இந்திய அரசுக்கும் பிலிப்பைன்ஸ் அரசுக்கும் இடையே ஓர் உத்திசார் கூட்டாண்மையை நிறுவுவது குறித்த பிரகடனம்
August 05th, 05:23 pm
இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பிலிப்பைன்ஸ் அதிபர் மேதகு திரு. ஃபெர்டினாண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியர், 2025 ஆகஸ்ட் 4 முதல் 8 வரை இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதிபர் திரு மார்கோஸுடன் முதல் பெண்மணி திருமதி லூயிஸ் அரனெட்டா மார்கோஸ் மற்றும் பிலிப்பைன்ஸின் அமைச்சர்கள் மற்றும் உயர் மட்ட வணிகக் குழு உள்ளிட்ட அலுவலர்கள் குழுவும் வந்துள்ளது.பிலிப்பைன்ஸ் அதிபரின் இந்திய வருகையால் ஏற்பட்டுள்ள பலன்கள்
August 05th, 04:31 pm
இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே உத்திசார் கூட்டாண்மையை ஏற்படுத்துவது குறித்த பிரகடனம்.பிலிப்பைன்ஸ் அதிபருடனான சந்திப்பு குறித்து பிரதமரின் கருத்துகள்
August 05th, 03:45 pm
இந்தியா வந்துள்ள தங்களுக்கும் தங்களது பிரதிநிதிகள் குழுவையும் நான் வரவேற்கிறேன். இன்று இருநாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகளைக் குறிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இது. இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையேயான உறவுகளை நாம் உத்திசார் கூட்டாண்மையாக மேம்படுத்த வேண்டும். பாதுகாப்புத் துறையில் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சரியான தருணம் இது. கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு மேம்பட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து இன்று நாம் எடுக்கும் முடிவு, மிகவும் வெற்றிகரமாக இருக்கும்.பிலிப்பைன்ஸ் அதிபருடனான செய்தியாளர்கள் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட ஊடக செய்தி
August 05th, 11:06 am
முதலாவதாக, இந்தியாவிற்கு அதிபர் மற்றும் அவரது குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன். இந்த ஆண்டு, இந்தியாவும் பிலிப்பைன்ஸும் தூதரக உறவுகளின் 75 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றன. இந்த சூழலில், இந்தப் பயணம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நமது தூதரக உறவுகள் சமீபத்தியவை என்றாலும், நமது நாகரிக தொடர்பு பண்டைய காலத்துடன் தொடர்புடையது. ராமாயணத்தின் பிலிப்பைன்ஸ் பதிப்பு - மஹாராடியா லாவானா நமது ஆழமான வேரூன்றிய கலாச்சார பிணைப்புக்கு உள்ள சான்றாகும்.பிரதமர் திரு நரேந்திர மோடி, பிலிப்பைன்ஸ் அதிபர் திரு ஃபெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியருடன் தொலைபேசி வாயிலாக உரையாடல்
August 05th, 02:44 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியரை இன்று தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு உரையாடினார்.