16வது நிதிக்குழுவின் தலைவர் டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, பிரதமருடன் சந்திப்பு
November 17th, 08:11 pm
16வது நிதிக்குழுவின் தலைவர் டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான பிரதிநிதிகள் குழு பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தது.இந்திய அரசுக்கும் பிலிப்பைன்ஸ் அரசுக்கும் இடையே ஓர் உத்திசார் கூட்டாண்மையை நிறுவுவது குறித்த பிரகடனம்
August 05th, 05:23 pm
இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பிலிப்பைன்ஸ் அதிபர் மேதகு திரு. ஃபெர்டினாண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியர், 2025 ஆகஸ்ட் 4 முதல் 8 வரை இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதிபர் திரு மார்கோஸுடன் முதல் பெண்மணி திருமதி லூயிஸ் அரனெட்டா மார்கோஸ் மற்றும் பிலிப்பைன்ஸின் அமைச்சர்கள் மற்றும் உயர் மட்ட வணிகக் குழு உள்ளிட்ட அலுவலர்கள் குழுவும் வந்துள்ளது.பிலிப்பைன்ஸ் அதிபரின் இந்திய வருகையால் ஏற்பட்டுள்ள பலன்கள்
August 05th, 04:31 pm
இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே உத்திசார் கூட்டாண்மையை ஏற்படுத்துவது குறித்த பிரகடனம்.பிலிப்பைன்ஸ் அதிபருடனான சந்திப்பு குறித்து பிரதமரின் கருத்துகள்
August 05th, 03:45 pm
இந்தியா வந்துள்ள தங்களுக்கும் தங்களது பிரதிநிதிகள் குழுவையும் நான் வரவேற்கிறேன். இன்று இருநாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகளைக் குறிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இது. இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையேயான உறவுகளை நாம் உத்திசார் கூட்டாண்மையாக மேம்படுத்த வேண்டும். பாதுகாப்புத் துறையில் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சரியான தருணம் இது. கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு மேம்பட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து இன்று நாம் எடுக்கும் முடிவு, மிகவும் வெற்றிகரமாக இருக்கும்.கொரியக் குடியரசு அதிபரின் சிறப்பு தூதர்கள் குழு பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு
July 17th, 06:40 pm
திரு கிம் பூ கியூம் தலைமையிலான கொரியக் குடியரசு அதிபரின் தூது குழுவினர், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர்.இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு
July 09th, 06:02 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் 4-வது கட்டமாக பிரேசில் தலைநகர் பிரசிலியா சென்றடைந்தார். அங்குள்ள அல்வோராடா அரண்மனையில் அந்நாட்டு அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை சந்தித்துப் பேசினார். முன்னதாக பிரதமர் திரு நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் திரு லூலா பாரம்பரிய முறைப்படி அன்புடன் வரவேற்றார்.பராகுவே அதிபருடனான பிரதிநிதிகள் நிலையிலான பேச்சு வார்த்தைகளின் போது பிரதமரின் தொடக்க உரை
June 02nd, 03:00 pm
இந்தியாவிற்கு உங்களையும் உங்கள் குழுவினரையும் நாங்கள் மிகவும் அன்புடன் வரவேற்கிறோம். தென் அமெரிக்காவில் பராகுவே ஒரு முக்கியமான கூட்டாளியாகும். நமது புவியியல் வேறுபட்டிருக்கலாம், ஆனால் நாம் ஒரே மாதிரியான ஜனநாயக விழுமியங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். மேலும் மக்களின் நல்வாழ்வில் அக்கறை கொள்கிறோம்.மின்சாரத் துறைக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்வதற்கான திருத்தப்பட்ட ஷக்தி கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்
May 07th, 12:07 pm
மத்திய/மாநில அரசுகளின் அனல்மின் திட்டங்கள், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு புதிதாக நிலக்கரி இணைப்புகளை வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.அங்கோலா அதிபருடனான கூட்டு ஊடக அறிக்கையின் போது பிரதமரின் உரை (மே 03, 2025)
May 03rd, 01:00 pm
இந்தியாவிற்கு அதிபர் லூரென்சோ மற்றும் அவரது குழுவை நான் அன்புடன் வரவேற்கிறேன். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம். 38 ஆண்டுகளுக்குப் பிறகு, அங்கோலா அதிபர் இந்தியாவுக்கு வருகை தருகிறார். அவரது வருகை இந்தியா-அங்கோலா உறவுகளுக்கு ஒரு புதிய திசையையும் உத்வேகத்தையும் தருவது மட்டுமல்லாமல், இந்தியா-ஆப்பிரிக்கா கூட்டாண்மையையும் வலுப்படுத்துகிறது.தாவூதி போரா சமூகத்தின் பிரதிநிதிக் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார்
April 17th, 08:05 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காலை லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்லத்தில் தாவூதி போரா சமூகத்தின் பிரதிநிதிக் குழுவினருடன் கலந்துரையாடினார்.இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து விவாதிக்க கெய்சாய் டோயுகாய் உயர்மட்டக் குழுவினருடன் பிரதமர் சந்திப்பு
