2025 ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அர்ஜூன் எரிகைசிக்கு பிரதமர் வாழ்த்து
December 29th, 03:38 pm
தோஹாவில் நடைபெற்ற ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அர்ஜூன் எரிகைசிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய மன உறுதி குறிப்பிடத்தக்கது என்றும், எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற தாம் வாழ்த்துவதாகவும் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார்.2025 ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கொனேரு ஹம்பிக்கு பிரதமர் வாழ்த்து
December 29th, 03:35 pm
தோஹாவில் நடைபெற்ற 2025 ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற கொனேரு ஹம்பிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். போட்டியில் அவருடைய அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்றும், எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற தாம் வாழ்த்துவதாகவும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.