அமெரிக்கா சுதந்திரம் அடைந்ததன் 250-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அமெரிக்க அதிபருக்குப் பிரதமர் வாழ்த்து
July 04th, 09:40 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க நாட்டின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் டிரம்ப்புக்கும், அமெரிக்க மக்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பின் நீடித்த வலிமையை திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான உறவானது ஒரு உத்திசார் ஒத்துழைப்புக்கு அப்பாற்பட்டது என்றும், அது ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மக்களின் எல்லையற்ற ஆற்றல் ஆகிய பகிரப்பட்ட விழுமியங்களில் வேரூன்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.ஏவியன் நகரில் ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர், அமெரிக்க அதிபரை சந்தித்தார்
June 18th, 05:04 am
பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் ஜெ ட்ரம்பை 2026 ஜூன் 17 அன்று சந்தித்தார்.உலகத் தலைவர்கள், குடிமக்கள் ஆகியோரின் வாழ்த்துகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
June 10th, 11:50 pm
The Prime Minister expressed his profound gratitude to world leaders and people from all walks of life for their warm wishes and congratulatory messages. Deeply touched by the greetings, he stated that it is a privilege to serve Bharat and contribute to the nation's development journey. Emphasizing that the trust of the people is his greatest source of strength, the Prime Minister reaffirmed his full commitment to working with even greater dedication to realize the vision of a Viksit Bharat, fulfill the aspirations of 140 crore Indians, and further strengthen India's global partnerships.அமைதி முயற்சிகளுக்கு இந்தியாவின் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும், மோதல்களுக்கு அமைதியான தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்
May 23rd, 04:20 pm
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் திரு மார்கோ ரூபியோ, பிரதமர் திரு. நரேந்திர மோடியை புது தில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.PM Modi receives call from US President Trump, reviews bilateral ties and discusses West Asia and Strait of Hormuz
April 14th, 10:12 pm
PM Modi received a call from US President Donald Trump. The two leaders reviewed the progress achieved in bilateral cooperation and reaffirmed their commitment to further strengthening the Comprehensive Global Strategic Partnership. They also discussed the situation in West Asia and the Strait of Hormuz.Prime Minister receives telephonic call from US President on West Asia situation
March 24th, 08:48 pm
PM Modi received a call from US President Donald Trump. The two leaders had a useful exchange of views on the evolving situation in West Asia. The PM reiterated that India supports de-escalation and underlined the importance of ensuring that the Strait of Hormuz remains open. Both leaders agreed to remain in touch regarding ongoing efforts to promote peace and stability in the region.Prime Minister speaks to President Trump
February 02nd, 11:15 pm
PM Modi spoke to President Trump and thanked the President, on behalf of the 1.4 billion people of India, for the announcement of reducing tariffs on Indian products to 18%. The PM highlighted that when two large economies and the world’s largest democracies work together, it benefits our people and unlocks immense opportunities. Lauding President Trump’s efforts for global peace, the PM reiterated India’s full support for his peace efforts.Prime Minister speaks with President of USA
December 11th, 08:50 pm
In a telephone conversation, PM Modi and US President Donald Trump reviewed the progress in India–U.S. bilateral relations and exchanged views on key regional and global developments. They reiterated that India and the US will continue to work closely together to advance global peace, stability, and prosperity.தீபாவளி வாழ்த்துகளுக்காக அமெரிக்க அதிபர் திரு டொனால்டு ட்ரம்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர், பகிரப்பட்ட ஜனநாயக சிந்தனைகள் மற்றும் உலகளாவிய அமைதிக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்
October 22nd, 08:25 am
விளக்குகளின் திருவிழாவைக் குறிக்கும் தருணத்தில் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து அன்பான தீபாவளி வாழ்த்து தெரிவித்ததற்காக அமெரிக்க அதிபர் திரு டொனால்டு ட்ரம்புக்கு தமது மனமார்ந்த பாராட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிணைக் கைதிகளின் விடுதலையை பிரதமர் வரவேற்றிருக்கிறார்; பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அதிபர் திரு டிரம்பின் போற்றத்தக்க முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்
October 13th, 07:59 pm
