80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
August 15th, 04:44 pm
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. மோடி இன்று செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். தனது உரையில், கடந்த 12 ஆண்டுகளில் உற்பத்தித் துறை, டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் குடிமக்களுக்கான சேவைகள் வழங்குதல் ஆகிய துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையை அவர் முன்வைத்தார். அத்துடன், நாட்டின் லட்சியங்களை அடைவதற்கான ஏழு முக்கிய துறைகளை உள்ளடக்கிய 'சப்த தாரா' (Sapta Dhara) எனும் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார்.Cabinet approves continuation of the PM-KISAN Scheme from 2026-27 to 2030-31 with a Financial Outlay of Rs.3.15 lakh crore
July 31st, 04:13 pm
The Union Cabinet, chaired by PM Modi, has approved the continuation of the PM-KISAN Scheme with an outlay of ₹3.15 lakh crore for 2026–31. The scheme will continue providing direct income support to eligible farmers, strengthening agricultural investment and rural prosperity.இந்தியா – பிரிட்டன் விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தம், சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தக் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
July 15th, 12:58 pm
இந்தியா – பிரிட்டன் விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தம், சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து, இது இந்தியா – பிரிட்டன் இடையேயான கூட்டாண்மையில் சிறந்த மைல்கல் என்று விவரித்துள்ளார். இந்த இரண்டு ஒப்பந்தங்களும் இந்தியா – பிரிட்டன் இடையே பொருளாதார தொடர்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளின் பகிரப்பட்ட இலக்குகளை தங்களுடைய மக்களுக்கான உறுதியான வாய்ப்புகளாக மாற்றும் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.India-New Zealand relationship built on enduring friendship, shared values, common commitment: PM Modi in Auckland
July 11th, 01:15 pm
PM Modi addressed a vibrant community event in Auckland, praising the Indian diaspora as a strong bridge between India and New Zealand. He highlighted the elevation of bilateral ties to a Strategic Partnership, celebrated 100 years of sporting ties between the two countries and underscored the shared heritage and deepening partnership between the two nations.நியூசிலாந்தில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
July 11th, 12:35 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.07.2026) ஆக்லாந்தில் நடைபெற்ற “கியா ஓரா மோடி” என்ற நிகழ்வில், நியூசிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியினர் பெருமளவில் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றினார். நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். 10,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரின் அரவணைப்பு, ஆற்றல், உற்சாகத்தால் இக்கூட்டம் நிறைந்திருந்தது.India-New Zealand friendship has gained new momentum and a new direction: PM Modi during the Gala Lunch
July 11th, 12:32 pm
PM Modi attended a special gala luncheon hosted by New Zealand Prime Minister Christopher Luxon. Addressing the gathering, PM Modi welcomed the elevation of bilateral ties to the level of a Strategic Partnership. He said the India-New Zealand FTA would open new opportunities for both countries and help achieve the goal of doubling bilateral trade by 2030.இந்தியா - நியூசிலாந்து வெற்றிக் கூட்டணி என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
July 11th, 12:30 pm
இந்தியா-நியூசிலாந்து: ஒரு வெற்றிக் கூட்டணி என்ற கருப்பொருளில், நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு மதிய விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் அரசியல், வணிகம், தொழில்துறை, கல்வித்துறை, தொழில்நுட்பம், விளையாட்டு, கலை ஆகிய துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.ராஜஸ்தான் மாநிலம் பாலோத்ராவில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
July 04th, 12:50 pm
இந்தக் கடும் வெயிலிலும், இத்தனை இடங்களில் இவ்வளவு பிரம்மாண்டமான முறையில் நீங்கள் கூடியிருந்து எங்களுக்கு ஆசி வழங்குவது, பி.ஜே.பி. அரசாங்கத்தின் முயற்சிகளின் மீது நீங்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. ராஜஸ்தான் மண்ணின் இந்த ஆதரவுக்கும், பாசத்திற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி, ராஜஸ்தானின் பலோத்ரா மாவட்டத்தில் சுமார் ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
