வேலை வாய்ப்புத் திருவிழாவின் கீழ் 51,000- க்கும் மேற்பட்டோருக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 12th, 11:30 am
மத்திய அரசில் இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான எங்கள் இயக்கம் சீராகத் தொடர்கிறது. பரிந்துரை இல்லை, ஊழல் இல்லை. இன்று, 51,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏற்கெனவே மத்திய அரசுத் துறைகளில் நிரந்தர வேலைகளைப் பெற்றுள்ளனர். இந்த இளைஞர்கள் இப்போது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறார்கள். இன்று, உங்களில் பலர் இந்திய ரயில்வேயில் உங்கள் பொறுப்புகளைத் தொடங்கியுள்ளீர்கள். சிலர் இப்போது பாதுகாப்பு துறையில் இணைந்து நாட்டின் பாதுகாவலர்களாக மாறுகிறீர்கள். அஞ்சல் துறையில் நியமிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் அரசு சேவைகளை வழங்க உதவுவார்கள். சிலர் அனைவருக்கும் சுகாதாரம் என்ற திட்டத்தில் பங்களிப்பை வழங்குவார்கள். பல இளம் தொழில் வல்லுநர்கள் நிதி சேர்க்கையை விரைவுபடுத்த உதவுவார்கள். மற்றவர்கள் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்துவார்கள். உங்கள் துறைகள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் இலக்கு ஒன்றுதான். அந்த இலக்கு என்ன? நாம் அதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். துறை, பணி, பதவி அல்லது பிராந்தியம் எதுவாக இருந்தாலும் ஒரே குறிக்கோள் தேசத்திற்கு சேவை செய்வதே. வழிகாட்டும் கொள்கை என்பது மக்களே முதன்மையானவர்கள் என்பதாகும். நாட்டு மக்களுக்கு சேவை செய்ய உங்களுக்கு ஒரு சிறந்த தளம் வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் ஒரு முக்கியமான கட்டத்தில் இந்த பெரிய வெற்றியை அடைந்ததற்காக உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். உங்கள் வாழ்க்கையில் இந்த புதிய பயணத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதமர் திரு. நரேந்திர மோடி வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார்
July 12th, 11:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு இன்று காணொலி மூலம் 51,000க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்த இளைஞர்களுக்கு புதிய பொறுப்புகள் இன்று தொடங்குகின்றன என்று கூறினார். பல்வேறு துறைகளில் தங்கள் சேவையைத் தொடங்கிய இளைஞர்களை அவர் வாழ்த்தினார். இளைஞர்களுக்கு வெவ்வேறு பொறுப்புகள் இருந்தபோதிலும், அவர்களின் பொதுவான குறிக்கோள் முதலில் குடிமகன் என்ற கொள்கையால் வழிநடத்தப்படும் தேசிய சேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.