அக்ராவில் உள்ள நக்ருமா நினைவுப் பூங்காவில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

July 03rd, 03:50 pm

கானா அக்ராவில் உள்ள நக்ருமா நினைவுப் பூங்காவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி சென்று, கானாவின் நிறுவனத் தலைவரும் ஆப்பிரிக்க சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் தலைவருமான டாக்டர் குவாமே நக்ருமாவுக்கு அஞ்சலி செலுத்தினார். கானா துணை அதிபர் பேராசிரியர் நானா ஜேன் ஓபோகு - அக்யேமாங்கும் பிரதமருடன் சென்றார். சுதந்திரம், ஒற்றுமை, சமூக நீதி ஆகியவற்றுக்கு டாக்டர் நக்ருமாவின் நீடித்த பங்களிப்புகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரதமர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.