The courage, confidence and innovation of startups are shaping India's future: PM Modi

January 16th, 01:30 pm

On the occasion of National Startup Day, PM Modi addressed a programme marking a decade of the Startup India initiative in New Delhi. Highlighting the significant rise in the number of startups and unicorns over the past decade, the PM noted the growing participation of women in the startups. As India is set to host the AI Impact Summit in February 2026, the PM remarked that it presents a great opportunity for the youth and urged them to work hard and innovate.

Talking to you felt like talking to a family member, not the Prime Minister: Farmers say to PM Modi

October 12th, 06:45 pm

During the interaction with farmers at a Krishi programme in New Delhi, PM Modi enquired about their farming practices. Several farmer welfare initiatives like Government e-Marketplace (GeM) portal, PM-Kisan Samman Nidhi, Pradhan Mantri Matsya Sampada Yojana, and PM Dhan Dhaanya Krishi Yojana were discussed. Farmers thanked the Prime Minister for these initiatives and expressed their happiness.

PM Modi interacts with farmers, launches schemes in the agriculture sector worth Rs 35,440 crore

October 12th, 06:25 pm

During the interaction with farmers at a Krishi programme in New Delhi, PM Modi enquired about their farming practices. Several farmer welfare initiatives like Government e-Marketplace (GeM) portal, PM-Kisan Samman Nidhi, Pradhan Mantri Matsya Sampada Yojana, and PM Dhan Dhaanya Krishi Yojana were discussed. Farmers thanked the Prime Minister for these initiatives and expressed their happiness.

Thanks to the efforts of India's fintech community, our Swadeshi solutions are gaining global relevance: PM Modi in Mumbai

October 09th, 02:51 pm

In his address at the Global Fintech Fest 2025, PM Modi remarked that over the past decade, India has successfully democratized technology. He emphasized that India has demonstrated how technology can serve not only as a tool of convenience but also as a means of equality. Highlighting that digital payments have become routine in India, the PM attributed this success to the JAM Trinity. He extended an invitation to every global partner to collaborate with India.

மும்பையில் உலகளாவிய நிதிநுட்பத் திருவிழா 2025-ல் பிரதமர் உரையாற்றினார்

October 09th, 02:50 pm

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இன்று நடைபெற்ற உலகளாவிய நிதிநுட்பத் திருவிழா 2025ல் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மருக்கு திரு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த ஆண்டு திருவிழாவில் கூட்டு நாடக இங்கிலாந்து பங்கேற்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இரண்டு முக்கிய ஜனநாயகங்களுக்கு இடையேயான கூட்டுமுயற்சி, உலகளாவிய நிதி சூழலை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். “இந்தியா தான் ஜனநாயகத்தின் அன்னை, இந்தியாவில் ஜனநாயகம் என்பது தேர்தல்கள் அல்லது கொள்கை வடிவமைப்புடன் மட்டுப்படுவதில்லை, மாறாக ஆளுகையின் வலிமையான தூணாக உருவாகி இருக்கிறது”, என்று அவர் கூறினார்.

Together, with everyone’s efforts, we will build a Viksit Bharat and a Viksit Uttar Pradesh: PM Modi in Greater Noida

September 25th, 10:22 am

In his address while inaugurating the Uttar Pradesh International Trade Show 2025, PM Modi emphasized that Antyodaya means ensuring development reaches even the poorest. Underscoring the principle of “Platforms for All, Progress for All”, the PM remarked that the impact of platforms is visible across India. He noted that UP ranks first in heritage tourism, highlighting that investing in India and particularly in UP is a win-win situation.

