தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமரின் காணொலி செய்தி
August 23rd, 11:00 am
தேசிய விண்வெளி தினத்தில் உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். இந்த ஆண்டு, விண்வெளி தினத்தின் கருப்பொருள் ' ஆர்யபட்டாவிலிருந்து ககன்யான் வரை; பண்டைய ஞானத்திலிருந்து எல்லையற்ற சாத்தியக்கூறுகள்' என்பதாகும். இது கடந்த காலத்தின் நம்பிக்கையையும் எதிர்காலத்தின் உறுதியையும் உள்ளடக்கியது. இன்று, இவ்வளவு குறுகிய காலத்தில், தேசிய விண்வெளி தினம் நமது இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும் ஒரு சந்தர்ப்பமாக மாறியுள்ளது என்பதை நாம் காண்கிறோம். இது உண்மையில் தேசத்திற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விஷயமாகும். தேசிய விண்வெளி தினத்தில் விண்வெளித் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும், நமது விஞ்ஞானிகளுக்கும், அனைத்து இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில், பாரதம் 'வானியல் மற்றும் வானியற்பியல் குறித்த சர்வதேச ஒலிம்பியாட்'-ஐ நடத்தியது. இந்தப் போட்டியில், உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 இளைஞர்கள் பங்கேற்றனர். நமது இந்திய இளைஞர்களும் பதக்கங்களை வென்றனர். இந்த ஒலிம்பியாட், விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் தலைமையின் அடையாளமாகும்.தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
August 23rd, 10:30 am
2025-ம் ஆண்டு தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வில், பிரதமர் தமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார், இந்த ஆண்டின் கருப்பொருளான “ஆர்யபட்டாவிலிருந்து ககன்யான் வரை” என்பது, இந்தியாவின் கடந்த காலத்தின் நம்பிக்கையையும் அதன் எதிர்காலத்திற்கான உறுதியையும் பிரதிபலிக்கிறது. குறுகிய காலத்தில், தேசிய விண்வெளி தினம் இந்திய இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் ஈர்ப்பையும் அளிக்கும் ஒரு தருணமாக மாறியுள்ளது, இது தேசிய அளவில் பெருமைக்குரிய விஷயம் என்று அவர் குறிப்பிட்டார். விஞ்ஞானிகள் மற்றும் இளைஞர்கள் உள்பட விண்வெளித் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியா தற்போது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட்டை நடத்துகிறது என்றும், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 இளைஞர்கள் இதில் பங்கேற்பதாகவும் திரு மோடி குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் பல இந்திய பங்கேற்பாளர்கள் பதக்கங்களை வென்றதில் திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த ஒலிம்பியாட் விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய தலைமையின் சின்னம் என்றும் அவர் கூறினார். இளைஞர்களிடையே விண்வெளியில் ஆர்வத்தை மேலும் தூண்டுவதற்காக, இந்திய விண்வெளி ஹேக்கத்தான் மற்றும் ரோபாட்டிக்ஸ் சவால் போன்ற முயற்சிகளை இஸ்ரோ தொடங்கியுள்ளது என்று பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் வெற்றியாளர்களை அவர் வாழ்த்தினார்.விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் உரையாடினார்
August 18th, 08:09 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணத்தை குறிக்கும் வகையில் ஒரு பயனுள்ள உரையாடலை மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது, திரு. சுக்லாவின் விண்வெளி அனுபவங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றங்கள் மற்றும் நாட்டின் லட்சிய திட்டமான விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் - ககன்யான் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.டிரினிடாட் & டொபாகோவில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை
July 04th, 05:56 am
இந்த மாலைப் பொழுதில் உங்கள் அனைவருடனும் இருப்பது எனக்கு மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. பிரதமர் திருமதி. கமலா அவர்களின் அற்புதமான உபசரிப்பு மற்றும் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.பிரதமர் திரு. நரேந்திர மோடி டிரினிடாட் & டொபாகோவில் உள்ள இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் உரையாற்றினார்
July 04th, 04:40 am
டிரினிடாட் - டொபாகோ நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், அந்நாட்டுக் குடியரசின் பிரதமர் திருமதி கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசர், அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியை இந்திய வம்சாவளியினர் அன்புடன் வரவேற்றதுடன், இந்தோ-டிரினிடாடியன் பாரம்பரிய முறைப்படி வண்ணமயமான வரவேற்பும் அளித்தனர்.விண்வெளி ஆய்வுக்கான உலகளாவிய மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 07th, 12:00 pm
புகழ்பெற்ற பிரதிநிதிகள், மதிப்பிற்குரிய விஞ்ஞானிகள், புத்தாக்கக் கண்டுபிடிப்பாளர்கள், விண்வெளி வீரர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள நண்பர்களே,பிரதமர் திரு நரேந்திர மோடி விண்வெளி ஆய்வுக்கான உலகளாவிய மாநாட்டில்(கிளெக்ஸ்-2025) உரையாற்றினார்
