பீகாரில் ரூ. 2,192 கோடி செலவில் பக்தியார்பூர் – ராஜ்கீர்-திலையா ரயில்வே வழித்தடத்தை இரட்டிப்பாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

September 24th, 03:05 pm

பீகாரில் ரூ. 2,192 கோடி செலவில் பக்தியார்பூர் – ராஜ்கீர்-திலையா ரயில்வே வழித்தடத்தை இரட்டிப்பாக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பீகார் மாநிலம் கயாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 22nd, 12:00 pm

மாண்புமிகு பீகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அவர்களே; பிரபலமான முதல்வர் நிதிஷ் குமார் அவர்களே; மத்திய அமைச்சரவையில் எனது சகாக்கள், ஜிதன் ராம் மஞ்சி அவர்களே, ராஜீவ் ரஞ்சன் சிங் அவர்களே, சிராக் பாஸ்வான் அவர்களே, ராம் நாத் தாக்கூர் அவர்களே, நித்யானந்த் ராய் அவர்களே, சதீஷ் சந்திர துபே அவர்களே, ராஜ் பூஷண் சவுத்ரி அவர்களே; துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி அவர்களே மற்றும் விஜய் குமார் சின்ஹா அவர்களே; பீகார் அரசின் அமைச்சர்களே; என் சக நாடாளுமன்ற உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹா அவர்களே; இதர நாடாளுமன்ற உறுப்பினர்களே மற்றும் பீகாரின் எனது அன்பான சகோதர சகோதரிகளே!

பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநிலம் கயாவில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைத்தார்

August 22nd, 11:20 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் மாநிலம் கயாவில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிவுற்ற திட்டங்களையும் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், விஷ்ணுபாத் கோவில் அமைந்துள்ள மகத்தான இடமாகவும், ஞானம், சுதந்திரம் ஆகியவற்றுக்கான புனிதத் தலமாகவும் திகழும் கயாவிற்கு, வணக்கம் செலுத்துவதுடன் அங்கு வசிக்கும் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். ஆன்மீகம் மற்றும் அமைதிக்கான தலமாக கயா திகழ்கிறது என்று அவர் கூறினார். இந்தப் புனிதமான மண்ணில் புத்தர் ஞானோதயம் பெற்று உன்னத நிலையை அடைந்ததாகக் குறிப்பிட்டார். கயா நகரம் வளமான மற்றும் தொன்மையான ஆன்மீகம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வாழ்த்து தெரிவிக்கும் போது கயாவை மிகுந்த மரியாதையுடன் குறிப்பிடுவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இத்தகைய உணர்வுபூர்வமான வகையில் மரியாதை செலுத்துவதற்காக பீகார் மாநில அரசுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். மத்திய அரசும், பீகார் மாநில அரசும், கயாவின் விரைவான வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.