AI முன்னேற்றங்கள் முதல் T20 உலகக் கோப்பை வரை, பிரதமர் மோடி ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) மூலம் இந்தியாவின் எழுச்சியைக் காட்டுகிறார்
February 22nd, 11:30 am
இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்)-தில், டெல்லியில் நடைபெற்ற இந்திய AI தாக்க உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தனது அனுபவங்களைப் பற்றிப் பேசினார். இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர்கள், உறுப்பு தானம், நதி விழாக்கள், டிஜிட்டல் பாதுகாப்பு, பரிக்ஷா பே சர்ச்சா (தேர்வுகள் பற்றிய விவாதம்) மற்றும் பல முக்கிய தலைப்புகளைத் தொட்டார். பிப்ரவரி 23 ஆம் தேதி, ராஷ்டிரபதி பவனில் 'ராஜாஜி உத்சவ்' கொண்டாடப்படும் என்பதை அவர் எடுத்துரைத்தார். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பிரதமர் அஞ்சலி செலுத்தினார், நாரி சக்தியுடன் (பெண் சக்தி) அவரது ஆழமான தொடர்பைக் குறிப்பிட்டார்.Marks, skills, balance, dreams... PM Modi keeps it real with students at Pariksha Pe Charcha!
February 06th, 10:21 am
PM Modi interacted with students during the 9th edition of Pariksha Pe Charcha at his residence in Delhi, turning conversations around exams into a fun, friendly and stress-free experience. From smart exam preparation and following one’s own path to poetry, sports, balance in life, time management and the dream of a Viksit Bharat by 2047, the interaction has something for everyone.பரீக்ஷா பே சர்ச்சா 2026 நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்
February 06th, 10:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06.02.2026) 9-வது பரிக்ஷா பே சர்ச்சா எனப்படும் தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்வின் போது மாணவர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் தில்லியில் உள்ள தமது இல்லத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுடன் முறைசாரா கலந்துரையாடலை மேற்கொண்டார்.தேர்வு குறித்த உரையாடலில் பங்கேற்குமாறு பிரதமர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்
February 05th, 09:56 pm
பிப்ரவரி 6 அன்று காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ள தேர்வு குறித்த உரையாடல் 26-ல் பங்கேற்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தேர்வு தொடர்பாக மிக ஆர்வமிக்க தலைப்புகள் இடம் பெறும் என்றும் மன அழுத்தம் இல்லாமல் இருப்பதன் முக்கியத்துவம் குறித்தும் கற்பதில் கவனம் செலுத்துவது குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியை தாம் எப்போதும் விரும்புவதாகவும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் பரந்த மனப்பான்மையுடன் உரையாட தமக்கு வாய்ப்புக் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தேர்வுக்குத் தயாராவோம் உரையாடல் சிறப்புப் பகுதியைக் காணுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்
February 03rd, 04:45 pm
இந்திய இளைஞர்களின் கூட்டுணர்வையும் உரையாடலையும் காண்பதற்கு 2026 பிப்ரவரி 6-ம் தேதியன்று நடைபெறும் தேர்வுக்குத் தயாராவோம் சிறப்பு பகுதியைக் காணவருமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி குடிமக்களுக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார்.தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிரதமர் அழைப்பு!
