பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார்
September 06th, 06:11 pm
பொருளாதாரம், பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். ஹொரைசான் 2047 செயல்திட்டம் , இந்தோ-பசிபிக் செயல்திட்டம் மற்றும் பாதுகாப்பு தொழில்துறை செயல்திட்டத்துக்கு ஏற்ப, இந்தியா-பிரான்ஸ் உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் தலைவர்கள் மீண்டும் பகிர்ந்து கொண்டனர்.அதிபர் மேக்ரானுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்
August 21st, 06:30 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடியை பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
August 15th, 07:26 pm
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.Prime Minister interacts with President of France at G7 summit
June 18th, 02:57 pm
The Prime Minister Shri Narendra Modi interacted with the President of France, H.E Mr. Emmanuel Macron at the 51st G7 Summit at Kananaskis, Canada on 17th June 2025. Exchanging perspectives on a wide range of issues, both leaders affirmed that India and France will keep working closely for the betterment of our planet.பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த சர்வதேச மாநாட்டின் போது பிரதமரின் உரை
June 07th, 02:00 pm
பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த சர்வதேச மாநாடு- 2025-க்கு உங்களை வரவேற்கிறோம். இந்த மாநாடு ஐரோப்பாவில் முதன்முறையாக நடத்தப்படுகிறது. எனது நண்பர் அதிபர் மக்ரோன் மற்றும் பிரான்ஸ் அரசின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கிறேன். வரவிருக்கும் ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் மாநாட்டிற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.2025-ம் ஆண்டுக்கான பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு குறித்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
June 07th, 01:26 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.06.2025) காணொலிக் காட்சி மூலம் 2025-ம் ஆண்டுக்கான சர்வதேச பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த மாநாட்டில் உரையாற்றினார். ஐரோப்பாவில் முதன்முறையாக நடத்தப்படும் 2025-ம் ஆண்டுக்கான பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த சர்வதேச மாநாட்டிற்கு வந்த பங்கேற்பாளர்களை பிரதமர் வரவேற்றார். பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மக்ரோனுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு ஆதரவளித்த பிரான்ஸ் அரசுக்கு பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அடுத்து நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் மாநாட்டிற்கும் பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை உலகம் கடுமையாகக் கண்டிக்கிறது
April 24th, 03:29 pm
ஏப்ரல் 22, 2025 அன்று அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல், உலகத் தலைவர்களிடமிருந்து வலுவான ஒற்றுமை அலையை எழுப்பியுள்ளது. உலகளாவிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் பூமியின் கடைசி வரை துரத்தும் என்று சபதம் செய்தார்.பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணம்: இந்த பயணம் மூலோபாய கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது மற்றும் AI ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றியது.
February 13th, 03:06 pm
பிரதம மந்திரி நரேந்திர மோடியின் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கான சமீபத்திய இராஜதந்திர சுற்றுப்பயணம் இந்தியாவின் உலகளாவிய கூட்டணிகளை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது, செயற்கை நுண்ணறிவு (AI), பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் வரலாற்று உறவுகளை மதிக்கிறது. இந்த விரிவான வருகை பொறுப்பான AI மேம்பாடு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளை ஆழமாக்குதல் ஆகியவற்றுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.PM Modi and President of France jointly inaugurate the Consulate General of India in Marseille
February 12th, 05:29 pm
PM Modi and President Emmanuel Macron inaugurated the Consulate General of India in Marseille. The new Consulate will boost economic, cultural, and people-to-people connections across four French regions. PM Modi deeply appreciated President Macron’s special gesture, as both leaders received a warm welcome from the Indian diaspora.பிரதமரும், பிரான்ஸ் அதிபரும் மசார்குஸ் போர் நினைவிடத்தைப் பார்வையிட்டனர்
February 12th, 04:57 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மெக்ரானும் இன்று காலை மார்சேயில் உள்ள மசார்குஸ் போர் நினைவிடத்திற்குச் சென்று முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். உயிர்நீத்த வீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் இரு தலைவர்களும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்கள்.பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்
February 12th, 03:24 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியும் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் தங்களுக்கிடையிலான தனிப்பட்ட நல்லுறவைப் பிரதிபலிக்கும் வகையில், நேற்று பாரிஸிலிருந்து மர்சேயிலுக்கு பிரான்ஸ் அதிபர் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தனர். இருதரப்பு உறவுகளின் முழு பரிமாணங்கள் மற்றும் முக்கிய உலகளாவிய, பிராந்திய பிரச்சனைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். மர்சேயில் வந்து இறங்கிய பின்னர் தூதுக்குழு நிலை பேச்சுவார்த்தைகள் நடந்தன. கடந்த 25 ஆண்டுகளில் பன்முக உறவாக சீராக உருவாகியுள்ள இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மைக்கான தங்கள் வலுவான உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணம் குறித்த இந்தியா – பிரான்ஸ் கூட்டு அறிக்கை
