‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுங்கள்’ – ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி சுதேசி பெருமையுடன் பண்டிகைகளைக் கொண்டாட வலியுறுத்துகிறார்.

August 31st, 11:30 am

இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பாதுகாப்புப் படையினர் மற்றும் குடிமக்களுக்கு பிரதமர் மோடி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் விளையாட்டு நிகழ்வுகள், சூரிய சக்தி, ‘ஆபரேஷன் போலோ’ மற்றும் இந்திய கலாச்சாரத்தின் உலகளாவிய பரவல் போன்ற முக்கியமான தலைப்புகளையும் அவர் தொட்டார். பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் முக்கியத்துவத்தையும், தூய்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் குடிமக்களுக்கு நினைவூட்டினார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

August 27th, 07:35 am

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

குஜராத்தின் அகமதாபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்

August 25th, 06:42 pm

இன்று, நீங்கள் அனைவரும் உண்மையிலேயே ஒரு அருமையான சூழலை உருவாக்கியுள்ளீர்கள். இந்த லட்சக்கணக்கான மக்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது எனக்கு எவ்வளவு அதிர்ஷ்டம். நான் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும், அது ஒருபோதும் போதாது

குஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்

August 25th, 06:15 pm

குஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விநாயகர் சதுர்த்தியின் உற்சாகத்தில் ஒட்டுமொத்த நாடும் மூழ்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். விநாயகரின் ஆசிகளுடன், குஜராத்தின் முன்னேற்றம் சார்ந்த பல வளர்ச்சித் திட்டங்களின் மங்களகரமான தொடக்கத்தை குறிக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மக்களின் காலடியில் பல திட்டங்களை அர்ப்பணிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த வளர்ச்சி சார்ந்த முயற்சிகளுக்காக அனைத்து குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

குஜராத் மாநிலம் தாஹோத் நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு

May 26th, 11:45 am

குஜராத் மாநில முதலமைச்சர் திரு. பூபேந்திர பாய் அவர்களே, ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, குஜராத் மாநில அமைச்சரவையைச் சேர்ந்த எனது அனைத்து சகாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பிற சிறப்புமிக்க பிரமுகர்கள் மற்றும் தாஹோத் நகரத்தைச் சேர்ந்த எனது அன்பான சகோதர சகோதரிகளே!

குஜராத்தின் தாஹோத்தில் ரூ.24,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்

May 26th, 11:40 am

பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று குஜராத்தின் தாஹோத்தில் ரூ.24,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த பல திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், 2014-ம் ஆண்டு மே 26ந் தேதி, பிரதமராக முதன்முதலில் பதவியேற்ற நாளாகக் கருதப்படுவதால், இந்த நாள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார். தேசத்தை வழிநடத்தும் பொறுப்பை தன்னிடம் ஒப்படைத்த குஜராத் மக்களின் அசைக்க முடியாத ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார். இந்த நம்பிக்கையும் ஊக்கமும் நாட்டிற்கு இரவும் பகலும் சேவை செய்வதற்கான தமது அர்ப்பணிப்பைத் தூண்டியுள்ளது என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். பல ஆண்டுகளாக, இந்தியா, கற்பனை செய்ய முடியாத முடிவுகளை எடுத்து, பல தசாப்தங்களாக நிலவிய பழமையான தடைகளிலிருந்து விடுபட்டு, ஒவ்வொரு துறையிலும் முன்னேறியுள்ளது. இன்று, நாடு விரக்தி மற்றும் இருள் நிறைந்த சகாப்தத்திலிருந்து பிரகாசமான, நம்பிக்கையின் புதிய யுகத்திற்கு எழுந்துள்ளது என்று அவர் கூறினார்.

மும்பையில் நடைபெற்ற அபிஜத் மராத்தி மொழி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 05th, 07:05 pm

மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, துணை முதலமைச்சர்கள் தேவேந்திர ஃபட்னவிஸ் அவர்களே, அஜித் பவார் அவர்களே, மத்திய அரசில் உள்ள எனது சகாக்களே, தனது பாடல் மூலம் பல தலைமுறைகளில் முத்திரை பதித்த ஆஷா அவர்களே, புகழ்பெற்ற நடிகர்கள் பாய் சச்சின் அவர்களே, நம்தியோ காம்ப்ளே அவர்களே, சதானந்த் மோரே அவர்களே, மகாராஷ்டிர அரசின் அமைச்சர்களான பாய் தீபக் அவர்களே, மங்கள் பிரபாத் லோதா அவர்களே, பிஜேபி கட்சியின் மும்பைத் தலைவர் பாய் ஆஷிஷ் அவர்களே, இதர பிரமுகர்களே, சகோதர, சகோதரிகளே!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற அபிஜத் மராத்தி மொழி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்

