Sri Sathya Sai Baba placed Seva at the very heart of human life: PM at Puttaparthi in Andhra Pradesh
November 19th, 11:00 am
PM Modi addressed the birth centenary celebrations of Sri Sathya Sai Baba in Puttaparthi, calling it an emotional and spiritual experience. He offered tributes at Baba’s Samadhi and said Baba’s teachings, love, and spirit of service continue to guide millions across the world. Shri Modi highlighted Baba’s message of Vasudhaiva Kutumbakam and noted that the centenary year has become a global festival of love, peace, and service. He also underscored that Seva is the core of Indian civilisation, uniting the paths of Bhakti, Gyan, and Karma.ஆந்திரப்பிரதேசத்தின் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
November 19th, 10:30 am
ஆந்திரப்பிரதேசத்தின் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டம், இந்த தலைமுறைக்கான கொண்டாட்டம் மட்டுமல்ல, மாறாக, அது ஒரு தெய்வீக ஆசி என்றும், ஸ்ரீ சாய்பாபா தற்போது மானுட வடிவத்தில் நம்மிடையே இல்லாமல் இருந்தாலும், அவரது போதனைகள், அன்பு மற்றும் சேவை உணர்வு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோருக்கு தொடர்ந்து வழிகாட்டும் என்று பிரதமர் கூறினார்.Prime Minister condoles loss of lives due to earthquake in the Philippines
October 01st, 03:23 pm
Prime Minister condoles loss of lives due to earthquake in the PhilippinesAn RSS shakha is a ground of inspiration, where the journey from 'me' to 'we' begins: PM Modi
October 01st, 10:45 am
In his address at the centenary celebrations of the Rashtriya Swayamsevak Sangh (RSS), PM Modi extended his best wishes to the countless swayamsevaks dedicated to the resolve of national service. He announced that, to commemorate the occasion, the GoI has released a special postage stamp and a coin. Highlighting the RSS’ five transformative resolutions, the PM remarked that in times of calamity, swayamsevaks are among the first responders.ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
October 01st, 10:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய திரு மோடி, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். இன்று மகா நவமி மற்றும் சித்திதாத்ரி தேவியின் தினம் என்று அவர் குறிப்பிட்டார். நாளை, இப்பண்டிகையின் பத்தாம் நாளான விஜயதசமி மகத்தான வெற்றியைக் குறிக்கும் பண்டிகை என்று அவர் கூறினார். இது இந்திய கலாச்சாரத்தின் காலத்தால் அழியாத பாரம்பரியம், அநீதிக்கு எதிரான நீதி, பொய்க்கு எதிரான உண்மை மற்றும் இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றி ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த புனிதமான தருணத்தில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது என்பதை எடுத்துரைத்த பிரதமர், இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல என்று கூறினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வரும் தொண்மையான மரபின் மறுசீரமைப்பு இது என்றும், ஒவ்வொரு சகாப்தத்தின் சவால்களையும் எதிர்கொள்ள தேசிய உணர்வு புதிய வடிவங்களில் வெளிப்படும் என்றும் அவர் கூறினார். இந்த யுகத்தில், தேசிய உணர்வின் ஒரு நல்லொழுக்கத்துடன் கூடிய அவதாரமாக சங்கம் இருக்கிறது என்று அவர் உறுதிப்படுத்தினார்.ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
September 01st, 02:16 pm
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் வளர்ச்சிப்பணிகள் தொடக்க நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 26th, 05:00 pm
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா திரு மனோகர் லால் அவர்களே, அமைச்சரவையின் இதர உறுப்பினர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்களே, இதர மதிப்பிற்குரிய பிரமுகர்களே, கட்ச் பகுதியின் எனதருமை சகோதர, சகோதரிகளே!குஜராத்தின் புஜ்ஜில் சுமார் ரூ.53,400 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
May 26th, 04:45 pm
குஜராத்தின் புஜ்ஜில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி சுமார் ரூ.53,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், கட்ச் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். புரட்சியாளர்கள் மற்றும் தியாகிகளுக்கு, குறிப்பாக தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் திரு. ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவுக்கு மரியாதை செலுத்தினார். கட்ச்சின் மகன்கள் மற்றும் மகள்களுக்கு அவர்களின் உறுதிப்பாடு மற்றும் பங்களிப்புகளை பிரதமர் விவரித்தார்.ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
