பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் இரங்கல்
June 06th, 06:22 pm
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் நேரிட்ட விபத்து குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.ஜனவரி 5 ஆம் தேதி பஞ்சாப் செல்லும் பிரதமர், ரூ. 42,750 கோடிக்கும் மேல் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
January 03rd, 03:48 pm
ஜனவரி 5, 2022-ல் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் செல்லும் பிரதமர் திரு நரேந்திர மோடி, பிற்பகல் 1 மணியளவில் ரூ. 42,750 கோடிக்கும் மேல் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தில்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச்சாலை; அமிர்தசரஸ் – உனா நெடுஞ்சாலையை 4 வழிப்பாதையாக மேம்படுத்துதல்; பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த முகேரியன்-தல்வாரா புதிய அகல ரயில்பாதை; பெரோஸ்பூரில் முதுநிலை மருத்துவ மையத்தின் கிளை மையம் மற்றும் கபூர்தலா மற்றும் ஹோஷியார்பூரில் 2 புதிய மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.PM Modi celebrates Diwali with Soldiers
November 11th, 05:02 pm