of Change.’ He noted that despite global shocks—from the pandemic to wars and supply chain breakdowns, India’s decade has been defined by strong growth, effective delivery, and a vibrant democracy. Recalling that India was the 11th-largest economy a decade ago, he said the nation is now rapidly moving toward becoming the world’s third-largest economy.எகனாமிக் டைம்ஸ் நவ் சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
February 13th, 08:00 pm
புதுதில்லியில் இன்று நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் நவ் சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட அவர், 'பத்தாண்டு கால இடையூறு, ஒரு நூற்றாண்டுக்கான மாற்றம்' என்ற கருப்பொருளில் உரையாற்றினார். 21 - ம் நூற்றாண்டின் கடந்த பத்தாண்டுகளில், உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பெருந்தொற்று, பதற்றமான சூழல், பல்வேறு பிராந்தியங்களில் போர்கள், மற்றும் உலகளவிலான சமநிலையைப் பாதிக்கும் வகையில், விநியோக நடைமுறைகளில் முறிவுகள் உள்ளிட்ட முன்னெப்போதும் இல்லாத அளவிலான இடையூறுகள் ஏற்பட்டுள்ளன என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்தார். நெருக்கடியான சூழல்கள் நாட்டின் உண்மையான வலிமையை வெளிப்படுத்துகின்றன என்றும், இத்தகைய இடையூறுகள் இருந்த போதிலும், இந்தியா கடந்த பத்தாண்டு காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, சிறந்த விநியோக செயல்பாடுகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்துதல் போன்றவற்றால் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதில் அவர் பெருமிதம் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு, இந்தியா உலகளவில் பதினொன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையில் இருந்தது. கடும் சவால்களுக்கு இடையே நாட்டின் பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும் என்ற அச்சம் இருந்தது. ஆனால், தற்போது இந்தியா விரைவான வளர்ச்சியுடன், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்து வருகிறது என்பதை திரு மோடி நினைவு கூர்ந்தார். இந்த நூற்றாண்டிற்கான மாற்றத்தின் முக்கிய அடித்தளமாக இந்தியா திகழும் என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், இந்தியா தற்போது உலக நாடுகளின் முன்னேற்றத்திற்கு பதினாறு சதவீதத்திற்கும் கூடுதலாக பங்களித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த பங்களிப்பு ஆண்டுதோறும் அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா உலகளவில் வளர்ச்சிக்கான உத்வேகத்துடன், உலகப் பொருளாதாரத்தின் புதிய ஊக்கியாக இருக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாட்டில் பிரதமரின் உரை
November 03rd, 11:00 am
இன்றைய நிகழ்வு அறிவியலுடன் தொடர்புடையது, ஆனால் முதலில் நான் கிரிக்கெட்டில் இந்தியாவின் அற்புதமான வெற்றியைப் பற்றிப் பேசுகிறேன். முழு இந்தியாவும் அதன் கிரிக்கெட் அணியின் வெற்றியில் மிகவும் மகிழ்ச்சியடைகிறது. இது இந்தியாவின் முதல் மகளிர் உலகக் கோப்பை. நமது மகளிர் கிரிக்கெட் அணியை நான் வாழ்த்துகிறேன். உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். உங்கள் வெற்றி நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களை ஊக்குவிக்கும்.வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் 2025 மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 03rd, 10:30 am
புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற, வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03 நவம்பர் 2025) உரையாற்றினார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் இதர சிறப்பு விருந்தினர்களை பிரதமர் வரவேற்றார்.மனதின் குரல் நிகழ்ச்சியின் 119-வது அத்தியாயத்தில், 23.02.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 23rd, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இன்றைய நாட்களில் சேம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து இடங்களிலும் கிரிக்கெட்டுக்கான சூழல் நிலவி வருகிறது. கிரிக்கெட்டில் சதம் அடிப்பதில் இருக்கும் புளகாங்கிதம் என்ன என்பதை நாம் அனைவருமே நன்கறிவோம். ஆனால் இன்று நான் உங்களனைவரிடத்திலும் கிரிக்கெட்டைப் பற்றியல்ல, பாரதம் விண்வெளியில் சதம் அடித்திருப்பதைப் பற்றி உரையாட இருக்கிறேன். கடந்த மாதம் தான் இஸ்ரோ விண்ணில் செலுத்திய 100ஆவது செயற்கைக்கோளின் சாட்சியாக தேசமே இருந்தது. இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, மாறாக அன்றாடம் புதிய உச்சங்களைத் ஸ்பரிசிக்கும் நமது உறுதிப்பாட்டையும் அடையாளப்படுத்துகிறது. நமது விண்வெளிப்பயணப் பயணம் மிக எளிய முறையிலே தான் தொடங்கியது. இதிலே ஒவ்வோர் அடியிலும் சவால்கள் இருந்தன. ஆனால், நமது விஞ்ஞானிகள் வெற்றிக்கொடியை நாட்டியபடி தொடர்ந்து முன்னேறினார்கள். காலப்போக்கில் விண்வெளியின் இந்தப் பாய்ச்சலில் நமது வெற்றிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகத் தொடங்கியது. ஏவுகலன் அமைப்பதாகட்டும், சந்திரயானின் வெற்றியாகட்டும், மங்கல்யானாகட்டும், ஆதித்ய எல்-1 அல்லது ஒரே ஒரு ஏவுகலன் மூலமாக, ஒரே முறையில், 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வரலாறுகாணா செயல்பாடாகட்டும், இஸ்ரோவின் வெற்றித்தொடர் மிகவும் பெரியது. கடந்த பத்தாண்டுகளில் சுமார் 460 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றிலே மற்ற நாடுகளின் பல செயற்கைக்கோள்களும் அடங்கும். அண்மை ஆண்டுகளின் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், விண்வெளி விஞ்ஞானிகள் கொண்ட நமது குழுவிலே பெண்சக்தியின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதுதான். இன்று விண்வெளித்துறை நமது இளைஞர்களுக்கு விருப்பமான ஒன்றாக ஆகியிருக்கிறது என்பது மிகுந்த உவகையை எனக்கு அளிக்கிறது. சில ஆண்டுகள் முன்பு வரை இந்தத் துறையில் ஸ்டார்ட் அப் குறித்தோ, தனியார் துறையின் விண்வெளி நிறுவனங்களின் எண்ணிக்கை பல நூற்றுக்கணக்காகும் என்றோ யார் தான் நினைத்தார்கள்!! வாழ்க்கையை விறுவிறுப்பான, சுவாரசியமான வகையில் அனுபவிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு, விண்வெளித்துறை ஒரு மிகச் சிறப்பான தேர்வாக ஆகி வருகிறது.Human-Centric approach should be the way forward for G20 Nations: PM Modi
November 22nd, 09:39 pm
PM Modi made the concluding remarks at the Virtual G20 Summit. He emphasized on the path-breaking G20 Leaders' Declaration that was accorded a unanimous acceptance. He also reiterated the commitment of 'Zero Tolerance' to terrorism and reinforced the concept of the 'Two State Solution' for the Israel-Palestine conflict.காணொலி வாயிலான ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் (நவம்பர் 22, 2023) பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்
November 22nd, 06:37 pm
எனது அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 140 கோடி இந்தியர்களின் சார்பாக, உங்கள் அனைவரையும் மனதார வரவேற்கிறோம்.