மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் 4 மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு பல்தட ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
November 26th, 04:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ரூ.2,781 கோடி மதிப்பிலான ரயில்வே அமைச்சகத்தின் இரண்டு திட்டங்களுக்கு இன்று ஒப்புதல் அளித்தது.இந்தியாவின் ஈரநிலப் பாதுகாப்பு இயக்கத்தில் ஒரு மைல்கல்லாகப் பீகாரின் புதிய ராம்சர் தளங்கள்- பிரதமர் பாராட்டு
September 27th, 06:00 pm
பீகாரின் பக்சர் மாவட்டத்தில் கோகுல் ஜலஷே (448 ஹெக்டேர்), மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உதய்பூர் ஜீல் (319 ஹெக்டேர்) ஆகிய இரண்டு புதிய ராம்சர் தளங்கள் சேர்க்கப்பட்டது, இந்தியாவின் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுக்கு பெருமை சேர்க்கும் தருணம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டியுள்ளார்.இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் பரிசளித்த கடம்ப மரக்கன்றை பிரதமர் நட்டார்
September 19th, 05:24 pm
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் பரிசளித்த கடம்ப மரக்கன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி, எண் 7, லோக் கல்யாண் மார்கில் இன்று நட்டார். “சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மையில் அவர் அதீத ஆர்வம் கொண்டிருக்கிறார். எங்கள் விவாதங்களிலும் இந்தத் தலைப்பு அடிக்கடி இடம்பெறும்”, என்று திரு மோடி குறிப்பிட்டார்.அடுத்த பத்தாண்டுகளுக்கான இந்தியா - ஜப்பான் கூட்டு தொலைநோக்கு: சிறப்பு உத்தி மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை வழிநடத்த எட்டு வழிகாட்டுதல்கள்
August 29th, 07:11 pm
சட்டத்தின் ஆட்சி அடிப்படையில் சுதந்திரமான, வெளிப்படையான, அமைதியான, வளமான, வற்புறுத்தல் இல்லாத இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவும் ஜப்பானும் உள்ளன. நட்பு மற்றும் பரஸ்பர நல்லெண்ணத்தின் நீண்ட பாரம்பரியத்தையும் பொதுவான தொலைநோக்குப் பார்வையையும் கொண்ட இந்தியாவும் ஜப்பானும், அடுத்த பத்தாண்டுகளில் உள் நாட்டிலும் உலகிலும் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வாய்ப்புகளை கூட்டாக வழிநடத்தவும், அந்தந்த நாட்டு இலக்குகளை அடைய உதவவும், நமது நாடுகளையும் அடுத்த தலைமுறை மக்களையும் முன்னெப்போதையும் விட நெருக்கமாகக் கொண்டுவரவும் எங்கள் நோக்கத்தை இதன் மூலம் வெளிப்படுத்துகிறோம்.100 ஜிகாவாட் சூரிய மின்னுற்பத்தி திறனை எட்டியதற்காகவும், தூய்மையான எரிசக்தியைப் பரவலாக்கும் முயற்சிகளில் இந்தியா தன்னிறைவை நோக்கி முன்னேறுவதற்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
August 13th, 08:48 pm
100 ஜிகாவாட் சூரிய மின்னுற்பத்தி திறனை அடைந்ததற்காகவும், தூய்மையான எரிசக்தியைப் பிரபலப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா தன்னிறைவை நோக்கி முன்னேறுவதற்காகவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாராட்டு தெரிவித்துள்ளார்.புதுதில்லியில் நடைபெற்ற எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
August 07th, 09:20 am
எனது அமைச்சரவை சகா திரு சிவராஜ் சிங் சௌஹான், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் ரமேஷ் சந்த், சுவாமிநாதன் குடும்பத்தைச் சேர்ந்த பலர் இங்கு இருப்பதையும் நான் காண்கிறேன். அவர்களுக்கும் எனது மரியாதைக்குரிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து விஞ்ஞானிகள், சிறப்பு விருந்தினர்கள், பெண்கள் மற்றும் தாய்மார்களே!பிரதமர் திரு நரேந்திர மோடி எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் உரையாற்றினார்
August 07th, 09:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டை இன்று (07 ஆகஸ்ட், 2025) தொடங்கி வைத்து உரையாற்றினார். புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வளாகத்தில் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் மறைந்த பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதனுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அவரது பங்களிப்பு ஒரே சகாப்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். புகழ்பெற்ற விஞ்ஞானியான எம் எஸ் சுவாமிநாதன் அறிவியலை பொதுச் சேவைக்கான ஊடகமாக மாற்றியுள்ளார் என்று குறிப்பிட்டார். நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளதை பிரதமர் சுட்டிக் காட்டினார். நாட்டின் கொள்கைகளை வகுப்பதிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளிலும் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு அவரது சீரிய சிந்தனைகள் தொடர்ந்து வழிகாட்டியாக அமையும் என்று பிரதமர் கூறினார். எம் எஸ் சுவாமிநாதனின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார்.பிரதமர் கடமை மாளிகையை (கர்த்தவ்ய பவன்) நாட்டிற்கு அர்ப்பணித்தார்
