சிறந்த நட்பு, அறிவுப்பூர்வமான ஆலோசனை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

August 25th, 11:09 am

சிறந்த நட்பு, அறிவுப்பூர்வமான ஆலோசனை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். நிறைவான, அமைதியான வாழ்க்கைக்கு அறிவார்ந்த நட்பு, சிறப்பான உரையாடல், தன்னலமற்ற நட்பு ஆகியவை அத்தியாவசியமிக்க அடித்தளம் என்பதை இந்தச் செய்தி காலத்தால் அழியாத நினைவூட்டலாக அளிக்கிறது.

கருணை, மனநிறைவு ஆகியவற்றின் மாண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

August 24th, 08:08 am

கருணை சுயமரியாதையையும், மனநிறைவு உண்மையான மகிழ்ச்சியையும் அளிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த மனப்பான்மை சமூகத்தில் ஒத்துழைப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றின் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 370, 35 (ஏ) ஆகிய பிரிவுகள் ரத்து, வளர்ச்சி நடவடிக்கையின் முக்கிய நடவடிக்கை: பிரதமர் திரு. நரேந்திர மோடி

August 05th, 02:25 pm

அரசியலமைப்புச் சட்டத்தின் 370, 35(ஏ) ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.

பட்டயக் கணக்காளர்கள் தினத்தையொட்டி, பட்டயக் கணக்காளர்கள் சமூகத்தினருக்கு பிரதமர் வாழ்த்து

July 01st, 12:50 pm

பட்டயக் கணக்காளர்கள் தினத்தையொட்டி, பட்டயக் கணக்காளர்கள் சமூகத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியப் பொருளாதார பயணத்தில் பட்டயக் கணக்காளர்கள் நீண்டகாலமாக நம்பத்தகுந்த கூட்டாளர்களாக திகழ்கின்றனர் என்று திரு மோடி கூறியுள்ளார். வெளிப்படைத்தன்மை, தொழில்திறன், ஆகியவற்றுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு மூலம், நாட்டின் நிதி அமைப்புகளை வலுப்படுத்தியும் வணிகங்களுக்கு ஆதரவளித்து தொழில்முனைவோருக்கு ஊக்கமளித்தும் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியும் வருவதாகத் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களுக்கு அதிகாரமளித்து, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அடித்தளத்தை வலுப்படுத்தியுள்ளது – பிரதமர் திரு நரேந்திர மோடி

July 01st, 12:04 pm

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் 11 ஆண்டுகால நிறைவு குறித்து இன்று குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, நிர்வாகம், பொதுச் சேவை வழங்கல், குடிமக்களின் வாழ்க்கை ஆகியவற்றில் அது ஏற்படுத்தியுள்ள மாற்றத்தக்க தாக்கத்தை எடுத்துரைத்துள்ளார். டிஜிட்டல் இந்தியா, நிர்வாகத்தை மேலும் வெளிப்படையானதாகவும், திறன்மிக்கதாகவும், மக்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றி நாட்டின் அனைத்து துறை வளர்ச்சியையும் விரைவுபடுத்தி நிர்வாகத்திற்குப் புதிய வரையறையை ஏற்படுத்தியுள்ளதாக திரு மோடி கூறியுள்ளார். தடையற்ற மின்னணு பணப்பரிவர்த்தனைகள், வெளிப்படையான நேரடி பயன் பரிமாற்றங்கள் முதல் மின்னணு பொது உள்கட்டமைப்பின் விரிவாக்கம் வரை இந்த முன்முயற்சி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலித்துள்ளது என்றும் இது தொழில்நுட்பத்தை எளிமையான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒரு சக்தி மிக்க கருவியாக மாற்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புது தில்லியில் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகைகளை வழங்கும் நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

June 19th, 05:15 pm

இன்று இந்த நிகழ்ச்சியுடன் இணைந்துள்ள இளம் நண்பர்களிடம், இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தை நான் காண்கிறேன். சில மணி நேரங்களுக்கு முன்புதான் நான் பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா பயணத்தை முடித்துத் திரும்பினேன். ஜி-7 உச்சி மாநாட்டில் வளர்ந்த நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தேன். இன்றைய உலகம் இந்தியாவின் இளைஞர் சக்தியைப் பற்றிப் பேசுகிறது.

