பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களை மையமாகக் கொண்ட ரூ. 62,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு முன்முயற்சிகளை அக்டோபர் 4 அன்று தொடங்கி வைக்கிறார்
October 03rd, 03:54 pm
இளைஞர்களை மையமாகக் கொண்ட ரூ.62,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு முன்முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 4 அன்று காலை 11 மணிக்கு புதுதில்லி விஞ்ஞான் பவனில் தொடங்கிவைப்பார். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி ஏற்பாடு செய்யப்பட்ட நான்காவது தேசிய திறன் பட்டமளிப்பு விழாவில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் இருந்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த 46 பேர் பாராட்டப்படுவார்கள்.PM to Launch Bihar’s Mukhyamantri Mahila Rojgar Yojana on September 26
September 25th, 06:44 pm
Prime Minister Shri Narendra Modi will launch Bihar’s Mukhyamantri Mahila Rojgar Yojana on September 26 at 11 AM via video conferencing. During the programme, Prime Minister will also directly transfer Rs. 10,000 each into the bank accounts of 75 lakh women across Bihar, totaling Rs. 7,500 crore.பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையின் சிறப்பம்சங்கள்
August 15th, 03:52 pm
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தில்லி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். செங்கோட்டையில் 103 நிமிடங்கள் நீடித்த திரு நரேந்திர மோடியின் உரை, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான ஒரு செயல் திட்டத்தை வழங்குவதாக அமைந்தது. மிக நீண்ட மற்றும் தீர்க்கமான உரையாகும். பிரதமரின் உரை, தன்னம்பிக்கை, புதுமை, மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. மற்றவர்களைச் சார்ந்திருக்கும் ஒரு தேசத்திலிருந்து உலகளவில் நம்பிக்கையான, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய, பொருளாதார ரீதியாக மீள்தன்மை கொண்ட நாடாக மாறும் இந்தியாவின் பயணத்தை எடுத்துக்காட்டுகிறது.நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 15th, 07:00 am
இந்த மாபெரும் சுதந்திர தின விழா நமது நாட்டு மக்களின் 140 கோடி தீர்மானங்களின் கொண்டாட்டமாகும். இந்த சுதந்திர தின விழா கூட்டு சாதனைகளின் தருணம், பெருமையின் தருணம். நமது இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளன. தேசம் தொடர்ந்து ஒற்றுமையின் உணர்வை வலுப்படுத்தி வருகிறது. இன்று, 140 கோடி இந்தியர்கள் மூவண்ணக் கொடியின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளனர். பாலைவனங்கள், இமயமலைச் சிகரங்கள், கடற்கரைகள், அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. எல்லா இடங்களிலும் ஒரே எதிரொலி, ஒரே ஆரவாரம். நம் தாய்நாட்டின் புகழ், உயிரை விட நமக்கு மிகவும் மேலானது.டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற 79வது சுதந்திர தினத்தின் காட்சிகள்
August 15th, 06:45 am
79வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் மோடி தனது உரையில், அரசியலமைப்பு சபை, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 2047க்குள் ஒரு விக்ஸித் பாரதத்தை (வளர்ந்த இந்தியா) அடைவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய முயற்சிகளான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஸ்கர் யோஜனா, தேசிய விளையாட்டுக் கொள்கை மற்றும் சுதர்ஷன் சக்ரா மிஷன் ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார்.வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
