எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 23rd, 10:10 pm
உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்திற்கு வந்துள்ள அனைத்து விருந்தினர்களையும் வரவேற்கிறேன். இந்த கூட்டம் நடத்தப்படும் நேரம் மிகவும் சரியானது. எனவே நான் அதைப் பாராட்டுகிறேன். கடந்த வாரம்தான், செங்கோட்டையிலிருந்து அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களைப் பற்றிப் பேசினேன். இப்போது இந்த மன்றம் அந்த உணர்வின் பலத்தைப் பெருக்குவதாகச் செயல்படுகிறது.புது தில்லியில் நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
August 23rd, 05:43 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் உரையாற்றினார். இந்த நிகழ்வில், உலகத் தலைவர்கள் மன்றத்தில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் பிரதமர் வரவேற்றார். இந்த மன்றக் கூட்டத்தை நடத்த மிகவும் சரியான நேரம் என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இதற்காக ஏற்பாட்டாளர்களைப் பாராட்டினார். கடந்த வாரம் தான் செங்கோட்டையில் இருந்து அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் குறித்துப் பேசியதை அவர் எடுத்துரைத்தார். மேலும் இந்த மன்றம் இப்போது அந்த உணர்வைப் பெருக்கும் சக்தியாகச் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.