April 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று உங்களோடு மனதின் குரலில் நான் கலந்து கொள்ளும் வேளையிலே, மனதிலே ஆழமான துக்கம் உறைகிறது. ஏப்ரல் மாதம் 22ஆ ம் தேதியன்று பஹல்காவிலே கட்டவிழ்த்து விடப்பட்ட தீவிரவாதத் தாக்குதல், தேசத்தின் அனைத்துக் குடிமக்களையும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தாரோடு, அனைத்து இந்தியர்களுமே மனங்களில் ஆழமான துயரத்தை அனுபவிக்கிறார்கள். படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். இந்த பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய படங்களைப் பார்க்கும் போது தேசத்தவர் அனைவரின் ரத்தமும் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது. பஹல்காவில் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தத் தாக்குதல், தீவிரவாதத்தின் புரவலர்களின் கையறு நிலையைக் காட்டுகிறது, அவர்களின் கோழைத்தன்மையை வெளிப்படுத்துகிறது. கஷ்மீரத்திலே அமைதி திரும்பிக் கொண்டிருந்த வேளையிலே, பள்ளிகள்-கல்லூரிகளில் ஓர் உயிர்ப்பு துளிர்த்த நேரத்திலே, கட்டமைப்புப் பணிகள் வரலாறுகாணா வேகம் எடுத்த போதினிலே, ஜனநாயகம் வேரூன்றத் தொடங்கிய காலத்திலே, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவரைகாணா அதிகரிப்பை காணும் வேளையிலே, மக்களின் வருவாய் பெருகிவந்த நேரத்திலே, இளைஞர்களுக்கு புதிய சந்தர்ப்பங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. தேசத்தின் எதிரிகளுக்கு, ஜம்மு-கஷ்மீரின் எதிரிகளுக்கு, இது முற்றிலும் பிடிக்கவில்லை. மாறாக, தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் காரணகர்த்தர்கள் கஷ்மீரத்தை அழிக்கத் துடித்தார்கள், ஆகையால் தான் இத்தனை பெரிய சூழ்ச்சிவலையைப் பின்னினார்கள். தீவிரவாதத்திற்கு எதிரான இந்த யுத்தத்தில், தேசத்தின் ஒற்றுமை, 140 கோடி பாரத நாட்டவரின் ஒருமைப்பாடு ஆகியன தான் நம்முடைய மிகப்பெரிய பலமாக விளங்குகிறது. இந்த ஒற்றுமை, தீவிரவாதத்திற்கு எதிரான நம்முடைய தீர்மானமான போரின் ஆதாரம். தேசத்தின் முன்பாக எழுந்திருக்கும் இந்த சவாலை எதிர்கொள்ள, நமது உறுதிப்பாட்டை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் என்ற முறையில் நாம் நமது உளவுறுதியை வெளிப்படுத்த வேண்டும். இந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எவ்வாறு தேசம் முழுவதும் ஒரே குரலெடுத்துப் பேசுகிறது என்பதை உலகனைத்தும் கவனித்துக் கொண்டிருக்கிறது.6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின்போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 04th, 12:59 pm
இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக தாய்லாந்துப் பிரதமர் ஷினவத்ராவுக்கும் தாய்லாந்து அரசுக்கும் முதலில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தாய்லாந்தில் நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்
April 04th, 12:54 pm
தாய்லாந்தில் இன்று நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன் முயற்சி) உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். உச்சிமாநாட்டின் கருப்பொருள் – பிம்ஸ்டெக்: வளமான, உறுதியான மற்றும் வெளிப்படையானது என்பதாகும். தலைவர்களின் முன்னுரிமைகளையும், பிம்ஸ்டெக் பிராந்திய மக்களின் விருப்பங்களையும், உலக அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவும் தருணத்தில் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வளர்ச்சியை உறுதி செய்வதில் பிம்ஸ்டெக்கின் முயற்சிகளையும் இது பிரதிபலிக்கிறது.பிம்ஸ்டெக் நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய 21 அம்ச செயல் திட்டத்தை பிரதமர் முன்மொழிந்துள்ளார்
April 04th, 12:53 pm
தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில், பிம்ஸ்டெக் நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய 21 அம்ச செயல் திட்டத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார். பிம்ஸ்டெக் நாடுகள் முழுவதும் வணிகத்தை ஊக்கப்படுத்துவது பற்றி குறிப்பிட்டுள்ள அவர், தகவல் தொழில்நுட்பத் துறையின் வளமான திறனை பயன்படுத்துமாறு கேட்டுகொண்டுள்ளார். அண்மையில் மியான்மரையும், தாய்லாந்தையும் பாதித்த நிலநடுக்க பின்னணியில் இயற்கை சீற்ற மேலாண்மை துறையில் இணைந்து பணியாற்றுவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். விண்வெளி உலகத்தில் பணியாற்றுவது குறித்தும், பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்துவது குறித்தும் திரு மோடி எடுத்துரைத்துள்ளார். பிம்ஸ்டெக் அமைப்பை கூட்டாக ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள அவர், தலைமை ஏற்பதில் இளைஞர்களின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டியுள்ளார். கலாச்சார பிணைப்புகள் பிம்ஸ்டெக் நாடுகளை மேலும் நெருக்கமாகக் கொண்டு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.நிலநடுக்க துயரம் குறித்து மியான்மரின் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்குடன் பிரதமர் பேச்சு
March 29th, 01:41 pm