July 01st, 03:04 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, உற்பத்தித் துறையில் சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதை ஆதரிப்பதற்கும், வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான திறன்கள் மற்றும் சமூக பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், முதல் முறையாகப் பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஒரு மாத ஊதியம் (ரூ.15,000/- வரை) கிடைக்கும் அதே வேளையில், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக உரிமையாளர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். உற்பத்தித் துறைக்கு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட சலுகைகளும் வழங்கப்படும். 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்கும் பிரதமரின் ஐந்து திட்டங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாக 2024-25 மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டது, இதன் மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2 லட்சம் கோடி ஆகும்.டிவி9 உச்சிமாநாடு 2025-ல் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
March 28th, 08:00 pm
டிவி 9 நெட்வொர்க் பரந்த பிராந்திய பார்வையாளர்களைக் கொண்டுள்ளது, இப்போது, உலகளாவிய பார்வையாளர்களும் உருவாகி வருகின்றனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் பலரும் இந்த உச்சிமாநாட்டுடன் நேரடியாக இணைந்திருக்கிறார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து கையசைப்பதைக் கூட என்னால் பார்க்க முடிகிறது. அவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த பல நேயர்களையும் அதே உற்சாகத்துடன் கீழே உள்ள திரையில் பார்க்க முடிகிறது. அவர்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.டிவி 9 உச்சிமாநாடு 2025 இல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
March 28th, 06:53 pm
புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற டிவி 9 உச்சிமாநாடு 2025-இல் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், டிவி9 இன் ஒட்டுமொத்த குழுவினருக்கும் அதன் நேயர்களுக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். டிவி9 பரந்த பிராந்திய பார்வையாளர்களைக் கொண்டுள்ளது என்று கூறிய அவர், இப்போது உலகளாவிய பார்வையாளர்களும் உருவாகி வருகின்றனர் என்றார். இந்த நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் இணைந்த இந்திய வம்சாவளியினரை அவர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.குஜராத் மாநிலம் நவ்சாரியில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
March 08th, 11:50 am
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே; நவ்சாரி நாடாளுமன்ற உறுப்பினரும், எனது அமைச்சரவை சகாவுமான மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல்; மதிப்பிற்குரிய ஊராட்சி உறுப்பினர்கள்; மேடையில் இருக்கும் லட்சாதிபதி சகோதரிகள்; பிற மக்கள் பிரதிநிதிகள்; பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும், குறிப்பாக எனது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் – உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்!குஜராத் மாநிலம் நவ்சாரியில் வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
March 08th, 11:45 am
குஜராத் மாநிலம் நவ்சாரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.03.2025)தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெரும் எண்ணிக்கையில் வந்திருந்த தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் அன்பு, பாசம், ஆசீர்வாதங்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். மகளிர் தினமான இந்தச் சிறப்பு நாளில் நாட்டின் அனைத்து பெண்களுக்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மகா கும்பமேளாவில் கங்கை அன்னையின் ஆசீர்வாதம் தனக்கு கிடைத்தது என்றும், இன்று பெண் சக்தியின் மகா கும்பமேளாவில் தனக்கு ஆசீர்வாதம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். ஜி-சஃபல் (வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அந்தியோதயா குடும்பங்களுக்கான குஜராத் அரசின் திட்டம்), ஜி-மைத்ரி (கிராமப்புற மக்களின் வருமானத்தை அதிகரிப்பற்கான குஜராத் அரசின் திட்டம்) ஆகிய இரண்டு திட்டங்கள் குஜராத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளதைப் பிரதமர் எடுத்துரைத்தார். பல்வேறு திட்டங்களின் நிதி நேரடியாக பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அவர், இந்த சாதனைக்காக அனைவரையும் வாழ்த்தினார்.ரிபப்ளிக் தொடக்க உச்சிமாநாடு 2025-ல் பிரதமர் ஆற்றிய உரை