PM Modi disburses incentives worth around ₹2,400 crore under the Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana

June 19th, 05:00 pm

Addressing beneficiaries, industry representatives and stakeholders of the PM Viksit Bharat Rozgar Yojana, PM Modi disbursed incentives worth around ₹2,400 crore and highlighted the government's commitment to empowering India's youth and boosting employment generation. He described PM-VBRY as a bridge between youth and industry, noting that the scheme has supported the creation of 15 lakh jobs and brought nearly 70 lakh first-time employees under social security.

Bharat Innovates is becoming a bridge between Indian talent and European capital: PM Modi in Nice, France

June 14th, 04:36 pm

PM Modi and French President Emmanuel Macron jointly inaugurated Bharat Innovates 2026 in Nice, France. Addressing a gathering, PM Modi highlighted India’s deep-tech revolution and the transformative potential of AI, satellite technology, advanced manufacturing and clean energy. He called for trusted, inclusive and human-centric innovation, while reaffirming India’s vision of becoming a global innovation hub.

பாரத் இன்னோவேட்ஸ் 2026 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

June 14th, 03:00 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனும் இன்று (14.06.2026) நைஸ் நகரில் உள்ள பலே டெஸ் எக்ஸ்போசிஷன்ஸ் அரங்கில் 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' நிகழ்வை கூட்டாகத் தொடங்கி வைத்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வானது, இந்திய ஆழ்தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், உலகளாவிய புத்தாக்க நிதியங்கள், தடம் பதித்த முதலீட்டாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கிறது. இது, உலக முக்கியத்துவம் வாய்ந்த 13 முக்கிய தொழில்நுட்பத் தூண்களின் கீழ், 120 முன்னோடி புத்தொழில் நிறுவனங்களையும் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு நிறுவனங்களையும் முன்வைத்து, இந்தியாவின் முதன்மையான ஆழ்தொழில்நுட்பத்தை உலக அரங்கில் காட்சிப்படுத்துகிறது. இந்நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து 350-க்கும் அதிகமான முன்னணி முதலீட்டாளர்களும் துணிகர மூலதன நிறுவனங்களும் பங்கேற்கின்றனர்.

பிரான்ஸ் வந்தடைந்தார் பிரதமர் மோடி

June 13th, 11:19 pm

பிரான்ஸுக்கான தனது பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்க, அந்நாட்டின் நீஸ் (Nice) நகரை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால உறவை வெளிப்படுத்தும் வகையில், அவர் அங்கு வந்திறங்கியபோது அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பயணம், இந்தியா-பிரான்ஸ் இடையிலான கூட்டாண்மை வலுவடைந்து வருவதையும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இரு நாடுகளின் கூட்டு உறுதிப்பாட்டையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இளைஞர்கள் தலைமையிலான வலுவான புத்தாக்கச் சூழலமைப்பில் அரசின் அக்கறை குறித்து பிரதமர் எடுத்துரைத்துள்ளார்

June 13th, 11:44 am

இளைஞர்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி அரசு வலுவாகச் செயல்பட்டு வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (13.06.2026) தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளின் முக்கிய அம்சங்களில் ஒன்று, இந்திய இளைஞர்கள் தங்களது லட்சியங்களை நம்பிக்கையுடன் அடைய முயற்சி செய்வதுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு துறைகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரசின் முயற்சிகளை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

June 12th, 12:39 pm

கடந்த 12 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட முன்முயற்சிகள் காரணமாக பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தொழில்முனைவு முதல், கல்வி, சுகாதாரம், தூய்மைப் பணிகள், வீட்டுவசதி, விளையாட்டு, அறிவியல், நிர்வாகம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பெண்கள் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில், டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிபெறச் செய்ய நாட்டு மக்கள் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார்

