பிரதமர் நரேந்திர மோடி நமீபியாவின் அதிபரைச் சந்தித்தார்
July 09th, 07:55 pm
நமீபியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று விண்ட்ஹோக்கில் உள்ள அரசு மாளிகையில் நமீபிய அதிபர் மாண்புமிகு டாக்டர் நெடும்போ நந்தி-நதைத்வாவைச் சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்த பிரதமரை, அதிபர் நந்தி-நதைத்வா அன்புடன் வரவேற்று, சம்பிரதாய முறையில் வரவேற்பு அளித்தார். பிரதமர் அளவில் இந்தியாவிலிருந்து நமீபியாவிற்கான இந்தப் பயணம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளபட்ட பயணம் ஆகும். இந்த ஆண்டு மார்ச் மாதம் பதவியேற்ற பிறகு, அதிபர் நந்தி-நதைத்வா நடத்திய முதல் இருதரப்பு அரசு முறை சந்திப்பும் இதுவாகும்.ஹீரோஸ் ஏக்கர் நினைவிடத்தில் நமீபியாவின் நிறுவனர் தந்தையும் முதல் அதிபருமான டாக்டர் சாம் நுஜோமாவுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
July 09th, 07:42 pm
ஹீரோஸ் ஏக்கர் நினைவிடத்தில் நமீபியாவின் நிறுவனர் தந்தையும் முதல் அதிபருமான டாக்டர் சாம் நுஜோமாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.