வேலைவாய்ப்புத் திருவிழாவின் கீழ் மத்திய அரசின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 61,000-க்கும் அதிகமானோருக்கு நியமனக் கடிதங்களை ஜனவரி 24 அன்று பிரதமர் வழங்கவுள்ளார்

January 23rd, 05:46 pm

18-வது வேலைவாய்ப்புத் திருவிழாவின் கீழ் மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 61,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்களை 2026 ஜனவரி 24 அன்று காலை 11 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்போர் இடையே அவர் உரையாற்றுவார்.