இரண்டு வருடங்களுக்குப் பிறகு அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர்களின் விடுதலை, அவர்களது குடும்பத்தினரின் துணிச்சல், அதிபர் திரு டொனால்ட் டிரம்பின் அமைதிக்கான முயற்சிகள் மற்றும் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவின் உறுதிபாட்டிற்குக் கிடைத்துள்ள மரியாதை என்று அவர் கூறினார்.காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றிக்காக அதிபர் திரு டிரம்புக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
October 09th, 09:31 pm
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றி குறித்து அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் டிரம்ப் உடன் உரையாடிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.அமெரிக்க அதிபர் திரு டிரம்பின் முதற்கட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்பு
October 09th, 09:55 am
பிரதமர் திரு நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் திரு டிரம்பின் முதற்கட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.காசாவில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டிரம்பின் தலைமைத்துவ முன்னெடுப்புக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்பு
October 04th, 07:58 am
காசாவில் அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமைத்துவ முன்முயற்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வரவேற்றுள்ளார். பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான அறிகுறிகள், தற்போது நடைபெற்று வரும் மனிதாபிமான மற்றும் இராஜதந்திர முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.காசா மோதலில் அதிபர் டிரம்பின் அமைதி முன் முயற்சிக்கு பிரதமர் வரவேற்பு
September 30th, 09:19 am
காசா மோதலை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டொனால்டு ஜே டிரம்பின் விரிவான திட்டம் குறித்த அறிவிப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.தமது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் திரு டிரம்பிற்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
September 16th, 11:30 pm
தமது 75-வது பிறந்தநாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் திரு டிரம்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். “இந்திய-அமெரிக்க விரிவான மற்றும் உலகளாவிய கூட்டுமுயற்சியை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல உங்களைப் போலவே நானும் மிகவும் தீவிரமாக இருக்கிறேன். உக்ரைன் மோதலில் அமைதி வழியில் தீர்வு ஏற்படுவதை நோக்கிய உங்களது முன்முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்”, என்று திரு மோடி குறிப்பிட்டார்.பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அதிபர் திரு டிரம்ப் பிறந்த தின வாழ்த்து தெரிவித்துள்ளார்
September 16th, 10:13 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியுடன், அமெரிக்க அதிபர் திரு டொனால்டு ஜே டிரம்ப் தொலைபேசி வாயிலாக உரையாடினார். பிரதமர் மோடியின் 75-வது பிறந்த தினத்தையொட்டி அதிபர் திரு டிரம்ப் தமது வாழ்த்துகளை தெரிவித்தார்.இந்தியா-அமெரிக்கா இரு நாடுகளிடையேயான நல்லுறவு மேலும் வலுவடையும்: பிரதமர் நம்பிக்கை
September 10th, 07:52 am
இந்தியா-அமெரிக்கா நாடுகளிடையேயான நல்லுறவு இன்னும் வலுவடையும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையளிப்பதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இவ்விரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தை வழங்கும் வகையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும் என்று திரு மோடி கூறினார்.அதிபர் டிரம்பின் உணர்வுகளை மனதாரப் பாராட்டுகிறேன், முழுமையாக வரவேற்கிறேன்: பிரதமர்
September 06th, 10:27 am
இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்த அதிபர் டிரம்பின் உணர்வுகளையும் நேர்மறையான மதிப்பீட்டையும் மனதாரப் பாராட்டுகிறேன், முழுமையாக வரவேற்கிறேன் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் எதிர்கால நோக்குடைய விரிவான மற்றும் உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையைக் கொண்டுள்ளன என்று திரு மோடி கூறியுள்ளார்.பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா மேற்கெண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபரிடம் பிரதமர் தெளிவுபடுத்தினார்
June 18th, 12:32 pm
கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், மாநாட்டின் இடையே அமெரிக்கா திரும்பியதையடுத்து அந்நாட்டு அதிபரின் வேண்டுகோளின் பேரில் இருதலைவர்களும் தொலைபேசி வாயிலாக விவாதித்தனர். 35 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் திரு ட்ரம்ப் இரங்கல் தெரிவித்தார். மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவையும் தெரிவித்துக் கொண்டார். இந்தத் தீவிரவாத சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே தொலைபேசி வாயிலாக நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை உலகம் கடுமையாகக் கண்டிக்கிறது
April 24th, 03:29 pm
ஏப்ரல் 22, 2025 அன்று அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல், உலகத் தலைவர்களிடமிருந்து வலுவான ஒற்றுமை அலையை எழுப்பியுள்ளது. உலகளாவிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் பூமியின் கடைசி வரை துரத்தும் என்று சபதம் செய்தார்.