July 04th, 12:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.07.2026) ராஜஸ்தானின் பலோத்ராவில் சுமார் ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கடும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டதற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர், இந்த மாபெரும் மக்கள் திரளை தற்போதைய ஆட்சிக்குக் கிடைத்த ஒரு மகத்தான அங்கீகாரம் என்று குறிப்பிட்டார். அரசின் முயற்சிகளின் மீது வைத்துள்ள உயர்ந்த நம்பிக்கையைத் தெளிவாக வெளிக்காட்டும் இந்த மகத்தான ஆதரவிற்காக, ராஜஸ்தான் மண்ணிற்கு முற்றிலும் கடமைப்பட்டுள்ளதாக திரு நரேந்திர மோடி கூறினார்.டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களுக்கு அதிகாரமளித்து, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அடித்தளத்தை வலுப்படுத்தியுள்ளது – பிரதமர் திரு நரேந்திர மோடி
July 01st, 12:04 pm
டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் 11 ஆண்டுகால நிறைவு குறித்து இன்று குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, நிர்வாகம், பொதுச் சேவை வழங்கல், குடிமக்களின் வாழ்க்கை ஆகியவற்றில் அது ஏற்படுத்தியுள்ள மாற்றத்தக்க தாக்கத்தை எடுத்துரைத்துள்ளார். டிஜிட்டல் இந்தியா, நிர்வாகத்தை மேலும் வெளிப்படையானதாகவும், திறன்மிக்கதாகவும், மக்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றி நாட்டின் அனைத்து துறை வளர்ச்சியையும் விரைவுபடுத்தி நிர்வாகத்திற்குப் புதிய வரையறையை ஏற்படுத்தியுள்ளதாக திரு மோடி கூறியுள்ளார். தடையற்ற மின்னணு பணப்பரிவர்த்தனைகள், வெளிப்படையான நேரடி பயன் பரிமாற்றங்கள் முதல் மின்னணு பொது உள்கட்டமைப்பின் விரிவாக்கம் வரை இந்த முன்முயற்சி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலித்துள்ளது என்றும் இது தொழில்நுட்பத்தை எளிமையான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒரு சக்தி மிக்க கருவியாக மாற்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மனதின் குரல் நிகழ்ச்சியின் 135-வது அத்தியாயத்தில் 28.06.2026 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 28th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களோடு இணைவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 2026ஆம் ஆண்டின் முதல் பாதி, நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த இந்த 6 மாதங்களில் நாம் மனதின் குரலிலே, நாட்டுமக்களின் அநேக சாதனைகள் குறித்து விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறோம். ஜூன் மாதத்தில் கூட தேசத்தின் சில சாதனைகள் அரங்கேறியிருக்கின்றன. இவை நாட்டுமக்களை பெருமிதத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இந்த வெற்றிகள் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் தற்சார்போடு தொடர்புடையவை. தற்போது தான் கோல்காத்தாவிலே, கடற்படையோடு தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அங்கே ஐஎன்எஸ் தூனாகிரி, ஐஎன்எஸ் சன்ஷோதக் மற்றும் ஐஎன்எஸ் அக்ரய் ஆகிய போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்தக் கப்பல்களின் வடிவமைப்பும், தயாரிப்பும், அனைத்துமே நம் நாட்டிலேயே ஆனவை.தாரகேஸ்வரில் நடைபெற்ற மேற்கு வங்காள தின விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 20th, 05:13 pm
இன்றைய நிகழ்வு, இந்தப் புதிய திட்டங்களின் தொடக்கம், புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வங்காளத்தின் உறுதிப்பாட்டிற்குச் சான்றாகும். மக்களின் முகத்தில் இருக்கும் இந்த ஒளி, ஒவ்வொரு கிராமத்திலும் காணப்படும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை - உங்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன். ஒரு வாக்கு, ஒரே தேர்தல், எவ்வளவு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதற்கு வங்காளமே மிகச் சிறந்த சாட்சி.ஹூக்ளியில் நடைபெற்ற மேற்கு வங்க தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்
June 20th, 05:00 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நடைபெற்ற மேற்கு வங்க தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியுடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான ஹூக்ளி மாவட்டத்தின் தாரகேஸ்வரில் மாநில அளவிலான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேற்கு வங்கம்: பாரம்பரியம், நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சி என்பது இந்த ஆண்டுக்கான மேற்கு வங்க தினத்தின் கருப்பொருளாகும். இது மாநிலத்தின் கலாச்சாரச் வளம், சமூக நல்லிணக்கம், வளர்ச்சி சார்ந்த விருப்பங்களை பிரதிபலிப்பதாக உள்ளது.ஒடிசா மாநில அரசின் இரண்டு ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 20th, 01:10 pm