April 26th, 11:30 am

இந்த மாத 'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில், அணுசக்தி மற்றும் காற்றாலைத் துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். மேலும், பகவான் புத்தரின் போதனைகள், பீட்டிங் ரிட்ரீட் விழா, இயற்கை பாதுகாப்பு, மூங்கில் துறை, பண்டைய நூல்கள் மற்றும் கணித ஒலிம்பியாட் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய தலைப்புகளையும் அவர் குறிப்பிட்டார். தற்போது நடைபெற்று வரும் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரச்சாரம் குறித்தும் பேசிய பிரதமர், இந்தச் செயல்பாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

PM to address ‘Nari Shakti Vandan Sammelan’ on 13th April

April 12th, 04:43 pm

In line with the government’s commitment to women-led development, PM Modi will attend a national-level ‘Nari Shakti Vandan Sammelan’ on 13th April 2026 in New Delhi. The Sammelan will bring together women representatives from perse sectors and highlight their role in the journey towards Viksit Bharat 2047. It is being organised to reinforce the commitment to greater participation of women in shaping India’s development trajectory.

The government places great emphasis on bringing a 'technology culture' to agriculture: PM Modi

March 06th, 01:14 pm

PM Modi addressed the Post Budget Webinar on the theme “Agriculture and Rural Transformation”. The PM highlighted programmes such as the PM Kisan Samman Nidhi and MSP reforms that benefit farmers. He also spoke about the “technology culture” in agriculture, referring to initiatives like e-NAM and the development of DPI. He called for suggestions on effectively integrating technology with traditional systems.

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

March 06th, 01:00 pm

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். ஏற்கனவே நடைபெற்ற தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சித் தொடர்பான அமர்வுகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், பட்ஜெட் உருவாக்கத்தின் போது பங்குதாரர்கள் மதிப்புமிகு ஒத்துழைப்பை அளித்ததாகக் கூறினார். தற்போது பட்ஜெட்டுக்கு பின் அதன் உண்மையான பயன்களை நாடு அனுபவம் கொள்வது அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பங்கேற்பாளர்களின் ஆலோசனைகள் முக்கியமானது என்றும் திரு மோடி கூறினார்.

பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் “வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம்” என்பது குறித்து மார்ச் 6 அன்று பிரதமர் உரையாற்றவுள்ளார்

March 05th, 06:04 pm

பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் “வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம்” என்பது குறித்து மார்ச் 6 அன்று காலை 11:15 மணிக்கு காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.

இந்தியா – கனடா தலைவர்களின் கூட்டறிக்கை

March 02nd, 05:05 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பை ஏற்று கனடா பிரதமர் திரு மார்க் கார்னி 2026 பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை இந்தியாவின் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். கனடா பிரதமராகப் பொறுப்பேற்ற பின் திரு கார்னியின் இந்தியாவுக்கான முதலாவது பயணம் இதுவாகும். மேலும், 2018-க்கு பின் கனடா பிரதமர் ஒருவர் இந்தியாவில் பயணம் மேற்கொள்வதும் இதுவே முதல் முறையாகும். பிரதமர் திரு கார்னியுடன், கனடாவின் மூத்த அமைச்சர்கள், மாகாணத் தலைவர்கள், முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட உயர்நிலைக்குழுவும் இந்தியா வந்துள்ளது.

கனடா பிரதமரின் இந்தியப் பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அறிவிப்புகள்

March 02nd, 05:04 pm

கனடா பிரதமரின் இந்தியப் பயணம் மூலம் ஏற்பட்ட ஒப்பந்தங்கள்;

பிரதமர் ஜனவரி 23 அன்று கேரளா செல்கிறார்

January 22nd, 02:23 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி 2026, ஜனவரி 23 அன்று கேரளாவில் பயணம் மேற்கொள்கிறார். காலை 10:45 மணியளவில், திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வில் பொதுமக்களிடையே அவர் உரையாற்றுவார்.