October 05th, 07:00 pm

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மராத்தி மொழிக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். இந்தத் தருணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, மராத்தி மொழி பேசும் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை அங்கீகரித்ததோடு, மகாராஷ்டிராவின் கனவை நிறைவேற்றுவதில் பங்களிப்பதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மகாராஷ்டிர மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இந்த வரலாற்று சாதனையின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் தெரிவித்தார். மேலும், பெங்காலி, பாலி, பிராகிருதம் மற்றும் அசாமி மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்த பிரதமர், இந்த மொழிகளுடன் தொடர்புடைய மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

We will leave no stone unturned in fulfilling people’s aspirations: PM Modi in Bhubaneswar, Odisha

September 17th, 12:26 pm

PM Modi launched Odisha's 'SUBHADRA' scheme for over 1 crore women and initiated significant development projects including railways and highways worth ₹3800 crore. He also highlighted the completion of 100 days of the BJP government, showcasing achievements in housing, women's empowerment, and infrastructure. The PM stressed the importance of unity and cautioned against pisive forces.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பெண்களை மையமாகக் கொண்ட மிகப்பெரிய திட்டமான 'சுபத்ரா' திட்டத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்

September 17th, 12:24 pm

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஒடிசா அரசின் முன்னோடித் திட்டமான 'சுபத்ரா' திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.09.2024) தொடங்கி வைத்தார். இது பெண்களை மையமாகக் கொண்ட மிகப்பெரிய திட்டமாகும். மேலும் இது 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நிதி பரிமாற்றத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். ரூ.2800 கோடிக்கும் அதிக மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய திரு நரேந்திர மோடி , ரூ.1,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சுமார் 14 மாநிலங்களில் பிரதமரின் கிராம்பபுற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 10 லட்சம் பயனாளிகளுக்கு முதல் தவணை உதவியை பிரதமர் விடுவித்தார். நாடு முழுவதும் இருந்து வீட்டு வசதித் திட்டத்தின் 26 லட்சம் பயனாளிகளுக்கான கிரகப் பிரவேச கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார். பயனாளிகளுக்கு வீட்டுச் சாவிகளையும் அவர் வழங்கினார். பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தில் கூடுதல் வீடுகளின் கணக்கெடுப்பு, பிரதமரின் நகர்ப்புற நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் 2.0-ன் செயல்பாட்டு வழிகாட்டுதல்களுக்கான ஆவாஸ் + 2004 (Awaas+ 2024) செயலியை அவர் அறிமுகப்படுத்தினார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

September 07th, 09:00 am

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

விண்வெளித் துறை சீர்திருத்தங்களால் தேசத்தின் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்: பிரதமர் மோடி 'மன் கீ பாத்' (மனதின் குரல்)

August 25th, 11:30 am

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இன்று மீண்டும் ஒருமுறை தேசத்தின் சாதனைகள், நாட்டுமக்களின் கூட்டு முயற்சிகள் ஆகியவை பற்றிய உரையாடல்களே. 21ஆம் நூற்றாண்டு பாரதத்திலே ஏராளமான விஷயங்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் அஸ்திவாரத்திற்கு உரம் சேர்த்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, இந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று, நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் நமது முதல் தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடினோம். நீங்களும் இதைக் கொண்டாடியிருப்பீர்கள். மீண்டும் ஒருமுறை சந்திரயான்–3இன் வெற்றியை நினைந்து களித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். கடந்த ஆண்டு இதே நாளில் தான் சந்திரயான்-3, நிலவின் தென்பாகத்தில், சிவசக்திப் புள்ளியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. பாரதம் இந்த கௌரவம் மிக்க சாதனையைப் படைத்த முதல் தேசமானது.

காணொலி மூலம் வேலைவாய்ப்பு மேளாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 26th, 11:04 am

இன்றைய வேலைவாய்ப்பு மேளாவில் அரசுப் பணிகளுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் கடுமையான உழைப்புக்குப் பிறகு இந்த வெற்றியை அடைந்துள்ளீர்கள். லட்சக்கணக்கான போட்டியாளர்களில் இருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்; எனவே, இந்த வெற்றி உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் உரை

September 26th, 10:38 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (26.09.2023) வேலைவாய்ப்புத் திருவிழாவில் (ரோஜ்கர் மேளா) உரையாற்றினார். புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 51,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை காணொலி மூலம் பிரதமர் வழங்கினார். தபால் துறை, தணிக்கை மற்றும் கணக்குத் துறை, அணுசக்தித் துறை, வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் அரசுப் பணியில் சேரும் வகையில், நாடு முழுவதும் 46 இடங்களில் வேலைவாய்ப்புத் திருவிழா நடைபெற்றது.