January 07th, 07:05 pm
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆண்டுதோறும் நடத்தி வரும் 'பரிக்ஷா பே சர்ச்சா' (தேர்வு குறித்த கலந்துரையாடல்) நிகழ்ச்சி மீண்டும் நடைபெற உள்ளது.சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
May 13th, 02:36 pm
சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இது அவர்களுடைய உறுதிப்பாடு, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பின் விளைவு ஆகும் என்று கூறினார். இன்றைய நாள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் இந்த சாதனைக்கு உதவிய அனைவரின் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் ஒரு நாள் ஆகும் என்றும் திரு மோடி தெரிவித்துள்ளார்.For me, the nation itself is divine and mankind is a reflection of the divine: PM Modi in Lex Fridman Podcast
March 16th, 11:47 pm
PM Modi interacted with Lex Fridman in a podcast about various topics ranging from fasting to his humble beginnings to AI and more. He stressed on the unifying power of sports and said that they connect people on a deeper level and energize the world. He remarked that the management of Indian elections should be studied worldwide.பிரதமர் திரு நரேந்திர மோடி லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பாட்காஸ்ட் கலந்துரையாடலில் ஈடுபட்டார்
March 16th, 05:30 pm
லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நடத்திய பாட்காஸ்ட் உரையாடலின் முக்கிய அம்சங்கள்மனதின் குரல் நிகழ்ச்சியின் 119-வது அத்தியாயத்தில், 23.02.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 23rd, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இன்றைய நாட்களில் சேம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து இடங்களிலும் கிரிக்கெட்டுக்கான சூழல் நிலவி வருகிறது. கிரிக்கெட்டில் சதம் அடிப்பதில் இருக்கும் புளகாங்கிதம் என்ன என்பதை நாம் அனைவருமே நன்கறிவோம். ஆனால் இன்று நான் உங்களனைவரிடத்திலும் கிரிக்கெட்டைப் பற்றியல்ல, பாரதம் விண்வெளியில் சதம் அடித்திருப்பதைப் பற்றி உரையாட இருக்கிறேன். கடந்த மாதம் தான் இஸ்ரோ விண்ணில் செலுத்திய 100ஆவது செயற்கைக்கோளின் சாட்சியாக தேசமே இருந்தது. இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, மாறாக அன்றாடம் புதிய உச்சங்களைத் ஸ்பரிசிக்கும் நமது உறுதிப்பாட்டையும் அடையாளப்படுத்துகிறது. நமது விண்வெளிப்பயணப் பயணம் மிக எளிய முறையிலே தான் தொடங்கியது. இதிலே ஒவ்வோர் அடியிலும் சவால்கள் இருந்தன. ஆனால், நமது விஞ்ஞானிகள் வெற்றிக்கொடியை நாட்டியபடி தொடர்ந்து முன்னேறினார்கள். காலப்போக்கில் விண்வெளியின் இந்தப் பாய்ச்சலில் நமது வெற்றிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகத் தொடங்கியது. ஏவுகலன் அமைப்பதாகட்டும், சந்திரயானின் வெற்றியாகட்டும், மங்கல்யானாகட்டும், ஆதித்ய எல்-1 அல்லது ஒரே ஒரு ஏவுகலன் மூலமாக, ஒரே முறையில், 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வரலாறுகாணா செயல்பாடாகட்டும், இஸ்ரோவின் வெற்றித்தொடர் மிகவும் பெரியது. கடந்த பத்தாண்டுகளில் சுமார் 460 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றிலே மற்ற நாடுகளின் பல செயற்கைக்கோள்களும் அடங்கும். அண்மை ஆண்டுகளின் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், விண்வெளி விஞ்ஞானிகள் கொண்ட நமது குழுவிலே பெண்சக்தியின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதுதான். இன்று விண்வெளித்துறை நமது இளைஞர்களுக்கு விருப்பமான ஒன்றாக ஆகியிருக்கிறது என்பது மிகுந்த உவகையை எனக்கு அளிக்கிறது. சில ஆண்டுகள் முன்பு வரை இந்தத் துறையில் ஸ்டார்ட் அப் குறித்தோ, தனியார் துறையின் விண்வெளி நிறுவனங்களின் எண்ணிக்கை பல நூற்றுக்கணக்காகும் என்றோ யார் தான் நினைத்தார்கள்!! வாழ்க்கையை விறுவிறுப்பான, சுவாரசியமான வகையில் அனுபவிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு, விண்வெளித்துறை ஒரு மிகச் சிறப்பான தேர்வாக ஆகி வருகிறது.தேர்வு தொடர்பான மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் வெற்றிகரமாக கடந்து வந்த தேர்வு வீரர்களின் அனுபவங்களைக் கேளுங்கள்: பிரதமர்
February 17th, 07:41 pm
