பூடானில், பிரதமரின் பயணத்தையடுத்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை

November 12th, 10:00 am

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் அழைப்பின் பேரில் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரு நாட்களில் பூடானில் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் போது 2025 நவம்பர் 11 அன்று சாங்லிமிதாங்கில் நடைபெற்ற 4-ம் மன்னரின் பிறந்ததின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் திரு மோடி கலந்து கொண்டார். திம்புவில் நடைபெற்ற உலகளாவிய அமைதி பிரார்த்தனை திருவிழாவிலும் அவர் கலந்து கொண்டார். இத்திருவிழாவின் போது பொதுமக்களின் வழிபாட்டுக்காக திம்புவில், இந்தியாவிலிருந்து பகவான் புத்தரின் புனித பிப்ரவா நினைவுச் சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளதற்காக பூடான் மன்னர் பாராட்டுத் தெரிவித்தார்.

பூட்டான் மன்னருடன் பிரதமர் சந்திப்பு

November 11th, 06:14 pm

இரு நாடுகளுக்கும் இடையே நட்பு மற்றும் ஒத்துழைப்பின் நெருங்கிய உறவுகளை வடிவமைப்பதில் அடுத்தடுத்து வந்த மன்னர்கள் முன்வைத்த வழிகாட்டும் தொலைநோக்குப் பார்வைக்கு பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். பூட்டானின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசு அளித்த விலைமதிப்பற்ற ஆதரவிற்கு மன்னர் நன்றி தெரிவித்தார்.

புத்தாண்டு தினத்தையொட்டி பிரதமர் தொலைபேசியில் வாழ்த்து

January 01st, 05:38 pm

புத்தாண்டு தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.01.2020), பூடான் மன்னர் திரு ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சுக், பிரதமர் திரு லியோன்சென் லோடேஷெரிங், இலங்கை அதிபர் திரு கோத்தபய ராஜபக்சே, பிரதமர் திரு மஹிந்த ராஜபக்சே, மாலத்தீவு அதிபர் திரு இப்ராஹிம் முகமது சோலிஹ், பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா மற்றும் நேபாள பிரதமர் திரு கே பி ஷர்மா ஒலி ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.