The egoistic Congress-led Alliance intends to destroy the composite culture of Santana Dharma in both Rajasthan & India: PM Modi

September 25th, 04:03 pm

PM Modi addressed the Parivartan Sankalp Mahasabha in Jaipur, Rajasthan. While addressing the event PM Modi recalled Pt. Deendayal Upadhyaya on his birth anniversary. He said, “It is his thoughts and principles that have served as an inspiration to put an end to the Congress-led misrule in Rajasthan.

PM Modi addresses the Parivartan Sankalp Mahasabha in Jaipur, Rajasthan

September 25th, 04:02 pm

PM Modi addressed the Parivartan Sankalp Mahasabha in Jaipur, Rajasthan. While addressing the event PM Modi recalled Pt. Deendayal Upadhyaya on his birth anniversary. He said, “It is his thoughts and principles that have served as an inspiration to put an end to the Congress-led misrule in Rajasthan.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவையில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 19th, 01:50 pm

இது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தொடக்க மற்றும் வரலாற்று அமர்வு ஆகும். மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மக்களவையில் பிரதமர் உரையாற்றினார்

September 19th, 01:18 pm

அவையில் உரையாற்றிய பிரதமர், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் அமர்வு நடைபெறுவதாகக் குறிப்பிட்டு, இந்த நிகழ்வில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாளன்று சிறப்பு அமர்வில் அவையில் உரையாற்ற வாய்ப்பு வழங்கிய மக்களவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்த அவர், உறுப்பினர்களுக்கு அன்பான வரவேற்பளித்தார். இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குச் செல்வதன் மூலம் எதிர்காலத்திற்கான உறுதியுடன் இந்தியா முன்னேறி வரும் நிலையில், இது அமிர்த காலத்தின் விடியல் என்று குறிப்பிட்டார். அண்மைக்கால சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், அறிவியல் துறையில் சந்திரயான் 3-ன் வெற்றி மற்றும் ஜி20 அமைப்பு மற்றும் உலக அளவில் அதன் தாக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். இந்தியாவுக்குத் தனித்துவமான ஒரு வாய்ப்பு இருப்பதாகவும், இந்த வெளிச்சத்தில், நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். விநாயகர் சதுர்த்தியின் மங்களகரமான நிகழ்வைக் குறிப்பிட்ட பிரதமர், செழிப்பு, மங்களம், பகுத்தறிவு மற்றும் ஞானத்தின் கடவுள் விநாயகர் என்று கூறினார். தீர்மானங்களை நிறைவேற்றி, புதிய உற்சாகத்துடனும் சக்தியுடனும் புதிய பயணத்தைத் தொடங்க வேண்டிய தருணம் இது என்று பிரதமர் மேலும் கூறினார். விநாயகர் சதுர்த்தி மற்றும் புதிய தொடக்கத்தை முன்னிட்டு லோகமான்ய திலகரை நினைவு கூர்ந்த பிரதமர், சுதந்திரப் போராட்டத்தின் போது, லோகமான்ய திலகர் விநாயகர் சதுர்த்தியை நாடு முழுவதும் சுயராஜ்ஜிய சுடர் ஏற்றுவதற்கான ஊடகமாக மாற்றினார் என்று கூறினார். இன்று நாம் அதே உத்வேகத்துடன் நகர்கிறோம் என்று திரு மோடி கூறினார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

September 19th, 08:50 am

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 18th, 11:52 am

நமது நாட்டின் 75 ஆண்டுகால நாடாளுமன்றப் பயணத்தையும், புதிய அவைக்குள் நுழைவதற்கு முன்பு மீண்டும் அந்த உத்வேகமூட்டும் தருணங்களையும் நினைவுகூரும் இந்த சந்தர்ப்பத்தின் பின்னணியில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்திலிருந்து விடைபெறுகிறோம். சுதந்திரத்திற்கு முன்பு, இந்த சபை இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்று அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, இது நாடாளுமன்ற மாளிகை என்று அழைக்கப்பட்டது. இந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான முடிவு வெளிநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் எடுக்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் இந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்தில் எனது சக நாட்டு மக்களின் வியர்வை சிந்தப்பட்டது, இந்த உண்மையை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. எனது சக நாட்டு மக்களின் கடின உழைப்பு இதில் செலுத்தப்பட்டது, அந்த பணமும் எனது நாட்டு மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது என்று பெருமையுடன் கூறுவோம்.