நிலநடுக்க துயரச் சம்பவத்திற்கு இடையே, மியான்மரின் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்குடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாடினார். இந்தச் சவாலான நேரத்தில் மியான்மருடன் ஒற்றுமையுடன் நிற்பதற்கு நெருங்கிய நண்பர் மற்றும் அண்டை நாடு என்ற முறையில் இந்தியாவின் திடமான உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் தெரிவித்தார். இந்தப் பேரிடரைச் சமாளிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடி நிவாரணம் மற்றும் உதவி வழங்குவதற்கான முன்முயற்சியான ஆபரேஷன் பிரம்மாவை இந்திய அரசு தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.மியான்மரிலும், தாய்லாந்திலும் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்
March 28th, 02:18 pm
மியான்மரிலும், தாய்லாந்திலும் இன்று அதிகாலை ஏற்பட்ட பேரழிவு செய்யும் நிலநடுக்கங்கள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.தில்லியில் நிலஅதிர்வு உணரப்பட்டதை அடுத்து, அனைவரும் அமைதி காக்குமாறும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்
February 17th, 08:08 am
தில்லியில் நிலஅதிர்வு உணரப்பட்டதை அடுத்து, அனைவரும் அமைதி காக்குமாறும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக திரு மோடி கூறியுள்ளார்.கார்யாகர் சுவர்ண மகோத்சவத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 07th, 05:52 pm
பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் ஸ்வாமி மகராஜ் அவர்களே, மதிப்பிற்குரிய முனிவர்களே, சத்சங்க குடும்பத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களே, புகழ்பெற்ற பிரமுகர்களே, தாய்மார்களே, தாய்மார்களே!அகமதாபாத்தில் நடைபெற்ற கார்யகர் சுவர்ண மகோத்சவ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
December 07th, 05:40 pm
அகமதாபாத்தில் நடைபெற்ற தொழில்சார் மேம்பாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். கூட்டத்தினரிடையே பேசிய பிரதமர், பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் சுவாமி மகராஜ், மதிப்பிற்குரிய துறவிகள், சத்சங்கி குடும்ப உறுப்பினர்கள், பிற பிரமுகர்கள், பிரதிநிதிகளை வரவேற்பதாகக் கூறினார். கார்யாகர் சுவர்ண மகோத்சவத்தை முன்னிட்டு பகவான் சுவாமி நாராயணரின் பாதங்களை வணங்குவதாகக் கூறிய திரு நரேந்திர மோடி, இந் தநாள் பிரமுக் சுவாமி மகாராஜின் 103-வது பிறந்த நாளும் கூட என்று குறிப்பிட்டார். பகவான் சுவாமி நாராயணரின் போதனைகள், பிரமுக் சுவாமி மகாராஜின் தீர்மானங்கள் ஆகியவை இன்று பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் சுவாமி மகாராஜின் கடின உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் பலனளித்து வருகின்றன என்றும் அவர் கூறினார். இளைஞர்கள், குழந்தைகளின் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் ஏராளமானோர் பங்கேற்கும் இத்தகைய பிரமாண்டமான நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக கூறிய திரு நரேந்திர மோடி, இந்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் நேரடியாக கலந்து கொள்ளாவிட்டாலும், இந்த நிகழ்ச்சியின் ஆற்றலை உணர முடிகிறது என்று கூறினார். இந்த மகத்தான தெய்வீக விழாவிற்காக பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் ஸ்வாமி மகராஜை வாழ்த்துவதாக அவர் கூறினார்.அரசு தலைமை பதவியில் 23 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்
October 07th, 09:06 pm
அரசின் தலைமை பதவியில் தலைவராக 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு நமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.போலந்து தலைநகர் வார்சாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 21st, 11:45 pm
இந்த காட்சி உண்மையிலேயே அற்புதமானது. உங்கள் உற்சாகம் ஆச்சரியமாக இருக்கிறது. நான் இங்கு காலடி எடுத்து வைத்த கணத்திலிருந்து நீங்கள் உற்சாகமாக இருப்பதைப் பார்க்கிறேன். நீங்கள் அனைவரும் போலந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, வெவ்வேறு மொழிகள், பேச்சுவழக்குகள் மற்றும் உணவு வகைகளைக் கொண்டவர்களாக இங்கு வந்திருக்கிறீர்கள். ஆனால் ஒவ்வொருவரும் இந்தியத்தன்மை என்ற உணர்வால் இணைக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் எனக்கு ஒரு அற்புதமான வரவேற்பை அளித்துள்ளீர்கள். இந்த வரவேற்புக்காக உங்கள் அனைவருக்கும், போலந்து மக்களுக்கும் நான் நன்றி கூறிகிறேன்.PM Modi addresses Indian community in Warsaw, Poland
August 21st, 11:30 pm
Prime Minister Narendra Modi addressed the Indian Diaspora in Warsaw, Poland. The PM expressed that India's current global strategy emphasizes building strong international relationships and fostering peace. India’s approach has shifted to actively engaging with each nation. The focus is on enhancing global cooperation and leveraging India’s historical values of unity and compassion.