May 07th, 11:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.05.2025) காணொலிக் காட்சி மூலம் உலகளாவிய விண்வெளி ஆய்வுக்கான மாநாடான ஜிஎல்இஎக்ஸ் (GLEX) - 2025-ல் உரையாற்றினார். உலகெங்கிலும் இருந்து வந்திருந்த புகழ்பெற்ற பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்களை வரவேற்ற அவர், இந்தியாவின் குறிப்பிடத்தக்க விண்வெளிப் பயணங்கள் குறித்து எடுத்துரைத்தார். விண்வெளி என்பது வெறும் ஒரு இலக்கு மட்டுமல்ல எனவும், ஆர்வம், துணிச்சல், கூட்டு முன்னேற்றம் ஆகியவற்றின் பிரகடனம் என்றும் அவர் கூறினார். 1963-ல் ஒரு சிறிய ராக்கெட்டை செலுத்தியதில் இருந்து சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா மாறியது வரை இந்தியாவின் விண்வெளி சாதனைகள் இந்த உணர்வைப் பிரதிபலிக்கின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்திய ராக்கெட்டுகள் சாதனங்களை மட்டுமல்லாமல் அவை 140 கோடி இந்தியர்களின் கனவுகளையும் சுமந்து செல்கின்றன என்று அவர் குறிப்பிட்டார், இந்தியாவின் விண்வெளி முன்னேற்றங்கள் குறிப்பிடத்தக்க அறிவியல் மைல்கற்கள் எனவும் மனித உணர்வுகள் ஈர்ப்பு விசையை மீற முடியும் என்பதற்கான சான்றுகள் என்றும் அவர் குறிப்பிட்டார். 2014-ல் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்த இந்தியாவின் வரலாற்று சாதனையை அவர் நினைவு கூர்ந்தார். சந்திரயான்-1 சந்திரனில் தண்ணீரைக் கண்டறிய உதவியது என அவர் கூறினார். சந்திரயான்-2 சந்திரனின் மேற்பரப்பின் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட படங்களை வழங்கியது என்றும் சந்திரயான்-3 சந்திரனின் தென் துருவத்தைப் பற்றிய புரிதலை மேம்படுத்தியது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா சாதனை நடவடிக்கையாக குறைந்த நேரத்தில் கிரையோஜெனிக் என்ஜின்களை உருவாக்கியது எனவும் ஒரே பயணத்தில் 100 செயற்கைக்கோள்களைச் செலுத்தியது என்றும், இந்திய ஏவுதள வாகனங்களைப் பயன்படுத்தி 34 நாடுகளுக்கு 400-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டு இரண்டு செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தியது என்பது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய படியாகும் என்றும் இது இந்தியாவின் சமீபத்திய சாதனை எனவும் அவர் தெரிவித்தார்.The World This Week On India
February 18th, 04:28 pm
This week, India reinforced its position as a formidable force on the world stage, making headway in artificial intelligence, energy security, space exploration, and defence. From shaping global AI ethics to securing strategic partnerships, every move reflects India's growing influence in global affairs.தேர்தல் ஆணையம் அவ்வப்போது நமது வாக்குப்பதிவு செயல்முறையை பலப்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி ‘மன் கீ பாத்’தின் போது (மனதின் குரல்)
January 19th, 11:30 am
In the 118th episode of Mann Ki Baat, PM Modi reflected on key milestones, including the upcoming 75th Republic Day celebrations and the significance of India’s Constitution in shaping the nation’s democracy. He highlighted India’s achievements and advancements in space sector like satellite docking. He spoke about the Maha Kumbh in Prayagraj and paid tributes to Netaji Subhas Chandra Bose.புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2025-ல் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
January 12th, 02:15 pm
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான திருவாளர்கள் மன்சுக் மாண்டவியா அவர்களே, தர்மேந்திர பிரதான் அவர்களே, ஜெயந்த் சவுத்ரி அவர்களே, ரக்ஷா காட்ஸே அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் வந்துள்ள எனது இளம் நண்பர்களே! இந்த பாரத் மண்டபம் இந்திய இளைஞர்களின் ஆற்றலாலும், சக்தியாலும் நிரம்பியுள்ளது. இன்று நாடு முழுவதும் சுவாமி விவேகானந்தரை நினைவுகூர்கிறது. அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறது. சுவாமி விவேகானந்தர் நாட்டின் இளைஞர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இளைய தலைமுறையினர் மீது, புதிய தலைமுறையினர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று சுவாமி விவேகானந்தர் அடிக்கடி கூறுவார். எனது தொண்டர்கள் சிங்கங்களைப் போல், இளம் தலைமுறையிலிருந்து வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு காண்பார்கள் என்று அவர் கூறுவார். விவேகானந்தர் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தது போலவே, விவேகானந்தர் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் சொன்ன எல்லாவற்றிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்திய இளைஞர்களுக்காக அவர் என்ன நினைத்தாரோ, என்ன சொன்னாரோ அதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உண்டு. உண்மையில், சுவாமி விவேகானந்தர் இன்று நம்மிடையே இருந்திருந்தால், 21-ம் நூற்றாண்டு இளைஞர்களின் விழிப்புணர்வு பெற்ற சக்தியைக் கண்டு, உங்களின் தீவிர முயற்சிகளைப் பார்த்து, பாரதத்தின் புதிய நம்பிக்கை, புதிய சக்தி ஆகியவற்றால் அவர் பூரிப்படைந்திருப்பார். புதிய கனவுகளுக்கான விதைகளை விதைத்திருப்பார்.வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
January 12th, 02:00 pm
