2030 நோக்கி: ஒரு கூட்டு இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய விரிவான மூலோபாய நிகழ்ச்சி நிரல்
January 27th, 06:48 pm
புது தில்லியில் ஜனவரி 27, 2026 அன்று நடைபெற்ற 16வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கூட்டு இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய விரிவான மூலோபாய நிகழ்ச்சி நிரல், இரு கூட்டாளிகளுக்கும் மற்றும் பரந்த உலகிற்கும் பரஸ்பர நன்மை பயக்கும், உறுதியான மற்றும் மாற்றத்தக்க விளைவுகளை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றிய-இந்தியா ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், ஆழப்படுத்துதல் மற்றும் சிறப்பாக ஒருங்கிணைப்பதன் மூலம் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்தியா - ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவரின் இந்தியாவிற்கான அரசு முறை வருகை மற்றும் 16வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு குறித்த ஐரோப்பிய ஒன்றிய கூட்டு அறிக்கை
January 27th, 06:15 pm
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இந்தியாவின் 77வது குடியரசு தினத்திற்கான தலைமை விருந்தினர்களாக இந்தியாவிற்கு அரசு முறை விஜயம் செய்தனர். இந்த விஜயத்தின் போது, இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய FTA குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததை தலைவர்கள் பாராட்டினர் மற்றும் 2030 நோக்கி: இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய கூட்டு விரிவான மூலோபாய நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொண்டனர்.தலைவர்களின் அறிக்கை: ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய யூனியனின் ஆணையர்களின் இந்தியப் பயணம் (பிப்ரவரி 27-28, 2025)
February 28th, 06:05 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியும், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயனும் ஐரோப்பிய யூனியனுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவானது இருநாட்டு மக்கள் நலனுக்கும் மற்றும் உலக நலனுக்கான பலன்களை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 20 ஆண்டுக்கால இந்திய - ஐரோப்பிய யூனியனின் ராஜாங்க கூட்டாண்மை மற்றும் 30 ஆண்டுக்கும் மேலான இந்திய – ஐரோப்பிய யூனியன் கூட்டுறவு ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதென முடிவு செய்துள்ளனர்.