பின்லாந்து அதிபரின் அரசுமுறைப் பயணம் குறித்த இந்திய – பின்லாந்து கூட்டறிக்கை

March 05th, 08:03 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பின்லாந்து அதிபர் டாக்டர் அலெக்சாண்டர் ஸ்டப், 2026 மார்ச் 4-7 வரை இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பின்லாந்தின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் திருமிகு சாரி முல்தாலா, வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மத்தியாஸ் மார்டினென் மற்றும் அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் அவருடன் வந்துள்ளது.

Marks, skills, balance, dreams... PM Modi keeps it real with students at Pariksha Pe Charcha!

February 06th, 10:21 am

PM Modi interacted with students during the 9th edition of Pariksha Pe Charcha at his residence in Delhi, turning conversations around exams into a fun, friendly and stress-free experience. From smart exam preparation and following one’s own path to poetry, sports, balance in life, time management and the dream of a Viksit Bharat by 2047, the interaction has something for everyone.

பரீக்ஷா பே சர்ச்சா 2026 நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்

February 06th, 10:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06.02.2026) 9-வது பரிக்ஷா பே சர்ச்சா எனப்படும் தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்வின் போது மாணவர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் தில்லியில் உள்ள தமது இல்லத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுடன் முறைசாரா கலந்துரையாடலை மேற்கொண்டார்.

This year's budget will give India's Reform Express new energy and new momentum: PM Modi

February 01st, 01:38 pm

In his remarks on Union Budget 2026, PM Modi said the budget is historic, serving as the basis for India’s high flight towards becoming a developed nation by 2047. He noted that the budget presents an ambitious roadmap to accelerate Make in India and the Atmanirbhar Bharat campaign. Reiterating FM Sitharaman’s statement that this is a budget for the Yuva Shakti, the PM congratulated her and her team for presenting a futuristic, sensitive budget.

மத்திய பட்ஜெட் 2026 குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துக்கள்

February 01st, 01:00 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.02.2026) காணொலிக் காட்சியின் மூலம் மத்திய பட்ஜெட் 2026 குறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இதில் பேசிய பிரதமர், இந்த பட்ஜெட் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்தில் செயல்படும் தேசத்தின் உணர்வைப் பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார். மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், ஒரு பெண் நிதி அமைச்சராக, தொடர்ந்து ஒன்பதாவது முறையாக நாட்டின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் பட்ஜெட் மகத்தான வாய்ப்புகளைக் கொண்டது என்றும், இது நிகழ்காலத்தின் கனவுகளை நிறைவேற்றி, இந்தியாவின் பொன்னான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான ஒரு வலுவான அடித்தளமாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

This is the right time to Create In India, Create For The World: PM Modi at WAVES Summit

May 01st, 03:35 pm

At the inaugural address of WAVES 2025, PM Modi called it a landmark moment for the global creative community. He emphasized that the summit unites over 100 nations through storytelling, music, gaming, and innovation, showcasing India's leadership in culture and creativity.

பிரதமர் திரு நரேந்திர மோடி வேவ்ஸ் 2025 உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார்

May 01st, 11:15 am

மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் இந்தியாவின் முதலாவது உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மகாராஷ்டிரா தினம் மற்றும் குஜராத் மாநில தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். அனைத்து சர்வதேச பிரமுகர்கள், தூதர்கள் மற்றும் படைப்பாற்றல் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் வந்திருப்பதை குறிப்பிட்ட பிரதமர், இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் கலைஞர்கள், புதுமைப் படைப்பாளர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் திறமையையும், படைப்பாற்றலையும் கொண்ட உலகளாவிய அமைப்புக்கு அடித்தளம் அமைக்க ஒன்றிணைந்துள்ளனர் என்று அவர் கூறினார். வேவ்ஸ் என்பது ஒரு சுருக்கப்பெயர் மட்டுமே அல்ல என்றும், இது கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய தொடர்பைக் குறிக்கும் ஒரு அலை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த உச்சிமாநாடு திரைப்படங்கள், இசை, கேமிங், அனிமேஷன், கதைசொல்லல் ஆகியவற்றின் விரிவான உலகத்தை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார். கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களை ஒருங்கிணைக்கவும் ஒத்துழைத்து செயல்படவும் உலகளாவிய தளத்தை இது வழங்குகிறது என அவர் கூறினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவரையும் பாராட்டிய பிரதமர், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு விருந்தினர்களை அன்புடன் வரவேற்றார்.