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து 3,000 துடிப்பான இளம் தலைவர்களுடன் அவர் உரையாடலில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இந்திய இளைஞர்களின் துடிப்பான சக்தி, பாரத் மண்டபத்திற்கு உயிர்ப்பையும் சக்தியையும் கொண்டு வந்திருப்பதை எடுத்துரைத்தார். நாட்டின் இளைஞர்கள் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்திருந்த சுவாமி விவேகானந்தரை ஒட்டுமொத்த தேசமும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். தமது சீடர்கள் இளைய தலைமுறையிலிருந்து வருவார்கள் என்றும், அவர்கள் சிங்கங்களைப் போல ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்ப்பார்கள் என்றும் சுவாமி விவேகானந்தர் நம்பினார் என்றும் அவர் கூறினார். சுவாமிஜி இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்ததைப் போல, சுவாமிஜி மீதும், அவரது நம்பிக்கைகள் மீதும் தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக அவர் மேலும் கூறினார். குறிப்பாக இளமை குறித்த அவரது பார்வை குறித்து அவரை முழுமையாக நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார். சுவாமி விவேகானந்தர் இன்று நம்மிடையே இருந்தால், 21-ம் நூற்றாண்டின் இளைஞர்களின் விழிப்புற்ற சக்தியையும் துடிப்பான முயற்சிகளையும் காணும் போது அவர் புதிய நம்பிக்கையால் மகிழ்வார் என்று பிரதமர் கூறினார்.Politics is about winning people's hearts, says PM Modi in podcast with Nikhil Kamath
January 10th, 02:15 pm
Prime Minister Narendra Modi engages in a deep and insightful conversation with entrepreneur and investor Nikhil Kamath. In this discussion, they explore India's remarkable growth journey, PM Modi's personal life story, the challenges he has faced, his successes and the crucial role of youth in shaping the future of politics."பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது முதலாவது போட்காஸ்டில், தொழில்முனைவோர் நிகில் காமத்துடன் தமது வாழ்க்கைப் பாடங்களையும் லட்சியங்களையும் பகிர்ந்துள்ளார்"
January 10th, 02:00 pm
தொழில்முனைவோர் நிகில் காமத் உடனான தனது முதலாவது போட்காஸ்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி தமது குழந்தைப் பருவம், கல்வி மற்றும் அரசியல் வாழ்க்கையை வடிவமைத்த ஆரம்ப அனுபவங்கள் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட போட்காஸ்ட், பிரதமரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. தமது ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்கள் எவ்வாறு தம்மிடம் செல்வாக்கு செலுத்தினார்கள் என்பதையும், இந்த அனுபவங்கள் தேசம் முதலில் என்ற சித்தாந்தத்திற்கும் அவரது அர்ப்பணிப்புக்கும் எவ்வாறு அடித்தளம் அமைத்தன என்பதையும் அவர் விவரித்தார்.இந்தியா மீண்டும் நிலவுக்குச் செல்கிறது: இந்த முறை நிலவில் இறங்கிய பிறகு மீண்டும் பூமிக்கு வர உள்ளது இந்திய விண்கலம்
September 18th, 04:32 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நிலவில் வெற்றிகரமாக இறங்கிய பின்னர் பூமிக்கு திரும்புவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிலவின் மாதிரிகளை சேகரித்து பூமியில் பகுப்பாய்வு செய்யவும் சந்திரயான்-4 என்று பெயரிடப்பட்ட பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.கோவாவில் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 26th, 10:59 pm
கோவா ஆளுநர் திரு. பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை அவர்களே, முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்களே, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்களே, மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த எனது பிற சகாக்களே, மேடையில் உள்ள பிரதிநிதிகளே, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா அவர்களே, அனைத்து வீரர்கள், உதவி ஊழியர்கள், பிற அதிகாரிகள் மற்றும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்துள்ள இளம் நண்பர்களே…, இந்திய விளையாட்டுகளின் பிரமாண்ட பயணம் இப்போது கோவாவை அடைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வண்ணங்களும், உற்சாகமும் உள்ளது. கோவாவின் காற்றில் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது. 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்கோவாவில் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் தொடங்கி வைத்தார்
October 26th, 05:48 pm
கோவாவின் மார்கோவாவில் உள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் 28 இடங்களில் 43-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.மிஷன் ககன்யான் டிவி டி1 சோதனை கலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு
October 21st, 12:56 pm
மிஷன் ககன்யான் டிவி டி 1 சோதனை கலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இது தேசத்தை ஒரு படி மேலே முன்னெடுத்துச் செல்கிறது என்று அவர் புகழ்ந்துரைத்துள்ளார்.ககன்யான் திட்டத்தின் தயார்நிலை குறித்து பிரதமர் ஆய்வு
October 17th, 01:53 pm
இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகளின் எதிர்காலத்திட்டங்கள் குறித்தும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.