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்து உரையாற்றினார்

September 25th, 10:00 am

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தக் கண்காட்சியில் பங்கேற்க வந்துள்ள அனைத்து வியாபாரிகள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள், இளம் தலைமுறையினர் ஆகியோரை வரவேற்பதாக பிரதமர் கூறினார். இந்தக் கண்காட்சியில் 2,200-க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் தங்களது தயாரிப்புகளையும், சேவைகளையும் காட்சிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார். இந்தக் கண்காட்சியில் ரஷ்யா பங்கேற்றுள்ளது இரு நாடுகளிடையேயான வலுவான நட்புறவை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள அம்மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அரசு அதிகாரிகள் மற்றும் இதர தரப்பினருக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழிகாட்டியாக திகழ்ந்த பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்த ஆண்டையொட்டி இந்தக் கண்காட்சி அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மனதின் குரல் (122ஆவது பகுதி) ஒலிபரப்பு நாள்: 25-05-2025

May 25th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு இருக்கிறது, ஆவேசம் நிறைந்திருக்கிறது, உறுதிப்பாட்டோடு இருக்கிறது. நாம் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டியேயாக வேண்டும், இதுதான் இன்று அனைத்து இந்தியர்களின் உறுதிப்பாடு. நண்பர்களே, ஆப்பரேஷன் சிந்தூரின் போது, நமது படைகள் வெளிப்படுத்திய பராக்கிரமம், இந்தியர்கள் அனைவரின் தலைகளையும் பெருமையில் உயர்த்தியது. நமது படையினர் கையாண்ட துல்லியம் மற்றும் தீவிரமான தாக்குதல் காரணமாக எல்லை தாண்டியிருக்கும் பயங்கரவாதிகளின் பதுங்கிடங்கள் நாசம் செய்யப்பட்டன, இது அற்புதமான விஷயம். ஆப்பரேஷன் சிந்தூர், உலகம் முழுவதிலும் இருக்கும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் புதியதொரு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்திருக்கிறது.

Today, India's youth are demonstrating our immense potential to the world, through their dedication and innovation: PM Modi in Rozgar Mela

April 26th, 11:23 am

PM Modi addressed the Rozgar Mela and distributed more than 51,000 appointment letters to youth. He highlighted that the government is ensuring employment and self-employment opportunities for the country's youth. The PM spoke about the immense opportunity WAVES 2025 summit offers for the youth. He recalled the mantra of ‘Nagrik Devo Bhava,’ and encouraged youth to serve every citizen of India.

வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரை

April 26th, 11:00 am

இந்த பட்ஜெட்டில், 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியை ஊக்குவிக்கவும், இந்திய இளைஞர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்கும் வாய்ப்பை வழங்கவும் உற்பத்தி இயக்கத்தை அரசு அறிவித்துள்ளது: பிரதமர்

இந்தியா முழுவதும் அடிமட்ட அளவில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை இயக்கி, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசின் மின்னணு சந்தை தளத்திற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

April 01st, 07:38 pm

இந்தியா முழுவதும் அடிமட்ட அளவில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை இயக்கி, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசின் மின்னணு சந்தை தளத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டு தெரிவித்தார்.

டிவி9 உச்சிமாநாடு 2025-ல் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

March 28th, 08:00 pm

டிவி 9 நெட்வொர்க் பரந்த பிராந்திய பார்வையாளர்களைக் கொண்டுள்ளது, இப்போது, உலகளாவிய பார்வையாளர்களும் உருவாகி வருகின்றனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் பலரும் இந்த உச்சிமாநாட்டுடன் நேரடியாக இணைந்திருக்கிறார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து கையசைப்பதைக் கூட என்னால் பார்க்க முடிகிறது. அவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த பல நேயர்களையும் அதே உற்சாகத்துடன் கீழே உள்ள திரையில் பார்க்க முடிகிறது. அவர்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.

டிவி 9 உச்சிமாநாடு 2025 இல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

March 28th, 06:53 pm

புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற டிவி 9 உச்சிமாநாடு 2025-இல் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், டிவி9 இன் ஒட்டுமொத்த குழுவினருக்கும் அதன் நேயர்களுக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். டிவி9 பரந்த பிராந்திய பார்வையாளர்களைக் கொண்டுள்ளது என்று கூறிய அவர், இப்போது உலகளாவிய பார்வையாளர்களும் உருவாகி வருகின்றனர் என்றார். இந்த நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் இணைந்த இந்திய வம்சாவளியினரை அவர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமரின் பதிலின் ஆங்கில மொழிபெயர்ப்பு

