Tribal pride has been an integral part of India's consciousness for thousands of years: PM Modi in Dediapada, Gujarat
November 15th, 03:15 pm
In his address at the Janjatiya Gaurav Diwas programme marking the 150th Birth Anniversary of Bhagwan Birsa Munda in Dediapada, PM Modi paid homage to him. Launching development projects worth over ₹9,700 crore, the PM said tribal pride has been an integral part of India’s consciousness for thousands of years. Highlighting that Vajpayee Ji’s government created a separate Tribal Affairs Ministry, he added that his government has significantly increased the ministry’s budget.குஜராத்தின் தெடியாபாடாவில் தர்த்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 15th, 03:00 pm
குஜராத்தின் தெடியாபாடாவில் இன்று நடைபெற்ற தர்த்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில், ரூ 9,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நர்மதாவின் புனித பூமி இன்று மற்றொரு வரலாற்று நிகழ்வைக் காண்கிறது என்று கூறிய திரு மோடி, அக்டோபர் 31 -ம் தேதி, சர்தார் படேலின் 150-வது பிறந்தநாளில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில் அதே இடத்தில் கொண்டாடப்பட்ட பாரத் விழா தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். இன்று பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளின் பிரமாண்டமான கொண்டாட்டத்துடன்,அந்த விழாவின் உச்சக்கட்டத்தை நாம் காண்கிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த மங்களகரமான சந்தர்ப்பத்தில் பகவான் பிர்சா முண்டாவுக்கு அவர் மரியாதை செலுத்தினார். குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் முழு பழங்குடிப் பகுதியிலும் சுதந்திர உணர்வை எழுப்பிய கோவிந்த் குருவின் ஆசீர்வாதங்களும் இந்த நிகழ்வோடு தொடர்புடையவை என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். சிறிது நேரத்திற்கு முன்பு தேவமோக்ரா அன்னை கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.பழங்குடியினர் கௌரவ தினத்தில் தேவமோக்ரா அன்னை கோவிலில் பிரதமர் பிரார்த்தனை செய்தார் - பகவான் பிர்சா முண்டாவின் 150 - வது பிறந்த தினத்தில், நாட்டின் நல்வாழ்விற்காக பிரார்த்தனை
November 15th, 02:58 pm
பகவான் பிர்சா முண்டாவின் 150 - வது பிறந்த தினம் மற்றும் பழங்குடியினர் கௌரவ தினம் ஆகியவற்றை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தேவமோக்ரா அன்னை கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி நாளை குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்திற்கு பிரதமர் பயணம்
November 14th, 11:41 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (15.11.2025) குஜராத் செல்கிறார். அம்மாநிலத்தில் நர்மதா மாவட்டத்தில் உள்ள தேவ்மோஹ்ரா கோவிலில் பிற்பகல் 12.45 மணி அளவில் நடைபெறும் பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்கிறார். இதன் பிறகு பிற்பகல் 2.45 மணிக்கு டெடியபாடாவிற்குச் செல்லும் பிரதமர், பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த தினத்தையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் அவர், 9,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் நிறைவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.