மனதின் குரல் (122ஆவது பகுதி) ஒலிபரப்பு நாள்: 25-05-2025

May 25th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு இருக்கிறது, ஆவேசம் நிறைந்திருக்கிறது, உறுதிப்பாட்டோடு இருக்கிறது. நாம் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டியேயாக வேண்டும், இதுதான் இன்று அனைத்து இந்தியர்களின் உறுதிப்பாடு. நண்பர்களே, ஆப்பரேஷன் சிந்தூரின் போது, நமது படைகள் வெளிப்படுத்திய பராக்கிரமம், இந்தியர்கள் அனைவரின் தலைகளையும் பெருமையில் உயர்த்தியது. நமது படையினர் கையாண்ட துல்லியம் மற்றும் தீவிரமான தாக்குதல் காரணமாக எல்லை தாண்டியிருக்கும் பயங்கரவாதிகளின் பதுங்கிடங்கள் நாசம் செய்யப்பட்டன, இது அற்புதமான விஷயம். ஆப்பரேஷன் சிந்தூர், உலகம் முழுவதிலும் இருக்கும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் புதியதொரு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்திருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் கிர் உயிரினப் பூங்காவைப் பிரதமர் பார்வையிட்டார்

March 03rd, 12:03 pm

கம்பீரமான ஆசிய சிங்கங்களின் இருப்பிடமாக அறியப்படும் குஜராத்தின் கிர் உயிரினப் பூங்காவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். கடந்த பல ஆண்டுகளாக ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை உறுதி செய்யும் வகையிலான கூட்டு முயற்சிகளுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

திரு பரிமல் நத்வானி எழுதிய புத்தகத்தை பிரதமர் பெற்றுக் கொண்டார்

July 31st, 08:10 pm

கிர் மற்றும் ஆசிய சிங்கங்கள் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் திரு பரிமல் நத்வானி எழுதிய கால் ஆஃப் தி கிர் என்ற காபி டேபிள் புத்தகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி பெற்றுக் கொண்டார்.

உலக சிங்கங்கள் நாளில் சிங்கங்களைப் பாதுகாப்பதில் ஆர்வமுள்ள அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

August 10th, 11:19 am

உலக சிங்கங்கள் நாளில், சிங்கங்களைப் பாதுகாப்பதில் ஆர்வமுள்ள அனைத்து ஆர்வலர்களுக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.