அரசியலமைப்புச் சட்டம் எங்களின் வழிகாட்டி வெளிச்சம்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

December 29th, 11:30 am

நண்பர்களே, அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா நடைபெற இருக்கிறது. இந்த வேளையில், அங்கே சங்கமத்தின் கரையில் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன. சில நாட்கள் முன்பாக நான் பிரயாக்ராஜ் சென்றிருந்த வேளையில், ஹெலிகாப்டர் மூலமாக மொத்த கும்பமேளாவும் நடைபெறவுள்ள இடத்தையும் பார்வையிட்ட போது மனதில் பெரும் நிறைவு உண்டானது. என்னவொரு விசாலம்!! என்னவொரு அழகு!! எத்தனை பிரும்மாண்டம்!! அடேயப்பா!!

இன்று, உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி.

October 27th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே வணக்கம். இன்றைய மனதின் குரலில் உங்கள் அனைவருக்கும் நல்வரவேற்பு. உங்கள் வாழ்க்கையின் மிகவும் நினைவில் கொள்ளத்தக்க கணம் என்ன என்று நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் என்றால், அப்படி ஏராளமாக இருக்கின்றன என்றாலும், இவை அனைத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட கணம் மிகவும் விசேஷமானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளை ஒட்டி, அவர் பிறந்த இடமான ஜார்க்கண்டின் உலிஹாதூ கிராமத்திற்கு நான் சென்ற கணம் தான் அது. இந்தப் பயணம் எனக்குள்ளே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பவித்திரமான இந்த பூமியின் மண்ணை என் நெற்றியில் இட்டுக் கொள்ளும் பெரும்பேறு கிடைத்த, தேசத்தின் முதல் பிரதமர் என்ற சௌபாக்கியம் எனக்கு வாய்க்கப்பெற்றது. அந்தக் கணத்தில் சுதந்திரப் போராட்ட்த்தின் சக்தியை மட்டும் நான் உணரவில்லை, இந்த மண்ணின் சக்தியோடு என்னை நானே இணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் எனக்கு வாய்த்தது. மேற்கொண்ட ஒரு உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வல்லமை இருந்தால், எப்படி அதனால் தேசத்தின் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தையே மாற்றியமைக்க முடியும் என்பதை நான் ஆழமாக உணர்ந்தேன்.

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார்

August 15th, 03:04 pm

பிரதமர் உரையின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

August 15th, 01:09 pm

நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்த தீரமிக்க எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், நாட்டின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கும் நாம் மரியாதை செலுத்தும் இன்றைய தினம் மிகவும் உன்னதமான தருணமாகும். இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடினார்கள், பாரத் மாதா கி ஜே என்ற முழுக்கத்துடனும், துணிச்சலுடனும் தூக்குமேடை ஏறினார்கள். இவர்களின் மனஉறுதியையும், தேச பக்தியையும் நினைவுகூர்வதற்கான விழாவாகும் இது. இந்த சுதந்திர தின விழாவில், நாம் சுதந்திரமாக சுவாசிக்கும் நல்ல தருணத்தை பெற்றிருப்பதற்கு வீரம் செறிந்த இவர்களே காரணமாவார்கள். இவர்களுக்கு நாடு மிகவும் கடன்பட்டுள்ளது. இத்தகைய மகத்தான ஆளுமைகள் ஒவ்வொருவருக்கும் நாம் மரியாதை செலுத்துவோம்.

78-வது சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவின் வருங்காலத்திற்கான லட்சியத்துடன் கூடிய இலக்கை நிர்ணயித்துள்ளார்

August 15th, 10:16 am

78-வது சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவை பல்வேறு துறைகளிலும் உலகின் முன்னணி நாடாக மாற்றுவதற்கு, நாட்டின் வளர்ச்சியை வடிவமைத்து, புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நோக்கில், வருங்காலத்திற்கான தொடர் இலக்குகளை நிர்ணயித்துள்ளார்.

இந்தியா 78வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது

August 15th, 07:30 am

78வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் மோடி தனது உரையில், இந்தியாவின் எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டினார். 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது முதல் மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை வென்றெடுப்பது வரை, இந்தியாவின் கூட்டு முன்னேற்றம் மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளிப்பதையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை புதிய வீரியத்துடன் தொடர்வதாக அவர் பேசினார். புதுமை, கல்வி மற்றும் உலகளாவிய தலைமைத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, 2047க்குள் இந்தியா விக்சித் (வளர்ந்த) பாரதமாக மாறுவதை எதுவும் தடுக்க முடியாது என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

India’s Top Gamers Meet ‘Cool’ PM Modi

April 13th, 12:33 pm

Prime Minister Narendra Modi engaged in a unique interaction with India's top gamers, immersing himself in the world of PC and VR gaming. During the session, Prime Minister Modi actively participated in gaming sessions, showcasing his enthusiasm for the rapidly evolving gaming industry.