We are working with a spirit of service for the welfare of all sections of society: PM Modi in Banswara, Rajasthan

September 25th, 02:32 pm

PM Modi inaugurated and laid the foundation stone for development projects worth over ₹1,22,100 cr in Banswara, Rajasthan. “India is moving fast towards becoming a developed nation, with Rajasthan playing a key role,” he said. Further the PM highlighted energy and tribal welfare initiatives, including new solar projects under PM Surya Ghar and PM-KUSUM. PM Modi also emphasised youth employment and urged citizens to embrace Swadeshi.

ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் 1,22,100 கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

September 25th, 02:30 pm

ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் 1,22,100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (25.09.2025) தொடங்கி வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அன்னை திரிபுர சுந்தரியின் புனித பூமிக்குச் செல்ல கிடைத்த வாய்ப்பை ஒரு பாக்கியமாகக் கருதுவதாகத் பிரதமர் கூறினார். பக்தி மற்றும் வீரம் நிறைந்த இந்த பூமியிலிருந்து, மஹாராணா பிரதாப் மற்றும் ராஜா பன்சியா பிலுக்கு மரியாதை செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவு நாளையொட்டி அவருக்கு, பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

February 11th, 01:45 pm

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவு நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்கள் இந்தியாவின் சேவைக்காக தன்னை அர்ப்பணித்த தொலைநோக்கு சிந்தனையாளர். சமுதாயத்தில் கடைக்கோடி நபரையும் மேம்படுத்தும் அவரது தத்துவம் வலுவான நாட்டை நோக்கிய நமது பயணத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

கங்கை ஆற்றின் குறுக்கே புதிய ரயில் மற்றும் சாலைப் பாலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

October 16th, 03:18 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுமார் ரூ.2,642 கோடி மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. முன்மொழியப்பட்ட இந்தத் திட்டம் போக்குவரத்தை எளிதாக்குவதுடன், நெரிசலைக் குறைக்கும், இது இந்திய ரயில்வேயின் பரபரப்பான பிரிவுகளில் மிகவும் தேவையான உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்கும். இந்தத் திட்டம் உத்தரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் சந்தெளலி மாவட்டங்கள் வழியாக செல்கிறது.