February 12th, 03:22 pm
பிரெஞ்சுக் குடியரசின் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டார். பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய நாட்களில், பிரான்ஸ் மற்றும் இந்தியா இணைந்து செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்கின. இதில், பிளெட்ச்லி பார்க் (நவம்பர் 2023) மற்றும் சியோல் (மே 2024) உச்சிமாநாடுகளின் போது எட்டப்பட்ட முக்கியமான முடிவுகளை செயல்படுத்துவதற்காக, அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள், கல்வித்துறை பிரதிநிதிகள், அரசு சாரா நிறுவனங்கள், கலைஞர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றுகூடினர். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு துறை பொது நலனுக்காக நன்மை பயக்கும் என்பதையும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழலுக்கு நல்விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதையும் உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் தெரிவித்தனர். பிரான்சின் செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்கு பிரதமர் மோடி, அதிபர் மக்ரோனை வாழ்த்தினார். அடுத்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதை பிரான்ஸ் வரவேற்றது.பாரிஸில் நடைபெற்ற இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் தெரிவித்த கருத்துக்கள்
February 12th, 12:45 am
இந்த அறையில் ஒரு அற்புதமான ஆற்றல், உற்சாகம் மற்றும் சுறுசுறுப்பை நான் உணர்கிறேன். இது ஒரு சாதாரண வணிக நிகழ்வு மட்டுமல்ல.14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்
February 12th, 12:25 am
பாரிஸில் இன்று நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கூட்டாக உரையாற்றினர். பாதுகாப்பு, விண்வெளி, முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, மேம்பட்ட உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, வாழ்க்கை அறிவியல், நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை முறை, உணவு மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் வகையில், இரு தரப்பிலிருந்தும் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த மன்றத்தில் ஒன்று கூடினர்.பாரிஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் நிறைவுரை
February 11th, 05:35 pm
இன்றைய விவாதங்கள் ஒரு அம்சத்தை வெளிப்படுத்தியுள்ளன – தொலைநோக்குப் பார்வையிலும் பங்குதாரர்களின் நோக்கத்திலும் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.பாரிஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொடக்க உரை
February 11th, 03:15 pm
உங்கள் மருத்துவ அறிக்கையை செயற்கை நுண்ணறிவு செயலியில் பதிவேற்றினால், அது உங்கள் ஆரோக்கியத்தின் நிலைமையை எந்த தொழில்நுட்ப சொற்களும் இல்லாமல் எளிய மொழியில் விளக்கிச் சொல்ல முடியும். ஆனால், அதே செயலியில் யாரோ ஒருவர் தனது இடது கையால் எழுதும் படத்தை வரையச் சொன்னால், அந்தச் செயலி பெரும்பாலும் வலது கையால் எழுதும் ஒருவரை வரைந்துவிடும். ஏனெனில் அதுதான் பயிற்சி தரவுகளின் ஆதிக்கமாகும்.பிரதமர் திரு நரேந்திர மோடி பாரிஸில் செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சிமாநாட்டிற்கு இணைத் தலைமை தாங்கினார்
February 11th, 03:00 pm
பாரீசில் இன்று செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மெக்ரோனுடன் இணைந்து தலைமை தாங்கினார். பிப்ரவரி 6-7 இல் அறிவியல் தினங்களுடன் தொடங்கிய ஒரு வார கால உச்சிமாநாடு, பிப்ரவரி 8-9 அன்று கலாச்சார வார இறுதியுடன், உலகளாவிய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் கலந்து கொண்ட உயர்மட்ட நிலையுடன் நிறைவடைந்தது.பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி
February 10th, 10:30 pm
பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் பாரிஸ் சென்றடைந்தார். அங்கு வந்த அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி, அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் பேச்சு நடத்துவார், AI உச்சி மாநாடு மற்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்.பிரான்ஸ், அமெரிக்க பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
February 10th, 12:00 pm
அதிபர் மேக்ரோனின் அழைப்பையடுத்து, பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்சில் பயணம் மேற்கொள்கிறேன். பாரிஸில், உலகத் தலைவர்கள் மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் கூட்டமான செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாட்டில் இணைத்தலைமை தாங்க நான் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். அங்கு புதுமைக்கண்டுபிடிப்புகள் மற்றும் பரந்த அளவிலான பொது நன்மையைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த, பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான கூட்டு அணுகுமுறை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இருக்கிறோம்.இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மற்றும் அயர்லாந்து பிரதமருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
January 27th, 11:06 am
இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவல் மேக்ரோன், அயர்லாந்து பிரதமர் திரு மைக்கேல் மார்ட்டின் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.