March 06th, 08:05 pm
நீங்கள் அனைவரும் சோர்வாக இருப்பீர்கள், அர்னாப்பின் உரத்த குரலைக் கேட்டு உங்கள் காதுகள் சோர்வடைந்திருக்கும், உட்காருங்கள் அர்னாப், இது இன்னும் தேர்தல் காலம் அல்ல. முதலாவதாக, இந்த புதுமையான பரிசோதனைக்காக ரிபப்ளிக் தொலைக்காட்சியை நான் பாராட்டுகிறேன். அடிமட்ட அளவில் இளைஞர்களை ஈடுபடுத்தி, இவ்வளவு பெரிய போட்டியை ஏற்பாடு செய்ததன் மூலம் நீங்கள் அவர்களை இங்கு அழைத்து வந்துள்ளீர்கள். நாட்டின் இளைஞர்கள் தேசிய விவாதத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் போது, சிந்தனைகளில் புதுமை ஏற்படுகிறது. அது ஒட்டுமொத்த சூழலுக்கும் ஒரு புதிய சக்தியை நிரப்புகிறது. இந்த நேரத்தில் நாம் இங்கே அந்த சக்தியை உணர்கிறோம். அடைய முடியாத இலக்கு என்று எதுவுமே இல்லை. இந்த உச்சிமாநாட்டிற்காக ரிபப்ளிக் தொலைக்காட்சி ஒரு புதிய கருத்தை உருவாக்கியுள்ளது. இந்த உச்சிமாநாட்டின் வெற்றிக்காக உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். சரி, எனக்கும் இதில் கொஞ்சம் சுயநலம் இருக்கிறது. ஒன்று, கடந்த சில நாட்களாக நான் ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்து வருகிறேன். ஒரு லட்சம் பேர் தங்கள் குடும்பங்களில் முதல் முறையாக வருபவர்கள், எனவே ஒரு வகையில், இதுபோன்ற நிகழ்வுகள் எனது இந்த நோக்கத்திற்கான அடித்தளத்தைத் தயார் செய்கின்றன.ரிபப்ளிக் உச்சிமாநாடு 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை
March 06th, 08:00 pm
புதுதில்லி பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற ரிபப்ளிக் உச்சி மாநாடு 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அவர், அடிமட்ட அளவில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க ஹேக்கத்தான் போட்டியை ஏற்பாடு செய்வதற்கும் புதுமையான அணுகுமுறையை ரிபப்ளிக் டிவி மேற்கொண்டதற்காகப் பாராட்டு தெரிவித்தார். நாட்டின் இளைஞர்கள் தேசிய விவாதத்தில் ஈடுபடும்போது, அது சிந்தனைகளுக்கு புதுமையைக் கொண்டு வருவதுடன், ஒட்டுமொத்த சூழலையும் தங்கள் சக்தியால் நிரப்புகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஆற்றல் உச்சிமாநாட்டில் உணரப்பட்டது என்று அவர் வலியுறுத்தினார். இளைஞர்களின் ஈடுபாடு அனைத்துத் தடைகளையும் உடைத்து, எல்லைகளைக் கடந்து செல்ல உதவுகிறது. ஒவ்வொரு இலக்கையும் அடையக்கூடியதாகவும் ஆக்குகிறது என்று அவர் மேலும் கூறினார். இந்த உச்சிமாநாட்டிற்காக ஒரு புதிய கருத்தை உருவாக்கியதற்காக ரிபப்ளிக் டிவிக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், அதன் வெற்றிக்கு தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். எந்த அரசியல் பின்னணியும் இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை இந்திய அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற தமது யோசனையை திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார்.Politics is about winning people's hearts, says PM Modi in podcast with Nikhil Kamath
January 10th, 02:15 pm
Prime Minister Narendra Modi engages in a deep and insightful conversation with entrepreneur and investor Nikhil Kamath. In this discussion, they explore India's remarkable growth journey, PM Modi's personal life story, the challenges he has faced, his successes and the crucial role of youth in shaping the future of politics."பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது முதலாவது போட்காஸ்டில், தொழில்முனைவோர் நிகில் காமத்துடன் தமது வாழ்க்கைப் பாடங்களையும் லட்சியங்களையும் பகிர்ந்துள்ளார்"
January 10th, 02:00 pm
தொழில்முனைவோர் நிகில் காமத் உடனான தனது முதலாவது போட்காஸ்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி தமது குழந்தைப் பருவம், கல்வி மற்றும் அரசியல் வாழ்க்கையை வடிவமைத்த ஆரம்ப அனுபவங்கள் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட போட்காஸ்ட், பிரதமரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. தமது ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்கள் எவ்வாறு தம்மிடம் செல்வாக்கு செலுத்தினார்கள் என்பதையும், இந்த அனுபவங்கள் தேசம் முதலில் என்ற சித்தாந்தத்திற்கும் அவரது அர்ப்பணிப்புக்கும் எவ்வாறு அடித்தளம் அமைத்தன என்பதையும் அவர் விவரித்தார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024- இன் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
December 09th, 11:00 am
ராஜஸ்தான் ஆளுநர் திரு ஹரிபாவ் பகடே அவர்களே, மாநில முதலமைச்சர் திரு பஜன்லால் ஜி சர்மா அவர்களே, ராஜஸ்தான் அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தொழில்துறை நண்பர்களே, பல்வேறு நாடுகளின் தூதர்களே, தூதரகப் பிரதிநிதிகளே, பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களேராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
December 09th, 10:34 am
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024 மற்றும் ராஜஸ்தான் உலகளாவிய வர்த்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், ராஜஸ்தானின் வெற்றிப் பயணத்தில் இன்று மற்றுமொரு சிறப்பான நாள் என்று குறிப்பிட்டதோடு ஜெய்ப்பூரில் உள்ள பிங்க் சிட்டியில் நடைபெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சி மாநாடு 2024-ல் பங்கேற்ற தொழில்துறை மற்றும் வர்த்தகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், பிரதிநிதிகளுக்கு வாழ்த்தும் தெரிவித்தார். இந்தப் பிரம்மாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக ராஜஸ்தான் அரசையும் அவர் பாராட்டினார்.இந்தியா-கரிகாம் 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்
November 21st, 02:15 am
எனது நண்பர்கள், அதிபர் இர்பான் அலி, பிரதமர் டிக்கோன் மிட்செல் ஆகியோருடன் இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கரிகாம் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன். குறிப்பாக, இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு
November 21st, 02:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல் ஆகியோர் 20 நவம்பர் 2024 அன்று ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற 2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கினர். இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக கயானா அதிபர் இர்பான் அலிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். முதலாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு, 2019-ல் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் கயானா அதிபர் மற்றும் கிரெனடா பிரதமர் ஆகியோரும் கலந்து கொண்டனர்:ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் ஆற்றிய உரை
November 16th, 10:15 am
100 ஆண்டுகளுக்கு முன்பு, இந்துஸ்தான் டைம்ஸ் வணக்கத்திற்குரிய பாபுவால் தொடங்கப்பட்டது . அவர் குஜராத்தி மொழி பேசுபவர். 100 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு குஜராத்தியை நீங்கள் அழைத்திருக்கிறீர்கள். நான், ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் கடந்த 100 ஆண்டுகளாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்துடன் தொடர்புடைய அனைவருக்கும், இதை வளர்ப்பதற்கு பங்களிப்பு செய்தவர்களுக்கும், போராடியவர்களுக்கும், சவால்களை எதிர்கொண்டவர்களுக்கும், உறுதியாக நின்றவர்களுக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் இன்று பாராட்டுக்கு உரியவர்கள், மரியாதைக்குரியவர்கள். 