கிராண்ட்மாஸ்டரான திவ்யா தேஷ்முக்கிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

July 29th, 06:00 am

2025 FIDE மகளிர் உலகக் கோப்பையை வென்றது மட்டுமல்லாமல், கிராண்ட்மாஸ்டரான திவ்யா தேஷ்முக்கிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது சாதனை பலரை ஊக்குவிக்கும் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சதுரங்கம் மேலும் பிரபலமடைய பங்களிக்கும் என்று திரு. மோடி கூறினார்.

ஃபிடே மகளிர் உலக செஸ் சாம்பியன் 2025 போட்டியில் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்கிற்கு பிரதமர் வாழ்த்து

July 28th, 06:29 pm

ஃபிடே மகளிர் உலக செஸ் சாம்பியன் 2025 போட்டியில் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொனேரு ஹம்பியும், இப்போட்டி முழுவதும் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ள திரு மோடி, இரு வீராங்கனைகளின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லண்டனில் நடைபெறும் உலக குழு பிளிட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியின் அரையிறுதியில் அற்புதமான வெற்றியை ஈட்டியுள்ள திவ்யா தேஷ்முக்கை பிரதமர் பாராட்டியுள்ளார்

June 19th, 02:00 pm

லண்டனில் நடைபெறும் உலக குழு பிளிட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியின் அரையிறுதி இரண்டாவது சுற்றில் உலகின் முதல் நிலை வீரர் ஹூ இஃபானுக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள இந்திய செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக்கை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டியுள்ளார்.