தேர்வு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வான தேர்வு குறித்த விவாதம் 2025-ன் சிறப்பு அத்தியாயம் 2025 பிப்ரவரி 18-ம் தேதி காலை 11 மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது. இதில் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் வெற்றிகரமாக கடந்து வந்த இளம் தேர்வு வீரர்கள் இடம் பெறுகின்றனர். தேர்வு தொடர்பான மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றைக் கடந்து வந்த அவர்களின் அனுபவங்கள், உத்திகள், நுண்ணறிவுகள் ஆகியவற்றை இந்த அத்தியாயம் வெளிப்படுத்தும்.தேர்வு நேரத்தில் தேர்வு வீரர்களுக்கு மிகப்பெரிய துணைகளில் ஒன்று நேர்மறை சிந்தனை: பிரதமர்
February 15th, 05:58 pm
தேர்வுக்கான தயாரிப்புகளின் போது மாணவர்களுக்கு ஒரு முக்கிய ஆதரவாக விளங்கும் நேர்மறை சிந்தனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நாளைய ’தேர்வு குறித்த கலந்துரையாடல்’ அத்தியாயத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.ஆரோக்கியம் மற்றும் மன அமைதியைப் பொறுத்தவரை, சத்குரு ஜக்கி வாசுதேவ் எப்போதும் மிகவும் உத்வேகம் அளிக்கும் நபர்களில் ஒருவராகத் திகழ்கிறார்: பிரதமர்
February 14th, 08:15 pm
ஆரோக்கியம் மற்றும் மன அமைதி என்று வரும்போது சத்குரு ஜக்கி வாசுதேவ் எப்போதும் மிகவும் உத்வேகம் அளிக்கும் நபர்களில் ஒருவராகத் திகழ்கிறார் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நான்காவது அத்தியாயத்தை நாளை காணுமாறு கேட்டுக்கொண்டார்.நீரஜ் சோப்ராவின் உடற்தகுதியை மேம்படுத்துவதற்கும் உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு
February 12th, 02:00 pm
ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உடற்தகுதியை மேம்படுத்துவதற்கும் உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கும் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். உடல் பருமனை எதிர்த்துப் போராடி ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுவதன் அவசியத்தை திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.தேர்வுக்குத் தயாராவோம் நிகழ்ச்சியின் அனைத்து தொடர்களையும் காணுமாறு பிரதமர் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்
February 11th, 02:57 pm
தேர்வுக்குத் தயாராவோம் 2025-ன் அனைத்து தொடர்களையும் பார்த்து நமது தேர்வு வீரர்களை ஊக்குவிக்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.மனநல ஆரோக்கியம், நலவாழ்வு குறித்த சிறப்பு தொகுப்பு பிப்ரவரி 12-ம் அன்று தேர்வுக்குத் தயாராவோம் நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது: பிரதமர்
February 11th, 01:53 pm
'தேர்வு வீரர்கள்' விவாதிக்க விரும்பும் பொதுவான தலைப்புகளில் ஒன்று மனநலம் மற்றும் நலவாழ்வு என்பதாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். எனவே, இந்த ஆண்டு தேர்வுக்குத் தயாராவோம் நிகழ்ச்சியில் இந்தத் தலைப்புக்கு என்று சிறப்பான தொகுப்பு உள்ளது. இது நாளை பிப்ரவரி 12- ம் தேதி அன்று ஒளிபரப்பாகும் என்று திரு மோடி மேலும் கூறினார்.புதிய மற்றும் உயிரோட்டமான வடிவத்தில் ‘தேர்வு குறித்த கலந்துரையாடல்’ மீண்டும் வருகிறது: பிரதமர்
February 06th, 01:18 pm
தேர்வு குறித்த கலந்துரையாடல் 2025-ஐப் பார்க்குமாறு அனைத்து தேர்வு வீரர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இது மன அழுத்தமில்லாத தேர்வுகளின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 8 மிகவும் சுவாரஸ்யமான அத்தியாயங்களைக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.தேர்வு வீரர்கள் கலை விழாவுக்குப் பிரதமர் பாராட்டு
January 07th, 07:33 pm
தேர்வு தொடர்பான மன அழுத்தத்திலிருந்து கலை நிகழ்ச்சிகள் மீண்டும் மூலம் மீள்வதற்கான தேர்வு வீரர்கள் (எக்ஸாம் வாரியர்ஸ்) கலை விழாவை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.The bond between students and teachers must be beyond syllabus and curriculum: PM Modi
January 29th, 11:26 am
PM Modi interacted with students, teachers and parents at Bharat Mandapam in New Delhi today during the 7th edition of Pariksha Pe Charcha (PPC). PM Modi urged the students to prepare themselves in advance to deal with stress and pressure situations. He said that students should possess the ability of standing firm against adverse situations and challenges.PM interacts with students, teachers and parents during Pariksha Pe Charcha 2024
January 29th, 11:25 am
PM Modi interacted with students, teachers and parents at Bharat Mandapam in New Delhi today during the 7th edition of Pariksha Pe Charcha (PPC). PM Modi urged the students to prepare themselves in advance to deal with stress and pressure situations. He said that students should possess the ability of standing firm against adverse situations and challenges.