February 04th, 07:00 pm

மாண்புமிகு குடியரசு தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன். நேற்றும் இன்றும் இரவு வெகுநேரம் வரை, அனைத்து மாண்புமிகு எம்.பி.க்களும் இந்த நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை தங்கள் கருத்துகளால் வளப்படுத்தினர். பல மாண்புமிகு அனுபவம் வாய்ந்த எம்.பி.க்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர், மேலும், ஜனநாயகத்தின் பாரம்பரியத்தைப் போலவே, தேவை இருந்த இடத்தில், பாராட்டு இருந்தது, ஒரு பிரச்சனை இருந்த இடத்தில், சில எதிர்மறை விஷயங்கள் இருந்தன, ஆனால் இது மிகவும் இயல்பானது! திரு. சபாநாயகர் அவர்களே, நாட்டு மக்கள் 14வது முறையாக இந்த இடத்தில் அமர்ந்து குடியரசு தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவிக்க எனக்கு வாய்ப்பளித்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம், எனவே, இன்று நான் மக்களுக்கு மிகுந்த மரியாதையுடன் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவையில் விவாதத்தில் பங்கேற்று விவாதத்தை வளப்படுத்திய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் பதில்

February 04th, 06:55 pm

மக்களவையில் இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பதிலளித்தார். அவையில் உரையாற்றிய பிரதமர், நேற்றும் இன்றும் விவாதங்களில் பங்கேற்ற அனைத்து மரியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புகளையும் பாராட்டினார். ஜனநாயகத்தின் பாரம்பரியம் என்பது தேவையான இடங்களில் பாராட்டு மற்றும் கூடவே சில எதிர்மறையான கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. இது இயற்கையானது என்று பிரதமர் குறிப்பிட்டார். 14 ஆவது தடவையாக குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்க மக்கள் வாய்ப்பு வழங்கியதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், குடிமக்களுக்கு தனது மரியாதைக்குரிய நன்றியைத் தெரிவித்ததுடன், கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவரையும் தங்கள் எண்ணங்களால் விவாதங்களைச் செழுமைப்படுத்தியதற்காக பாராட்டினார்.

இந்தியா - இலங்கை கூட்டறிக்கை: எதிர்காலத்திற்கான கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு

December 16th, 03:26 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயகவும் இன்று (2024 டிசம்பர் 16) புதுதில்லியில் சந்தித்தபோது, விரிவான, பயனுள்ள விவாதங்களை நடத்தினர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024- இன் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

December 09th, 11:00 am

ராஜஸ்தான் ஆளுநர் திரு ஹரிபாவ் பகடே அவர்களே, மாநில முதலமைச்சர் திரு பஜன்லால் ஜி சர்மா அவர்களே, ராஜஸ்தான் அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தொழில்துறை நண்பர்களே, பல்வேறு நாடுகளின் தூதர்களே, தூதரகப் பிரதிநிதிகளே, பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே

ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

December 09th, 10:34 am

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024 மற்றும் ராஜஸ்தான் உலகளாவிய வர்த்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், ராஜஸ்தானின் வெற்றிப் பயணத்தில் இன்று மற்றுமொரு சிறப்பான நாள் என்று குறிப்பிட்டதோடு ஜெய்ப்பூரில் உள்ள பிங்க் சிட்டியில் நடைபெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சி மாநாடு 2024-ல் பங்கேற்ற தொழில்துறை மற்றும் வர்த்தகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், பிரதிநிதிகளுக்கு வாழ்த்தும் தெரிவித்தார். இந்தப் பிரம்மாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக ராஜஸ்தான் அரசையும் அவர் பாராட்டினார்.

இந்தியா-கரிகாம் 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்

November 21st, 02:15 am

எனது நண்பர்கள், அதிபர் இர்பான் அலி, பிரதமர் டிக்கோன் மிட்செல் ஆகியோருடன் இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கரிகாம் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன். குறிப்பாக, இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு

November 21st, 02:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல் ஆகியோர் 20 நவம்பர் 2024 அன்று ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற 2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கினர். இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக கயானா அதிபர் இர்பான் அலிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். முதலாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு, 2019-ல் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் கயானா அதிபர் மற்றும் கிரெனடா பிரதமர் ஆகியோரும் கலந்து கொண்டனர்: