'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) என்ற தீர்மானம் நிச்சயமாக நிறைவேறும்: பிரதமர் மோடி மன் கீ பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில்

December 28th, 11:30 am

ஆண்டின் இறுதி ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், 2025 ஆம் ஆண்டில், தேசிய பாதுகாப்பு, விளையாட்டு, அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் உலகளாவிய தளங்களில் இந்தியா தனது முத்திரையைப் பதித்ததாக பிரதமர் மோடி கூறினார். 2026 ஆம் ஆண்டில் புதிய தீர்மானங்களுடன் நாடு முன்னேறத் தயாராக உள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) இளம் தலைவர்கள் உரையாடல், வினாடி வினா போட்டி, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 மற்றும் ஃபிட் இந்தியா இயக்கம் போன்ற இளைஞர்களை மையமாகக் கொண்ட முயற்சிகளையும் பிரதமர் எடுத்துரைத்தார்.

Joint Statement on the visit of PM Modi to the Hashemite Kingdom of Jordan

December 16th, 03:56 pm

At the invitation of HM King Abdullah II, PM Modi visited Jordan on December 15-16, 2025. Both the leaders positively assessed the multi-faceted India-Jordan relations that span across various areas of cooperation including political, economic, defence, security, culture and education among others. They also appreciated the excellent cooperation between the two sides at the bilateral level and in multilateral forums.

ஆசியைக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் பாராட்டு

September 29th, 12:30 am

பிரதமர் திரு நரேந்திர மோடி ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மகத்தான வெற்றி பெற்றுள்ள இந்திய கிரிக்கட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

துபாய் பட்டத்து இளவரசரை பிரதமர் வரவேற்றார்

April 08th, 05:21 pm

துபாய் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சருமான திரு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வரவேற்றார்.

முத்ரா திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்

April 08th, 01:03 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லி எண் 7, லோக் கல்யாண் மார்கில் உள்ள தமது இல்லத்தில் பிரதமரின் முத்ரா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுடன் இன்று கலந்துரையாடினார். விருந்தினர்களை வரவேற்பதன் கலாச்சார முக்கியத்துவத்தையும், அவர்களின் இருப்பு ஒரு வீட்டிற்கு கொண்டு வரும் புனிதத்தையும் வலியுறுத்தி, கலந்து கொண்ட அனைவருக்கும் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். பங்கேற்பாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார். செல்லப்பிராணிகளுக்கான பொருட்கள், மருந்துகள் மற்றும் சேவைகள் வழங்குவதில் தொழில்முனைவோராக மாறிய பயனாளி ஒருவருடன் கலந்துரையாடிய திரு மோடி, சவாலான காலங்களில் ஒருவரின் திறனில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கடன்களுக்கு ஒப்புதல் அளித்த வங்கி அதிகாரிகளை அழைத்து, கடன் காரணமாக ஏற்பட்ட முன்னேற்றத்தை விளக்குமாறு பயனாளியை அவர் கேட்டுக்கொண்டார். இத்தகைய நடவடிக்கைகள் அவர்களின் நம்பிக்கையை அங்கீகரிப்பது மட்டுமின்றி, பெரிய கனவு காணத் துணியும் தனிநபர்களை ஆதரிப்பதற்கான அவர்களின் முடிவில் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் திரு மோடி கூறினார். அவர்களின் ஆதரவின் பலன்களை நிரூபிப்பது, வளர்ச்சி மற்றும் வெற்றியை வளர்ப்பதில் அவர்களின் பங்களிப்பு குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி பெருமிதம் கொள்ளும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிரதமர், ஐக்கிய அரபு அமீரக பிரதமரை சந்தித்தார்

February 14th, 03:49 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 14 அன்று துபாயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபரும், பாதுகாப்பு அமைச்சரும், துபாய் ஆட்சியாளருமான திரு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை சந்தித்தார்.

துபாய் ஜெபல் அலியில் கட்டப்படவுள்ள பாரத் மார்ட்டுக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டப்பட்டது

February 14th, 03:48 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐக்கிய அரசு அமீரகத் துணை அதிபர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான திரு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் 2024 பிப்ரவரி 14 அன்று துபாயில் உள்ள ஜெபல் அலி சுதந்திர வர்த்தக மண்டலத்தில் பாரத் மார்ட்டுக்கு அடிக்கல் நாட்டினர்.

துபாயில் உலக அரசுகளின் உச்சி மாநாட்டின் இடையே மடகாஸ்கர் அதிபரை பிரதமர் சந்தித்துப் பேசினார்

February 14th, 02:55 pm

துபாயில் நடைபெறும் உலக அரசுகளின் உச்சிமாநாட்டிற்கு இடையே, மடகாஸ்கர் அதிபர் திரு ஆண்ட்ரி ரஜோலினாவை, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார். இரண்டு தலைவர்களுக்கு இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும்.

Today world needs govts that are inclusive, move ahead taking everyone along: PM Modi

February 14th, 02:30 pm

At the invitation of His Highness Sheikh Mohamed bin Rashid Al Maktoum, Vice President, Prime Minister, Defence Minister, and the Ruler of Dubai, Prime Minister Narendra Modi participated in the World Governments Summit in Dubai as Guest of Honour, on 14 February 2024. In his address, the Prime Minister shared his thoughts on the changing nature of governance. He highlighted India’s transformative reforms based on the mantra of Minimum Government, Maximum Governance”.

உலக அரசுகள் உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் பங்கேற்றார்

February 14th, 02:09 pm

ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான திரு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 14 அன்று துபாயில் நடைபெற்ற உலக அரசுகளின் உச்சி மாநாட்டில் கௌரவ விருந்தினராக பங்கேற்றார். எதிர்கால அரசுகளை வடிவமைத்தல் என்ற இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளில் அவர் சிறப்புரையாற்றினார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற உலக அரசுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்றார். இந்த முறை நடைபெற்ற உச்சி மாநாட்டில் 10 நாடுகளின் அதிபர்கள், 10 நாடுகளின் பிரதமர்கள் உட்பட 20 உலகத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

உஸ்பெகிஸ்தான் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

December 01st, 09:36 pm

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சர்வதேச பருவநிலை (சிஓபி-28) உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி 01 டிசம்பர் 2023 அன்று உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவை சந்தித்தார்.

ஸ்வீடன் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

December 01st, 08:32 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்வீடன் பிரதமர் திரு. உல்ஃப் கிறிஸ்டர்சனுடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார். 2023, 1 டிசம்பர் அன்று, துபாயில் நடந்த சிஓபி 28 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

சர்வதேச பருவநிலை உச்சிமாநாட்டின்போது (சிஓபி-28) இந்தியாவும் ஸ்வீடனும் இணைந்து தொழில் துறை மாற்றத்திற்கான தலைமைத்துவக் குழுவின் இரண்டாம் கட்ட செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன

December 01st, 08:29 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் திரு உல்ஃப் கிறிஸ்டர்சன் ஆகியோர் 2024-26-ம் ஆண்டிற்கான தொழில்துறை மாற்றத்திற்கான தலைமைத்துவக் குழுவின் (லீட் ஐடி 2.0 - LeadIT 2.0) இரண்டாம் கட்ட செயல்பாடுகளை துபாயில் சர்வதேசப் பருவநிலை உச்சி மாநாட்டின்போது (சிஓபி -28) தொடங்கி வைத்தனர்.

'காலநிலை நிதியை மாற்றியமைத்தல்' தொடர்பான சி.ஓ.பி-28 தலைமைத்துவ அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

December 01st, 08:06 pm

ஜி20 மாநாட்டின் கீழ், நிலையான வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய இரண்டு தலைப்புகளுக்கு இந்தியா அதிக முன்னுரிமை அளித்துள்ளது.

சுவிஸ் கூட்டமைப்பு தலைவருடன் பிரதமர் சந்திப்பு

December 01st, 08:01 pm

இந்த சந்திப்பின் போது, இரு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் மக்களுடனான உறவுகள் உள்ளிட்ட தங்கள் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர்.

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் சந்திப்பு

December 01st, 07:55 pm

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சிஓபி-28 உச்சி மாநாட்டின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை 01 டிசம்பர் 2023 அன்று சந்தித்தார்.

LEAD-IT is a robust initiative for Earth's secured future: PM Modi

December 01st, 07:29 pm

Addressing the Leadership Group for Industry Transition (LEAD-IT) at COP 28, PM Modi stated that Leadership Group for Industry Transition is a robust initiative for Earth's secured future. He added that LEAD-IT initiative emboldens global low-carbon technologies and speeds up innovation. He said that the initiative will also enable the creation of energy transition roadmaps and knowledge sharing among countries.

சிஓபி-28-ல் 'பசுமைக் கடன்கள் திட்டம்' குறித்த உயர்நிலை நிகழ்வில் பிரதமர் உரையின் தமிழாக்கம்

December 01st, 07:22 pm

எனது சகோதரரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருமான ஷேக் முகமது பின் சயீத் அவர்களின் ஆதரவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐநா பொதுச் செயலாளருடன் பிரதமர் சந்திப்பு

December 01st, 06:45 pm

துபாயில் நடைபெற்ற ஐநா பருவநிலை (சிஓபி 28) உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி ஐநா சபையின் பொதுச் செயலாளர் திரு அந்தோனியோ குட்டரெஸ்சை இன்று (2023, டிசம்பர் 01) சந்தித்தார்.

இஸ்ரேல் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

December 01st, 06:44 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (2023 டிசம்பர் 1) துபாயில் நடைபெற்ற ஐநா பருவ நிலை (சிஓபி 28) உச்சிமாநாட்டின்போது இஸ்ரேல் நாட்டின் அதிபர் திரு ஐசக் ஹெர்சாக்-ஐ சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.