ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் பிரதமர் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்
August 24th, 01:08 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் குஜராத்திற்குச் செல்கிறார். ஆகஸ்ட் 25-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் அகமதாபாத்தில் உள்ள கோடல்தாம் மைதானத்தில் ₹5,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றவுள்ளார்.