100 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்தது உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் அனைவரும் இந்த அங்கீகாரத்திற்கு தகுதியானவர்கள், எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 100 ஆண்டு பயணத்தை காண்பிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க கண்காட்சியைக் காண வாய்ப்பு கிடைத்தது. உங்களுக்கு நேரம் இருந்தால் புறப்படுவதற்கு முன்பு சிறிது நேரம் அங்கு செலவிடுமாறு உங்கள் அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன். இது வெறும் கண்காட்சி அல்ல, ஒரு அனுபவம். 100 வருட வரலாறு என் கண் முன்னே கடந்து போனது போல் உணர்ந்தேன். நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து, அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் முதல் செய்தித்தாள்களைப் பார்த்தேன். மார்ட்டின் லூதர் கிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற புகழ்பெற்றவர்கள் ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதி வந்தனர். அவர்களின் எழுத்துக்கள் செய்தித்தாளை மிகவும் வளப்படுத்தின. உண்மையிலேயே, நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். சுதந்திரத்திற்காக போராடுவது முதல் சுதந்திரத்திற்குப் பிறகு எல்லையற்ற நம்பிக்கையின் அலைகளில் சவாரி செய்வது வரை, இந்தப் பயணம் அசாதாரணமானது மற்றும் நம்பமுடியாதது. 1947 அக்டோபரில் காஷ்மீரை இணைத்த பிறகு ஒவ்வொரு குடிமகனும் அடைந்த உற்சாகத்தை உங்கள் பத்திரிகையில் நான் உணர்ந்தேன். ஏழு தசாப்தங்களாக காஷ்மீர் எவ்வாறு வன்முறையில் மூழ்கியிருந்தது, முடிவெடுக்க முடியாத தன்மை எவ்வாறு இருந்தது என்பதையும் அந்தத் தருணத்தில் நான் உணர்ந்தேன். இன்று உங்கள் செய்தித்தாள் ஜம்மு-காஷ்மீரில் சாதனை வாக்குப்பதிவு பற்றிய செய்திகளை வெளியிடுகிறது, இது கடந்த காலத்திலிருந்து கடுமையாக வேறுபடுகிறது.புதுதில்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 16th, 10:00 am
புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். 100 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் வரலாற்றுச் சிறப்புமிக்க 100 ஆண்டுகால பயணத்திற்காக மட்டுமல்லாமல், அது தொடங்கப்பட்டதிலிருந்து அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்து தெரிவித்தார். கண்காட்சி நடைபெறும் இடத்தில் நடைபெற்ற கண்காட்சியைப் பார்வையிட்ட திரு மோடி, இது ஒரு அனுபவம் என்று கூறினார். இந்தியா சுதந்திரம் பெற்று, அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தின் பழைய செய்தித்தாள்களை தாம் பார்த்ததாகவும் அவர் கூறினார். மார்ட்டின் லூதர் கிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற பல தலைவர்கள் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு கட்டுரைகள் எழுதியதை திரு மோடி சுட்டிக்காட்டினார். சுதந்திரப் போராட்டத்தைக் கண்ட நீண்ட பயணம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் நம்பிக்கையுடன் முன்னோக்கி நடைபெற்றது தனித்துவமானது மற்றும் ஆச்சரியமானது என்று அவர் கூறினார். 1947 அக்டோபரில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது குறித்த செய்தியைப் படிக்கும்போது மற்ற குடிமக்களைப் போலவே தாமும் அதே உற்சாகத்தை உணர்ந்ததாக பிரதமர் கூறினார். எவ்வாறாயினும், ஏழு தசாப்தங்களாக காஷ்மீரை எவ்வாறு முடிவெடுக்க முடியாத தன்மை வன்முறையில் மூழ்கடித்துள்ளது என்பதையும், அந்தத் தருணத்தில் உணர்ந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் இப்போதெல்லாம் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் அதிக அளவில் வாக்குப்பதிவு நடைபெற்ற செய்திகள் நாளிதழ்களில் வெளியாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திரு மோடி கூறினார். பிரபலமாக விளங்கும் மற்றொரு நாளிதழ், அதன் ஒரு பக்கத்தில் அசாம் கலவரப் பகுதி என்று அறிவிக்கப்பட்டதாகவும், மறுபுறம் அடல் ஜி பாரதிய ஜனதா கட்சிக்கு அடிக்கல் நாட்டினார் என்ற செய்தி வெளியிட்டதையும் திரு மோடி குறிப்பிட்டார். அசாமில் நிரந்தர அமைதியைக் கொண்டுவருவதில் இன்று பாஜக பெரும் பங்கு வகிக்கிறது என்பது ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வு என்று அவர் மேலும் கூறினார்.