August 06th, 12:15 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, கடமை மாளிகையை (கர்த்தவ்ய பவன்) நாட்டிற்கு அர்ப்பணித்தார். இது பொதுச் சேவைக்கான தொடர் முயற்சிகள் மற்றும் உறுதிப்பாட்டின் சின்னம் என்று அவர் குறிப்பிட்டார்.வனப் பெருவிழா கொண்டாட்டங்களில் நீதிபதிகள் உற்சாகமாகப் பங்கேற்றதற்கு பிரதமர் பாராட்டு
July 19th, 07:02 pm
சுற்றுச்சூழல் பொறுப்பை நோக்கி மக்களை ஊக்குவிக்கும் விதமாக , வனப் பெருவிழா கொண்டாட்டங்களில் மதிப்புமிக்க நீதிபதிகள் உற்சாகமாகப் பங்கேற்றதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டு தெரிவித்தார்.சுற்றுச்சூழல், சிஓபி-30, உலகளாவிய சுகாதாரம் ஆகியவை குறித்த 17-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
July 07th, 11:38 pm
சுற்றுச்சூழல், சிஓபி-30, உலகளாவிய சுகாதாரம் ஆகியவை குறித்த அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.07.2025) உரையாற்றினார். இந்த அமர்வில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள், பங்குதாரர் நாடுகள், அழைக்கப்பட்ட நாடுகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். உலகின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான இத்தகைய விஷயங்கள் குறித்த அமர்வுக்கு ஏற்பாடு செய்த பிரேசில் நாட்டுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.சுற்றுச்சூழல், சிஓபி-30 மற்றும் உலகளாவிய சுகாதாரம் குறித்த பிரிக்ஸ் அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை
July 07th, 11:13 pm
பிரேசிலின் தலைமையின் கீழ், பிரிக்ஸ் அமைப்பு சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த துறைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை மட்டுமல்ல, மனிதசமூகத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் மிகவும் முக்கியமானவை.உலக சுற்றுச்சூழல் தினத்தன்று புதுதில்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் சிந்தூர் மரக்கன்று நட்டார்
June 05th, 11:50 am
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள தனது இல்லத்தில் ஒரு சிந்தூர் மரக்கன்றை நட்டார் 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரின் போது அசாதாரண துணிச்சலையும் தேசபக்தியையும் வெளிப்படுத்திய குஜராத் மாநிலம் கட்ச் பகுதியைச் சேர்ந்த துணிச்சலான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளால் இந்த மரக்கன்று அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டது.'ப்ராஜெக்ட் லயன்' என்ற சிங்கங்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு
May 21st, 04:08 pm
குஜராத் மாநிலத்தில் சிங்கங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவைகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்கும் வகையில் 'ப்ராஜெக்ட் லயன்' என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.This is the right time to Create In India, Create For The World: PM Modi at WAVES Summit
May 01st, 03:35 pm
At the inaugural address of WAVES 2025, PM Modi called it a landmark moment for the global creative community. He emphasized that the summit unites over 100 nations through storytelling, music, gaming, and innovation, showcasing India's leadership in culture and creativity.பிரதமர் திரு நரேந்திர மோடி வேவ்ஸ் 2025 உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார்
May 01st, 11:15 am
மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் இந்தியாவின் முதலாவது உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மகாராஷ்டிரா தினம் மற்றும் குஜராத் மாநில தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். அனைத்து சர்வதேச பிரமுகர்கள், தூதர்கள் மற்றும் படைப்பாற்றல் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் வந்திருப்பதை குறிப்பிட்ட பிரதமர், இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் கலைஞர்கள், புதுமைப் படைப்பாளர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் திறமையையும், படைப்பாற்றலையும் கொண்ட உலகளாவிய அமைப்புக்கு அடித்தளம் அமைக்க ஒன்றிணைந்துள்ளனர் என்று அவர் கூறினார். வேவ்ஸ் என்பது ஒரு சுருக்கப்பெயர் மட்டுமே அல்ல என்றும், இது கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய தொடர்பைக் குறிக்கும் ஒரு அலை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த உச்சிமாநாடு திரைப்படங்கள், இசை, கேமிங், அனிமேஷன், கதைசொல்லல் ஆகியவற்றின் விரிவான உலகத்தை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார். கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களை ஒருங்கிணைக்கவும் ஒத்துழைத்து செயல்படவும் உலகளாவிய தளத்தை இது வழங்குகிறது என அவர் கூறினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவரையும் பாராட்டிய பிரதமர், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு விருந்தினர்களை அன்புடன் வரவேற்றார்.இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து விவாதிக்க கெய்சாய் டோயுகாய் உயர்மட்டக் குழுவினருடன் பிரதமர் சந்திப்பு
March 27th, 08:17 pm
இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான கருத்துக்களையும் யோசனைகளையும் கேட்க, கெய்சாய் டோயுகையின் (ஜப்பான் நிறுவன நிர்வாகிகள் சங்கம்) தலைவர் திரு. தகேஷி நினாமி தலைமையில் கெய்சாய் டோயுகை மற்றும் 20 பிற வணிக பிரதிநிதிகளின் உயர் அதிகாரம் கொண்ட குழுவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காலை 7 லோக் கல்யாண் மார்க்கில் சந்தித்தார்.வனவிலங்குகளுக்கான தேசிய வாரியத்தின் 7-வது கூட்டம் மார்ச் 3-ம் தேதி கிர் நகரில் பிரதமர் தலைமையில் நடைபெற்றது
March 03rd, 04:48 pm
குஜராத்தில் உள்ள கிர் தேசியப் பூங்காவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். அங்கு தேசிய வனஉயிரின வாரியத்தின் 7-வது கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 28th, 09:36 pm
உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மீத் சிங் அவர்களே, முதல்வர் திரு புஷ்கர் தாமி அவர்களே, எனது அமைச்சரவை நண்பர்கள் திரு அஜய் தம்தா அவர்களே, திருமிகு ரக்ஷா கட்சே அவர்களே, உத்தராகண்ட் சட்டமன்ற சபாநாயகர் திருமிகு ரிது கந்தூரி அவர்களே, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் திருமிகு ரேகா ஆர்யா அவர்களே, காமன்வெல்த் விளையாட்டுகள் தலைவர் திரு கிறிஸ் ஜென்கின்ஸ் அவர்களே. ஐ.ஓ.ஏ தலைவர் திருமிகு பி.டி. உஷா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு மகேந்திர பட் அவர்களே, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள வீரர்களே, ஏனைய விருந்தினர்களே!டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
January 28th, 09:02 pm
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய அவர், உத்தராகண்ட் இன்று இளைஞர்களின் சக்தியால் பிரகாசமாக உள்ளது என்றார். பாபா கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் அன்னை கங்கையின் ஆசீர்வாதத்துடன் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன என்றும் அவர் கூறினார். உத்தராகண்ட் மாநிலம் உருவான 25-வது ஆண்டு இது என்று குறிப்பிட்ட திரு மோடி, நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள் இந்த இளம் மாநிலத்தில் தங்களது திறனை வெளிப்படுத்துவார்கள் என்று குறிப்பிட்டார். தேசிய விளையாட்டுப் போட்டிகளின் இந்தப் பதிப்பில் பல உள்ளூர் விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாடு இருப்பதால் 'பசுமை விளையாட்டுகள்' என்ற கருப்பொருளில் இங்கு போட்டிகள் நடப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இந்தக் கருப்பொருளைப் பற்றி மேலும் விவரித்த பிரதமர், கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் கூட மின்னணுக் கழிவுகளால் தயாரிக்கப்பட்டவை என்றும், பதக்கம் வென்ற ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு மரக்கன்று நடப்படும் என்றும், இது ஒரு சிறந்த முயற்சி என்றும் குறிப்பிட்டார். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக உத்தராகண்ட் அரசுக்கும், மக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கத்தின் 10-வது ஆண்டை முன்னிட்டு பிரதமர் மகிழ்ச்சி
January 22nd, 10:04 am
பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று (22.01.2025) பிரதமர் திரு நரேந்திர மோடி, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக மாறியுள்ளது என்றும், அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பையும் ஈர்த்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார். வரலாற்று ரீதியில் குழந்தைப் பாலின விகிதம் குறைவாக உள்ள மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, இந்த இயக்கத்தை அடிமட்ட அளவில் துடிப்பானதாக மாற்றிய அனைத்து தரப்பினரையும் பாராட்டியுள்ளார்.