நமது ஒடிசா மாநிலம் இந்நாட்களில் கொண்டாட்டங்களின் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. கடந்த வாரம்தான் ராஜா திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஜெகநாதரின் ரத யாத்திரைக்கான ஏற்பாடுகளும் முழு உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன. மயுர்பஞ்சில் நடைபெறவுள்ள பரிபடா ரத யாத்திரை குறித்தும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.PM Modi launches development projects at Pahadpur on the completion of two years of the Odisha Government
June 20th, 01:00 pm
PM Modi participated in a programme marking two years of the Odisha Government in Pahadpur village in Mayurbhanj. The PM wished President Murmu on her birthday, praising her dedication to public service, humility, and commitment to nation-building. In his address, he highlighted the state's rapid development and launched development projects worth over ₹47,600 crore. He announced that Pahadpur will be developed as a Solar Village and also highlighted major investments across infrastructure, industry and energy.ஹூக்ளியில் நடைபெற்ற மேற்கு வங்க தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்
June 19th, 11:54 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நடைபெற்ற மேற்கு வங்க தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியுடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான ஹூக்ளி மாவட்டத்தின் தாரகேஸ்வரில் மாநில அளவிலான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேற்கு வங்கம்: பாரம்பரியம், நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சி என்பது இந்த ஆண்டுக்கான மேற்கு வங்க தினத்தின் கருப்பொருளாகும். இது மாநிலத்தின் கலாச்சாரச் வளம், சமூக நல்லிணக்கம், வளர்ச்சி சார்ந்த விருப்பங்களை பிரதிபலிப்பதாக உள்ளது.Prime Minister hails India-UK Comprehensive Economic and Trade Agreement as a historic milestone for bilateral relations
June 17th, 10:03 pm
PM Modi welcomed the India-UK Comprehensive Economic and Trade Agreement coming into force on 15 July 2026, describing it as a historic milestone in bilateral relations. He noted that the agreement will boost trade and investment, create new opportunities for farmers, workers, MSMEs, startups and innovators, and contribute to the vision of Viksit Bharat 2047.Bharat Innovates is becoming a bridge between Indian talent and European capital: PM Modi in Nice, France
June 14th, 04:36 pm
PM Modi and French President Emmanuel Macron jointly inaugurated Bharat Innovates 2026 in Nice, France. Addressing a gathering, PM Modi highlighted India’s deep-tech revolution and the transformative potential of AI, satellite technology, advanced manufacturing and clean energy. He called for trusted, inclusive and human-centric innovation, while reaffirming India’s vision of becoming a global innovation hub.பாரத் இன்னோவேட்ஸ் 2026 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
June 14th, 03:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனும் இன்று (14.06.2026) நைஸ் நகரில் உள்ள பலே டெஸ் எக்ஸ்போசிஷன்ஸ் அரங்கில் 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' நிகழ்வை கூட்டாகத் தொடங்கி வைத்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வானது, இந்திய ஆழ்தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், உலகளாவிய புத்தாக்க நிதியங்கள், தடம் பதித்த முதலீட்டாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கிறது. இது, உலக முக்கியத்துவம் வாய்ந்த 13 முக்கிய தொழில்நுட்பத் தூண்களின் கீழ், 120 முன்னோடி புத்தொழில் நிறுவனங்களையும் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு நிறுவனங்களையும் முன்வைத்து, இந்தியாவின் முதன்மையான ஆழ்தொழில்நுட்பத்தை உலக அரங்கில் காட்சிப்படுத்துகிறது. இந்நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து 350-க்கும் அதிகமான முன்னணி முதலீட்டாளர்களும் துணிகர மூலதன நிறுவனங்களும் பங்கேற்கின்றனர்.PM Modi reiterates commitment to the agricultural sector
June 11th, 04:19 pm
Prime Minister Shri Narendra Modi today emphasized that our farmer brothers and sisters are the pillars of the country's food security, nutrition, and prosperity, and the government is leaving no stone unturned to make their lives easier. He noted that initiatives like PM-Kisan Samman Nidhi and Fasal Bima Yojana are securing their income and empowering agriculture, while the PM-KUSUM scheme provides accessible solar energy, thereby reducing farming expenditures.