ஏப்ரல் 21 அன்று குடிமைப் பணிகள் தின நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்

April 19th, 01:16 pm

17-வது குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஏப்ரல் 21 அன்று காலை 11 மணியளவில் புதுதில்லி விஞ்ஞான் பவனில் குடிமைப் பணி அதிகாரிகளிடையே உரையாற்றுகிறார். பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான பிரதமரின் விருதுகளையும் அவர் வழங்குவார்.