திரு ஃபௌஜா சிங் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

July 15th, 11:53 am

அளப்பரிய ஆளுமையும், அசைக்க முடியாத உணர்வும் கொண்டு பல தலைமுறைகளுக்கு உத்வேகமளித்த திரு ஃபௌஜா சிங் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். அசைக்க முடியாத உறுதியுடன் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்தவர் அவர் என்று பிரதமர் பாராட்டியுள்ளார்.