March 27th, 08:17 pm
இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான கருத்துக்களையும் யோசனைகளையும் கேட்க, கெய்சாய் டோயுகையின் (ஜப்பான் நிறுவன நிர்வாகிகள் சங்கம்) தலைவர் திரு. தகேஷி நினாமி தலைமையில் கெய்சாய் டோயுகை மற்றும் 20 பிற வணிக பிரதிநிதிகளின் உயர் அதிகாரம் கொண்ட குழுவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காலை 7 லோக் கல்யாண் மார்க்கில் சந்தித்தார்.ஸ்பெயின் அதிபரின் இந்திய பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்தியா-ஸ்பெயின் கூட்டறிக்கை (அக்டோபர் 28-29, 2024)
October 28th, 06:32 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஸ்பெயின் அதிபர் திரு பெட்ரோ சான்செஸ் 2024 அக்டோபர் 28-29 ஆகிய நாட்களில் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அதிபர் திரு சான்சேஸ் இந்தியாவில் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். அவருடன் போக்குவரத்து, தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் வர்த்தக தூதுக்குழுவும் வருகை தந்துள்ளனர்.எஸ்சி/எஸ்டி எம்பிக்கள் குழுவுடன் பிரதமர் சந்திப்பு
August 09th, 01:58 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எஸ்சி/எஸ்டி எம்பிக்கள் குழுவை சந்தித்து, எஸ்சி/எஸ்டி சமுதாயத்தின் நலன் மற்றும் அதிகாரமளித்தலுக்காக பாடுபடுவது என்ற உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
February 08th, 01:00 pm
ஆச்சார்ய கௌடியா மிஷனின் வணக்கத்திற்குரிய பக்தி சுந்தர் சன்னியாசி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, மீனாட்சி லேகி அவர்களே, நாடு முழுவதிலுமிருந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள பகவான் கிருஷ்ண பக்தர்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தாய்மார்களே!ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
February 08th, 12:30 pm
தில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ஆச்சார்ய ஸ்ரீல பிரபுபாதரின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய பிரதமர், அவரது நினைவாக நினைவுத் தபால் தலையையும், நாணயத்தையும் வெளியிட்டார். கௌடியா மடத்தின் நிறுவனர், ஆச்சார்யா ஸ்ரீல பிரபுபாதர் வைணவ நம்பிக்கையின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.மாலத்தீவு அதிபரின் இந்திய பயணத்தை முன்னிட்டு இந்திய- மாலத்தீவு கூட்டறிக்கை
August 02nd, 10:18 pm
இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று மாலத்தீவு அதிபர் மேதகு திரு இப்ராஹிம் முகமது சோலே அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 2018- ஆம் ஆண்டு அதிபராகப் பொறுப்பேற்ற பின் திரு சோலே இந்தியாவிற்கு வருவது இது மூன்றாவது முறை. மாலத்தீவின் நிதி அமைச்சர் மேதகு திரு இப்ராஹிம் அமீர், பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சர் மேதகு திரு ஃபயஸ் இஸ்மாயில், பாலினம், குடும்ப நலன் மற்றும் சமூக சேவைகள் துறை அமைச்சர் மேதகு திரு ஐஷாத் முகமது திதி மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் அடங்கிய உயர்நிலை குழுவினர் அதிபருடன் வந்துள்ளனர். இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்த அதிபர் திரு சோலே, இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.மேற்கு வங்கத்தின் சிடால் குச்சியில் வேன் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்
August 02nd, 12:30 pm
மேற்கு வங்கத்தின் சிடால்குச்சியில் வேன் மீது மின்சாரம் தாக்கியதில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்PM meets Afghanistan Sikh-Hindu Delegation
February 19th, 02:55 pm
Prime Minister Narendra Modi met members of the Sikh-Hindu Delegation from Afghanistan at 7 Lok Kalyan Marg. They honoured the Prime Minister and thanked him for bringing Sikhs and Hindus safely to India from Afghanistan. The Prime Minister welcomed the delegation and said that they are not guests but are in their own house, adding that India is their home.ஜம்மு காஷ்மீரின் அப்னி கட்சியின் 24 பேர் கொண்ட குழுவைப் பிரதமர் சந்தித்தார்
March 14th, 08:35 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் திரு அல்தாப் புகாரி தலைமையிலான ஜம்மு காஷ்மீரின் அப்னி கட்சியைச் சேர்ந்த 24 பேர் கொண்ட குழுவைச் சந்தித்தார்.அமெரிக்க அதிபர் டொனால்டு ஜெ ட்ரம்பின் அரசுமுறைப் பயணத்தின் போது ஏற்பட்ட ஒப்பந்தங்கள்
February 25th, 03:39 pm
அமெரிக்க அதிபர் டொனால்டு ஜெ ட்ரம்பின் அரசுமுறைப் பயணத்தின் போது ஏற்பட்ட ஒப்பந்தங்கள்